வரலாற்றில் இன்று மே 6 ..

வரலாற்றில் இன்று மே 6 ..

நிகழ்வுகள்

1840 – பென்னி பிளாக் அஞ்சல் தலை ஐக்கிய இராச்சியத்தில் (அயர்லாந்து உட்பட) பயன்படுத்த அனுமதிக்கப்பட்டது.

1853 – “த லிட்டரறி மிரர்” என்னும் ஆங்கில மாதிகையை யாழ்ப்பாணத்தில் வைமன் கதிரவேற்பிள்ளை ஆரம்பித்தார்.[1]

1854 – இந்தியாவில் முதல் அஞ்சல் தலை வெளியிடப்பட்டது.

1857 – பிரித்தானியக் கிழக்கிந்திய நிறுவனத்தின் 34வது இராணுவப் பிரிவு தனது அலுவலர்களைப் பாதுகாக்கத் தவறியமைக்காக கலைக்கப்பட்டது. இப்பிரிவின் மங்கள் பாண்டே என்ற சிப்பாய் தனது மேலதிகாரிகளுக்கெதிராகக் கிளர்ச்சியில் ஈடுபட்டு ஏப்ரல் 8 இல் தூக்கிலிடப்பட்டார்.

1861 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: ஆர்கன்சா அமெரிக்கக் கூட்டணியில் இருந்து விலகியது.

1882 – சீனத் தொழிலாளர்கள் அமெரிக்காவுக்கு வரத் தடை விதிக்கும் சட்டம் அமெரிக்க சட்டமன்றத்தில் நிறைவேறியது.

1889 – ஈபெல் கோபுரம் பாரிசில் பொதுமக்களுக்காக அதிகாரபூர்வமாகத் திறந்துவிடப்பட்டது.

1910 – ஐந்தாம் ஜோர்ஜ் அவரது தந்தை ஏழாம் எட்வேர்டின் இறப்பை அடுத்து ஐக்கிய இராச்சியத்தின் மன்னனாக முடி சூடினார்.

1916 – 21 லெபனான் தேசியவாதிகள் பெய்ரூட்டில் தூக்கிலிடப்பட்டனர்.

1916 – பிரெஞ்சு அரசுக்கு எதிராகக் கிளர்ச்சியைத் தூண்டி விட்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட வியட்நாம் பேரரசர் தூய் தான் கைது செய்யப்பட்டார். இவர் பின்னர் ரீயூனியன் தீவுக்கு நாடு கடத்தப்பட்டார்.

1937 – இன்டன்பர்க் பேரிடர்: செருமனியின் இன்டன்பேர்க் என்ற வான்கப்பல் லேக்கேர்சுடு, நியூ செர்சியில் தீப்பிடித்ததில் 36 பேர் உயிரிழந்தனர்.

1942 – இரண்டாம் உலகப் போர்: பிலிப்பீன்சில் நிலை கொண்டிருந்த கடைசி அமெரிக்கப் படைகள் சப்பானிடம் சரணடைந்தன.

1945 – இரண்டாம் உலகப் போர்] கிழக்கு ஐரோப்பாவின் கடைசிப் பெரும் சமர் பிராகா நகரில் ஆரம்பமானது.

1954 – ரோஜர் பேனிஸ்டர் ஒரு மைல் தூரத்தை நான்கு நிமிடங்களுக்குள் கடந்த வீரர் என்ற சாதனையை ஏற்படுத்தினார்.

1960 – வெஸ்ட்மின்ஸ்டர் மடத்தில் இருந்து முதல் தடவையாக அரச திருமணம் ஒன்று தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. இளவரசி மார்கரெட், அந்தனி ஆர்ம்ஸ்ட்ரோங்-யோன்சு ஆகியோரின் திருமணத்தை 20 மில்லியன் பேர் கண்டுகளித்தனர்.

1967 – சாகிர் உசேன் இந்தியாவின் முதல் முசுலிம் குடியரசுத் தலைவரானார்.

1975 – 100,000 ஆர்மீனியர் பெய்ரூட்டில் நடந்த ஆர்மீனிய இனப்படுகொலையின் 60-வது நினைவுநாள் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

1976 – இத்தாலியில் இடம்பெற்ற 6.5 அளவு நிலநடுக்கத்தில் 900-978 பேர் உயிரிழந்தனர்.

1984 – சியோல் நகரில் 103 கொரிய மாவீரர்களை திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர் புனிதர்களாக அறிவித்தார்.

1988 – நோர்வேயில் வானூர்தி ஒன்று டோர்காட்டன் மலையுடன் மோதியதி வீழ்ந்ததில் அதில் பயணம் செய்த அனைத்து 36 பேரும் உயிரிழந்தனர்.

1994 – ஐக்கிய இராச்சியத்தையும் பிரான்சையும் இணைக்கும் கால்வாய் சுரங்கத்தை ஐக்கிய இராச்சியத்தின் இரண்டாம் எலிசபெத், பிரெஞ்சு தலைவர் பிரான்சுவா மித்தரான் ஆகியோர் அதிகாரபூர்வமாகத் திறந்து வைத்தனர்.

2001 – சிரியாவுக்கான தனது பயணத்தில் திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர் பள்ளிவாசல் ஒன்றிற்கு சென்றார். பள்ளிவாசலுக்கு சென்ற முதலாவது திருத்தந்தை இவரேயாவார்.

பிறந்த நாள்  

1861 – மோதிலால் நேரு, இந்திய தேசிய காங்கிரசு தலைவர் (இ. 1931)

1871 – விக்டர் கிரின்யார்டு, நோபல் பரிசு பெற்ற பிரான்சிய வேதியியலாளர் (இ. 1935)

1872 – வில்லெம் தெ சிட்டர், டச்சு கணிதவியலாளர், இயற்பியலாளர், வானியலாளர் (இ. 1934)

1896 – ரோல்ப் மாக்சிமில்லன் சீவெர்ட், சுவீடன் இயற்பியலாளர் (இ. 1966)

1904 – ஹரி மார்ட்டின்சன், நோபல் பரிசு பெற்ற சுவீடன் எழுத்தாளர் (இ. 1978)

1918 – சேக் சயத் பின் சுல்தான் அல் நகியான், அபுதாபி நகர அமீர், அமீரகத்தின் முதலாவது அரசுத்தலைவர் (இ. 2004)

1942 – லால் தன்ஃகாவ்லா, இந்தியாவின் மிசோரம் மாநில முதலமைச்சர்

1953 – டோனி பிளேர், ஐக்கிய இராச்சியத்தின் பிரதமர்

1961 – ஜார்ஜ் குளூனி, அமெரிக்க நடிகர், இயக்குநர்

1963 – பொன்வண்ணன், தமிழகத் திரைப்பட நடிகர்

நினைவு நாள்  

1862 – கென்றி டேவிட் தூரோ, அமெரிக்கக் கவிஞர், மெய்யியலாளர் (பி. 1817)

1915 – வாசிலி பாவ்லோவிச் எங்கல்கார்த், உருசிய வானியலாளர் (பி. 1828)

1922 – சாகு மகாராசர், மகாராட்டிரா கோல்காப்பூர் சமத்தான மன்னர் (பி. 1874)

1952 – மரியா மாண்ட்டிசோரி, இத்தாலிய-டச்சு மருத்துவர், கல்வியாளர் (பி. 1870)

1959 – ராக்னர் நர்க்சு, எசுத்தோனிய-அமெரிக்கப் பொருளியலாளர் (பி. 1907)

1963 – தியோடர் வான் கார்மன், அங்கேரிய-அமெரிக்கக் கணிதவியலாளர், இயற்பியலாளர் (பி. 1881)

1979 – கார்ல் வில்லெம் ரெய்ன்முத், செருமானிய வானியலாளர் (பி. 1892)

1992 – மார்லீன் டீட்ரிக், செருமானிய-அமெரிக்க நடிகை, பாடகி (பி. 1901)

2008 – அல்லா கெனெரிகோவ்னா மாசேவிச், சோவியத் உருசிய வானியலாளர் (பி. 1918)

2016 – லட்சுமி ஹோம்ஸ்ட்ராம், பிரித்தானியத் தமிழ் எழுத்தாளர் (பி. 1935)


Share Tweet Send
0 Comments
Loading...