வரலாற்றில் இன்று மே 1 ..

வரலாற்றில் இன்று மே 1 ..

நிகழ்வுகள்

1893 – உலக கொலம்பியக் கண்காட்சி சிகாகோவில் ஆரம்பமானது.

1900 – ஐக்கிய அமெரிக்காவின் யூட்டா மாநிலத்தின் ஸ்கொஃபீல்ட் என்ற இடத்தில் இடம்பெற்ற சுரங்க விபத்தில் 200 பேர் உயிரிழந்தனர்.

1915 – லூசித்தானியா என்ற கப்பல் தனது 202 ஆவதும் கடைசியுமான பயணத்தை நியூயோர்க் நகரில் இருந்து ஆரம்பித்தது. இது புறப்பட்ட ஆறாவது நாள் அயர்லாந்துக் கரைக்கருகில் மூழ்கியதில் 1,198 பேர் உயிரிழந்தனர்.

1919 – செருமனியப் படைகள் பவேரிய சோவியத் குடியரசை அழிக்கும் பொருட்டு மியூனிக் நகரினுள் நுழைந்தன.

1925 – சீனாவில் அனைத்து சீன தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. இதுவே இன்று 134 மில்லியன் உறுப்பினர்களுடன் உள்ள உலகின் மிகப்பெரிய தொழிற்சங்கம் ஆகும்.

1929 – 7.2 ரிக்டர் அளவு நிலநடுக்கம் ஈரான்–துருக்மெனிஸ்தான் எல்லையைத் தாக்கியதில் 3,800 பேர் உயிரிழந்தனர். 1,121 பேர் காயமடைந்தனர்.

1930 – குறுங்கோள் புளூட்டோவின் பெயர் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

1931 – நியூயோர்க் நகரில் எம்பயர் ஸ்டேட் கட்டிடம் திறந்துவைக்கப்பட்டது.

1940 – கோடை கால ஒலிம்பிக் போட்டிகள் போர் காரணமாக நிறுத்தப்பட்டன.

1941 – இரண்டாம் உலகப் போர்: செருமனியப் படை துப்ருக் முற்றுகையை ஆரம்பித்தது.

1944 – இரண்டாம் உலகப் போர்: 200 கம்யூனிசக் கைதிகள் ஏதென்சில் நாட்சிகளினால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

1945 – இரண்டாம் உலகப் போர்: இட்லர் இறந்ததை செருமனியின் செய்தி வாசிப்பவர் அதிகாரபூர்வமாக அறிவித்தார்.

1945 – இரண்டாம் உலகப் போர்: சோவியத் இராணுவத்தினர் பெர்லினில் நாடாளுமன்றக் கட்டிடத்தில் சோவியத் கொடியை ஏற்றினார்கள்.

1945 – இரண்டாம் உலகப் போர்: நாட்சி பரப்புரை அமைச்சர் ஜோசப் கோயபெல்ஸ், அவரது மனைவி மேக்டா பியூரர் பதுங்கு அறைக்கு வெளியே தற்கொலை செய்து கொண்டனர். இவர்களது பிள்ளைகளும் தாயினால் சயனைடு பருக்கப்பட்டுக் கொல்லப்பட்டனர்.

1945 – இரண்டாம் உலகப் போர்: செஞ்சேனையின் முன்னேற்றத்தை அடுத்து செருமனியின் தெம்மின் என்ற இடத்தில் 2,500 பேருக்கு மேல் தற்கொலை செய்து கொண்டனர்.

1946 – மேற்கு ஆஸ்திரேலியாவில் பில்பாரா என்ற இடத்தில் ஆத்திரேலியப் பழங்குடிகள் மனித உரிமை, போதுமான சம்பளம் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து 3 ஆண்டுகள் வேலை நிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்தனர்.

1950 – குவாம் ஐக்கிய அமெரிக்காவின் பொதுநலவாயத்தில் இணைக்கப்பட்டது.

1956 – யோனாசு சால்க்கினால் தயாரிக்கப்பட்ட போலியோ தடுப்பூசி பொது மக்களின் பயன்பாட்டுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது.

1956 – மினமாட்டா கொள்ளை நோய் அதிகாரபூர்வமாகக் கண்டுபிடிக்கப்பட்டது.

1957 – இங்கிலாந்து, ஆம்ப்சயர் என்ற இடத்தில் வானூர்தி ஒன்று வீழ்ந்ததில் 34 பேர் உயிரிழந்தனர்.

1960 – இந்தியாவில் குசராத்து, மகாராட்டிரம் மாநிலங்கள் அமைக்கப்பட்டன.

1961 – கியூபாவை சோசலிச நாடாகவும் தேர்தல் முறையை ஒழித்தும் அதன் பிரதமர் பிடெல் காஸ்ட்ரோ அறிவித்தார்.

1977 – தொழிலாளர் நாள் நிகழ்வின் போது துருக்கியின் இஸ்தான்புல் நகரில் 36 பேர் கொல்லப்பட்டனர்.

1978 – சப்பானியர் நவோமி யூமுரா தன்னந்தனியாக வட முனையை அடைந்த முதல் மனிதர் என்ற சாதனையைப் படைத்தார்.

1987 – இரண்டாம் உலகப் போரின் போது அவுஷ்விட்ஸ் வதை முகாமில் கொல்லப்பட்ட யூதப் பெண்மதகுரு இதித் ஸ்டைன் பாப்பரசரால் புனிதப்படுத்தப்பட்டார்.

1989 – இந்திய அமைதி காக்கும் படையின் வவுனியா சிறையை உடைத்து விடுதலைப் புலிகளும் பொதுமக்களுமாக 43 பேர் தப்பி வெளியேறினர்.

1993 – இலங்கை அரசுத்தலைவர் ஆர். பிரேமதாசா மே தினப் பேரணியில் வைத்து மனிதக் குண்டுத்தாக்குதலின் மூலம் கொல்லப்பட்டார். டி. பி. விஜயதுங்க அரசுத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1999 – 1924 இல் காணாமல் போன பிரித்தானிய மலையேறி ஜார்ஜ் மலோரியின் உடல் எவரெஸ்டு மலையில் கண்டுபிடிக்கப்பட்டது.

2004 – சைப்பிரசு, செக் குடியரசு, எசுத்தோனியா, அங்கேரி, லாத்வியா, லித்துவேனியா, மால்ட்டா, போலந்து, சிலோவாக்கியா,, சுலோவீனியா ஆகிய நாடுகள் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்தன.

2009 – சமப்பால் திருமணம் சுவீடனில் சட்டபூர்வமாக்கப்பட்டது.

2011 – திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர் புனிதப்படுத்தப்படுத்தப்பட்டார்.

2011 – பயங்கரவாதத்திற்கு எதிரான போர்: அல் காயிதா தலைவர் உசாமா பின் லாதின் ஐக்கிய அமெரிக்கக் கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

பிறந்த நாள்  

1913 – பி. சுந்தரய்யா, இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர், இடதுசாரி அரசியல்வாதி (இ. 1985)

1913 – பல்ராஜ் சாஹனீ, இந்திய திரைப்பட நடிகர் (இ. 1973)

1919 – மன்னா தே, இந்தியப் பாடகர், இசையமைப்பாளர் (இ. 2013)

1927 – இராசம்மா பூபாலன், மலேசிய விடுதலைப் போராளி, பெண்ணியவாதி, ஜான்சி ராணி படைப் போராளி, கல்வியாளர்

1944 – சுரேஷ் கல்மாடி, இந்தியத் தொழிலதிபர், அரசியல்வாதி

1950 – இராய் படையாச்சி, தென்னாப்பிரிக்கத் தமிழ் அரசியல்வாதி (இ. 2012)

1951 – கோர்டன் கிரீனிட்ச், மேற்கிந்தியத் தீவுகளின் துடுப்பாளர்

1958 – சாலிந்த திசாநாயக்க, இலங்கை அரசியல்வாதி (இ. 2019)

1971 – அஜித் குமார், தென்னிந்தியத் திரைப்பட நடிகர்

1974 – கஸ்தூரி, இந்தியத் திரைப்பட நடிகை

1988 – அனுஷ்கா சர்மா, இந்தித் திரைப்பட, விளம்பர நடிகை

நினைவு நாள்  

1959 – சுவாமி சகஜானந்தா, தமிழக ஆன்மிகவாதி, அரசியல்வாதி (பி. 1890)

1965 – ஜி. என். பாலசுப்பிரமணியம், கருநாடக இசைப் பாடகர், நடிகர் (பி. 1910)

1980 – ஷோபா, தென்னிந்தியத் திரைப்பட நடிகை (பி. 1962)

1993 – ரணசிங்க பிரேமதாசா, இலங்கையின் 3வது அரசுத்தலைவர் (பி. 1924)

1994 – அயர்டன் சென்னா, பிரேசில் கார்ப் பந்தய வீரர் (பி. 1960)

2006 – ந. சுப்பு ரெட்டியார், தமிழறிஞர், எழுத்தாளர் (பி. 1916)

2011 – அலெக்ஸ், தென்னிந்தியத் திரைப்பட நடிகர்

2011 – உசாமா பின் லாதின், அல் கைடா தலைவர் (பி. 1957)

2012 – சண்முகசுந்தரி, தமிழ்த் திரைப்பட நடிகை

சிறப்பு நாள்  

மே நாள்

தொழிலாளர் தினம்


Share Tweet Send
0 Comments
Loading...