நிகழ்வுகள்
1928 – வால்ட் டிஸ்னியின் கதாபாத்திரமான மிக்கி மவுஸ் முதற்தடவையாக பிளேன் கிரேசி என்ற கேலிச்சித்திரத்தில் காட்சிப்படுத்தப்பட்டது.
1929 – ஒகைய்யோ மாநிலத்தில் கிளீவ்லன்ட் நகரில் மருத்துவமனை ஒன்றில் இடம்பெற்ற தீவிபத்தில் 123 பேர் கொல்லப்பட்டனர்.
1932 – இராணுவப் புரட்சி ஒன்றை அடுத்து சப்பானியப் பிரதமர் இனுக்காய் சுயோசி கொல்லப்பட்டார்.
1934 – கார்லிசு உல்மானிசு லாத்வியாவில் சர்வாதிகார ஆட்சியை உருவாக்கினார்.
1935 – மொஸ்கோவில் சுரங்கத் தொடருந்து சேவை ஆரம்பமானது.
1940 – இரண்டாம் உலகப் போர்: பெரும் சமருக்குப் பின்னர் இடச்சுப் படைகள் செருமானியப் படைகளிடம் சரணடைந்தன. அடுத்த ஐந்து ஆண்டுகள் நெதர்லாந்து செருமனியின் வசம் இருந்தது.
1940 – மெக்டொனால்ட்சு தனது முதலாவது உணவகத்தை கலிபோர்னியாவில் சான் பெர்னாதீனோவில் ஆரம்பித்தது.
1941 – பிரித்தானிய மற்றும் நட்புப் படைகளின் முதலாவது தாரை வானூர்தி சேவைக்கு விடப்பட்டது.
1943 – ஜோசப் ஸ்டாலின் பொதுவுடைமை அனைத்துலகத்தை (மூன்றாவது பன்நாடு) கலைத்தார்.
1948 – பலத்தீன் மீதான பிரித்தானியக் கட்டளை முடிவுக்கு வந்ததை அடுத்து, இசுரேல் மீது அரபு நாடுகளான எகிப்து, ஜோர்தான், லெபனான், சிரியா, ஈராக், மற்றும் சவூதி அரேபியா ஆகியன இணைந்து தாக்குதலை ஆரம்பித்தன.
1955 – உலகின் ஐந்தாவது உயரமான மக்காலு மலையின் உச்சியை பிரெஞ்சு மலையேறிகள் முதன் முதலாக எட்டினர்.
1957 – பசிபிக் பெருங்கடல் பகுதியில் மால்டன் தீவில் பிரித்தானியா தனது முதலாவது ஐதரசன் குண்டை சோதித்தது. ஆனாலும் இது தோல்வியடைந்தது.
1958 – சோவியத்தின் இசுப்புட்னிக் 3 விண்கலம் ஏவப்பட்டது.
1960 – சோவியத்தின் இசுப்புட்னிக் 4 விண்கலம் ஏவப்பட்டது.
1963 – நாசாவின் மேர்க்குரி-அட்லஸ் 9 விண்கலம் ஏவப்பட்டது. கோர்டன் கூப்பர் இவ்விண்கலத்தில் பயணித்து விண்வெளியில் ஒரு நாளுக்கு மேல் தங்கிய முதலாவது அமெரிக்கர் ஆனார். இவரே தனியாளாக விண்வெளிக்குச் சென்ற கடைசி அமெரிக்கர் ஆவார்.
1972 – 1945 முதல் அமெரிக்காவின் இராணுவக் கட்டுப்பாட்டில் இருந்த இரியூக்கியூ தீவுகள் மீண்டும் சப்பானிடம் ஒப்படைக்கப்பட்டது.
1974 – பாலத்தீன விடுதலைக்கான சனநாயக முன்னணிப் போராளிகள் இசுரேலியப் பள்ளிக்கூடம் ஒன்றைத் தாக்கியதில் 22 மாணவர்கள் உட்பட 31 பேர் கொல்லப்பட்டனர்.
1976 – உக்ரைன், வினீத்சியாவிலிருந்து மாஸ்கோ நோக்கிப் புறப்பட்ட ஏரோபுலொட் வானூர்தி 1802 வீழ்ந்ததில் அதில் பயணம் செய்த அனைத்து 52 பேரும் உயிரிழந்தனர்.
1985 – குமுதினி படகுப் படுகொலைகள், 1985: நெடுந்தீவு மாவலித்துறையில் இருந்து 64 பயணிகளுடன் புறப்பட்ட குமுதினி என்ற படகு இலங்கைக் கடற்படையினரால் வழிமறிக்கப்பட்டு குழந்தைகள், பெண்கள் உட்பட 36 பேர் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டனர்.
1988 – ஆப்கான் சோவியத் போர்: எட்டு ஆண்டுகள் போருக்குப் பின்னர் சோவியத் ஒன்றியம் தனது 115,000 இராணுவத்தினரை ஆப்கானித்தானில் வெளியேற்ற ஆரம்பித்தது.
1991 – எடித் கிரசான் பிரான்சின் முதற் பெண் பிரதமரானார்.
1996 – ஈழப்போர்: இலங்கைப் படைத்துறை யாழ்ப்பாணக் குடாநாட்டின் கிழக்குப் பகுதியை விடுதலைப் புலிகளிடம் இருந்து மீட்பதற்காக மூன்றாம் சூரியக்கதிர் நடவடிக்கையை ஆரம்பித்தது.
2005 – திருகோணமலை நகர் மத்தியில் இரவோடிரவாக புத்தர் சிலை எழுப்பப்பட்டதில் அங்கு கலவரம் வெடித்தது.
2006 – வவுனியாவில் நோர்வே அகதிகள் சபைப் பணியாளர் ஜெயரூபன் ஞானபிரகாசம் சுட்டுக் கொல்லப்பட்டார்.
2008 – கலிபோர்னியா ஒருபால் திருமணத்தை அங்கீகரித்த இரண்டாவது அமெரிக்க மாநிலமானது. 2004 இல் மாசச்சூசெட்ஸ் அங்கீகரித்திருந்தது.
2013 – ஈராக்கில் இடம்பெற்ற வன்முறைகளில் 389 பேர் கொல்லப்பட்டனர்.
பிறந்த நாள்
1859 – பியேர் கியூரி, நோபல் பரிசு பெற்ற பிரான்சிய இயற்பியலாளர் (இ. 1906)
1907 – சுக்தேவ் தபார், இந்திய விடுதலைப் போராளி (இ. 1931)
1908 – சு. ம. மாணிக்கராஜா, இலங்கை அரசியல்வாதி
1912 – புளிமூட்டை ராமசாமி, தென்னிந்திய நகைச்சுவை நடிகர்
1913 – ஆபிரகாம் செல்மனோவ், உருசிய வானியலாளர் (இ. 1987)
1915 – பவுல் சாமுவேல்சன், நோபல் பரிசு பெற்ற அமெரிக்கப் பொருளியலாளர் (இ. 2009)
1922 – டி. கே. ராமமூர்த்தி, தமிழக இசையமைப்பாளர், வயலின் கலைஞர் (இ. 2013)
1928 – ஏ. ரி. பொன்னுத்துரை, இலங்கைத் தமிழ் நாடகக் கலைஞர் (இ. 2003)
1937 – மாடிலின் ஆல்பிரைட், செக்-அமெரிக்க அரசியல்வாதி, அமெரிக்காவின் 64-வது அரசுச் செயலாளர்
1951 – பிராங்க் வில்செக், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க இயற்பியலாளர்
1954 – திருச்சி சிவா இந்திய அரசியல்வாதி
1967 – மாதுரி தீட்சித், இந்திய நடிகை
1983 – சந்தோஷ் நாராயணன், தமிழக இசையமைப்பாளர்
1987 – ஆண்டி முர்ரே, இசுக்கொட்டிய டென்னிசு வீரர்
நினைவு நாள்
1984 – லயனல் ராபின்ஸ், பிரித்தானியப் பொருளியலாளர் (பி. 1898)
1989 – எஸ். ஆர். கனகநாயகம், இலங்கை அரசியல்வாதியும், வழக்கறிஞர் (பி. 1904)
2010 – பைரோன் சிங் செகாவத், இந்தியாவின் 11வது குடியரசுத் துணைத்தலைவர் (பி. 1923)
2010 – ஜான் ஷெப்பர்ட் பேரோன், தன்னியக்க காசளிப்பு இயந்திரத்தைக் கண்டுபிடித்த பிரித்தானியர் (பி. 1925)
சிறப்பு நாள்
பன்னாட்டுக் குடும்ப நாள்