வருமான வரி நோட்டீஸ்

வருமான வரி நோட்டீஸ்

வருமான வரித் துறையிடமிருந்து வீட்டுக்கு நோட்டீஸ் வந்தாலே பெரும்பாலானோர் அச்சம் கொள்வார்கள். ஒருவேளை உங்கள் வீட்டுக்கு வருமான வரித் துறையிடமிருந்து நோட்டீஸ் வந்தால் என்ன செய்வது? ஏதேனும் ஆபத்து உள்ளதா? உண்மை நிலவரம் என்ன? அது குறித்த சந்தேகங்களை இங்கே தெரிந்துகொள்ளலாம்.

திடீரென்று வருமான வரித் துறையிடமிருந்து வீட்டுக்கு நோட்டீஸ் வந்தால் நிறையப் பேருக்கு பீதி ஏற்படும். உண்மையில் அப்படிப் பயப்படத் தேவையில்லை. வருமான வரித்துறை பல்வேறு காரணங்களுக்காக உங்களுக்கு நோட்டீஸ் அனுப்பலாம். ஆனால் அதுகுறித்து புரிதல் இல்லாமல் மக்களில் பலர் இதைப் பற்றி கவலைப்படுகிறார்கள். வருமான வரியை சரியான நேரத்தில் தாக்கல் செய்யாதது, கணக்கீடு பிழைகள், வருமானத்தை சரியாகத் தெரிவிக்காதது அல்லது அதிக ரீஃபண்ட் கோருவது போன்ற பல்வேறு காரணங்களுக்காக உங்களுக்கு நோட்டீஸ் வரலாம்.

எதற்காக நோட்டீஸ் வருகிறது?


பொதுவாக, வருமான வரி செலுத்துவதற்கான காலக்கெடுவுக்குள் நீங்கள் தாக்கல் செய்யவில்லையென்றால் அப்போது வருமான வரித் துறையிடமிருந்து தானாகவே உங்களுக்கு நோட்டீஸ் வரும். வருவாய் செலுத்த வேண்டிய மதிப்பீட்டு ஆண்டின் இறுதிக்குள் இந்த நோட்டீஸ் உங்களிடம் வந்து சேரும். மற்ற காரணம் என்னவென்றால் உங்களது வரித் தாக்கலில் வருமான விவரங்கள் பொருந்தவில்லை என்றால் அப்போது பிரச்சினை ஏற்படும்.

இதற்காகவும் நோட்டீஸ் வரலாம்!

வரி செலுத்துவோர் வழங்கிய தகவல்களைச் சரிபார்த்து வருமான வரித் துறையுடன் உறுதிப்படுத்த வேண்டும். நீங்கள் வருமான வரி வலைத்தளத்திலும் பதிலளிக்க வேண்டும். இதுபோன்ற சூழலில் பொதுவாக பிரச்சினை எழுந்த 30 நாட்களுக்குள் நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் பதில் தாக்கல் செய்யப்பட வேண்டும். நீங்கள் ரீஃபண்ட் தொகைக்கு விண்ணப்பிக்கும்போதும் உங்களுக்கு அதுகுறித்த தகவல் நோட்டீஸாக அனுப்பப்படும்.

என்ன செய்ய வேண்டும்?

உங்களது வரித் தாக்கலில் மாற்றங்கள் ஏதேனும் இருந்தால் திருத்தப்பட்ட வருமானம் தாக்கல் செய்யப்படும் என்று வருமான வரித் துறைக்கு நீங்கள் உறுதிப்படுத்த வேண்டும். அதன்பின்னர் வருமான வரித் துறை தாக்கல் செய்யப்பட்ட அனைத்து விவரங்களையும் ஆரம்ப கட்ட மதிப்பீட்டை மேற்கொண்டு அதன் முடிவை வரி செலுத்துவோருக்குத் தெரிவிக்கும். இந்த மதிப்பீட்டில் முதன்மையாக வரி கணக்கீடு சரிபார்ப்பு, வரி செலுத்துதல், எண்கணித பிழைகள் திருத்தம் மற்றும் முரண்பாடுகள் போன்றவையும் அடங்கும்.


Share Tweet Send
0 Comments
Loading...