வரலாற்றில் இன்று மே 8 ..

வரலாற்றில் இன்று மே 8 ..

நிகழ்வுகள்  

1912 – பாரமவுண்ட் பிக்சர்ஸ் நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது.

1921 – உருமேனியாவில் பொதுவுடமைக் கட்சி ஆரம்பிக்கப்பட்டது.

1927 – பாரிசில் இருந்து நியூ யார்க் வரை வானூர்தியில் முதல்தடவையாக இடைத்தங்கல் எதுவுமின்றி பறந்து சாதனை படைக்க முயன்ற பிரான்சியப் போர் வீரர்கள் சார்லசு நுங்கெசர், பிரான்சுவா கோலி ஆகியோர் இடையில் காணாமல் போயினர்.

1933 – மகாத்மா காந்தி தலித் மக்களின் நலனுக்காக 21-நாட்கள் உண்ணாநோன்பை ஆரம்பித்தார்.

1941 – இரண்டாம் உலகப் போர்: செருமனியின் வான்படை இங்கிலாந்தின் நோட்டிங்காம், டார்பி நகரங்கள் மீது குண்டுகளை வீசியது.

1942 – இரண்டாம் உலகப் போர்: சப்பானியப் பேரரசின் வானூர்தி தாங்கிக் கப்பல் அமெரிக்கக் கடற்படையின் லெக்சிங்டன் கப்பலைத் தாக்கி மூழ்கடித்ததை அடுத்து பவளக் கடல் சமர் முடிவுக்கு வந்தது.

1942 – இரண்டாம் உலகப் போர்: கொக்கோசு தீவுகளில் ஓர்சுபரோ தீவில் நிலைகொண்டிருந்த பிரித்தானிய இலங்கை அரண்காவல் படையினர் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். கிளர்ச்சி முறியடிக்கப்பட்டு மூன்று இலங்கையர் தூக்கிலிடப்பட்டனர். மேலும் எட்டு பேருக்கு 3-7 ஆண்டு கால கடூழியச் சிறைத்தண்டனை வழங்கப்பட்டது.

1945 – இரண்டாம் உலகப் போர்: செருமனியின் மேற்குப் பகுதிப் படைகள் நிபந்தனையின்றி சரணடைந்தனர்.

1945 – அல்ஜீரியாவின் சேட்டிஃப் என்ற இடத்தில் நூற்றுக்காணக்கான அல்ஜீரியர்கள் பிரெஞ்சுப் படைகளினால் கொல்லப்பட்டனர்.

1946 – எசுத்தோனிய பள்ளி மாணவிகள் இருவர் தாலின் நகரில் அமைக்கப்பட்டிருந்த சோவியத் நினைவகத்தைத் தகர்த்தனர்.

1963 – கத்தோலிக்க அரசுத்தலைவர் நியோ டின் தியெம் கீழிருந்த தென் வியட்நாம் படையினர் வெசாக் நாளில் பௌத்தக் கொடி ஏற்றுவதற்கிருந்த தடையை மீறிய பௌத்தர்கள் மீது சுட்டதில் ஒன்பது பேர் கொல்லப்பட்டனர்.

1978 – ரைன்ஹோல்ட் மெஸ்னெர், பீட்டர் எபெலர் இருவரும் முதற்தடவையாக ஆக்சிசன் ஊக்கி எதுவும் இல்லாமல் எவரெஸ்ட் சிகரத்தை எட்டிய முதல் மனிதர் எனற சாதனையை ஏற்படுத்தினர்.

1980 – பெரியம்மை நோய் ஒழிக்கப்பட்டு விட்டதாக உலக சுகாதார அமைப்பு அதிகாரபூர்வமாக அறிவித்தது.

1984 – டெனிசு லோர்ட்டி என்ற இராணுவ வீரர் கியூபெக் சட்டமன்றத்தினுள் புகுந்து சுட்டதில் மூவர் கொல்லப்பட்டனர், 13 பேர் காயமடைந்தனர்.

1987 – வட அயர்லாந்து, லோகல் என்ற இடத்தில் எட்டு ஐரியக் குடியரசுப் படை வீரர்கள் இராணுவத்தினரால் கொல்லப்பட்டனர்.

1997 – சீனாவில் விமானம் ஒன்று வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் 35 பேர் உயிரிழந்தனர்.

1998 – இலங்கையின் தெற்கே திக்குவல்லையில் சிங்களவருக்கும் முசுலிம்களுக்கும் இடையே கலவரம் மூண்டது.

2007 – புதிய வட அயர்லாந்து உயர் சபை அமைக்கப்பட்டது.

2017 – தமிழ் விக்கிப்பீடியாவில் 100,000-வது கட்டுரை எழுதப்பட்டது.

பிறந்த நாள்  

1894 – பெஞ்சமின் கிரகாம், பிரித்தானிய-அமெரிக்கப் பொருளியல் நிபுணர் (இ. 1976)

1895 – புல்டன் சீன், அமெரிக்கப் பேராயர் (இ. 1979)

1899 – பிரீட்ரிக் கையக், நோபல் பரிசு பெற்ற ஆத்திரியப் பொருளியலாளர் (இ. 1992)

1916 – சின்மயானந்தா, இந்திய சமயத் தலைவர் (இ. 1993)

1924 – சு. வித்தியானந்தன், இலங்கைக் கல்விமான், தமிழறிஞர் (இ. 1989)

1925 – கு. சி. அமுர், இந்திய எழுத்தாளர், விமர்சகர்

1929 – கிரிஜா தேவி, இந்தியப் பாடகி (இ. 2017)

1926 – டேவிட் ஆட்டன்பரோ, ஆங்கிலேய சூழலியலாளர்

1938 – ஜாவிட் புர்க்கி, இந்தியப்-பாக்கித்தானியத் துடுப்பாளர்

1953 – ரெமோ பெர்னாண்டஸ், போர்த்துகீச-இந்தியப் பாடகர்

1953 – தேவி செட்டி, இந்திய இதய அறுவை சிகிச்சையாளர், தொழிலதிபர்

1954 – குவாம் ஆந்தனி அப்பையா, கானா-ஆங்கிலேய மெய்யியலாளர்

1993 – பாட் கம்மின்ஸ், ஆத்திரேலியத் துடுப்பாளர்

நினைவு நாள்  

1936 – ஆசுவால்டு ஸ்பெங்கிலர், செருமானிய வரலாற்றாளர் (பி. 1880)

1951 – மு. நல்லதம்பி, ஈழத்துப் புலவர்

1967 – கூடூரு வெங்கடாசலம், இந்திய ஆர்வலர், வேளாண்மை அறிவியலாளர் (பி. 1909)

1972 – பாண்டுரங்க வாமன் காணே, இந்தியவியலாளர், சமக்கிருத அறிஞர் (பி. 1880)

1972 – தாமோதரம் சஞ்சீவய்யா, ஆந்திரப் பிரதேச அரசியல்வாதி, முதலமைச்சர் (பி. 1921)

1987 – வி. பி. சிந்தன், தமிழக அரசியல்வாதி, தொழிற்சங்கவாதி (பி. 1918)

1988 – ராபர்ட் ஏ. ஐன்லைன், அமெரிக்க அறிபுனை எழுத்தாளர் (பி. 1907)

1993 – தேவிபிரசாத் சட்டோபாத்தியாயா, இந்திய மார்க்சியப் புலமையாளர் (பி. 1918)

2005 – வலம்புரி ஜான், தமிழக எழுத்தாளர், பேச்சாளர், அரசியல்வாதி (பி. 1946)

2008 – சி. நாகராஜா, இலங்கை வழக்கறிஞர், யாழ்ப்பாண மாநகர முதல்வர் (பி. 1931)

சிறப்பு நாள்

உலக தாலசீமியா நோய் தினம்

உலக செஞ்சிலுவை தினம்


Share Tweet Send
0 Comments
Loading...