வரலாற்றில் இன்று ஏப்ரல் 8 ...

நிகழ்வுகள்

1911 – இடச்சு இயற்பியலாளர் எயிக் ஆன்சு மீக்கடத்துதிறனைக் கண்டுபிடித்தார்.

1913 – அமெரிக்க மேலவைக்கு நேரடித் தேர்தல் நடத்துவதகு சட்டமியற்றப்பட்டது.

1918 – முதலாம் உலகப் போர்: நடிகர்கள் டக்ளஸ் ஃபேர் பேங்க்ஸ், சார்லி சாப்ளின் ஆகியோர் போருக்கான நிதி சேகரிப்பில் ஈடுபட்டனர்.

1919 – பஞ்சாபில் நுழையக்கூடாதென்ற தடையை மீறியதால் மகாத்மா காந்தி தில்லி செல்லும் வழியில் கைது செய்யப்பட்டு பம்பாய்க்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

1924 – இசுலாமிய நீதிமன்றங்கள் துருக்கியில் இல்லாதொழிக்கப்பட்டன.

1929 – இந்திய விடுதலை இயக்கம்: தில்லி நடுவண் அரசு கட்டிடத்தில் பகத் சிங், மற்றும் பதுகேஷ்வர் தத் ஆகியோர் துண்டுப் பிரசுரங்களையும் குண்டுகளையும் வீசி தாமாகவே சரணடைந்தனர்.

1942 – இரண்டாம் உலகப் போர்: லெனின்கிராட் முற்றுகை: [[சோவியத் ஒன்றியம்|சோவியத் படையினர் லென்ன்கிராதுக்கான தொடருந்துப் பாதையை அமைத்தனர்.

1942 – இரண்டாம் உலகப் போர்: சப்பானியர்கள் பிலிப்பீன்சின் பட்டான் மாநிலத்தைக் கைப்பற்றினர்.

1943 – அமெரிக்கத் தலைவர் பிராங்க்ளின் ரூசவெல்ட், நாட்டில் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்காக, தொழிலாளர்களின் [[கூலி|ஊதியங்களையும்], பொருட்களின் விலைகளையும் முடக்கினார்.

1945 – இரண்டாம் உலகப் போர்: செருமனியின் அனோவர் நகரில் 4,000 அரசியல் கைதிகளை ஏற்றிச் சென்ற தொடருந்து மீது தவறுதலான வான்தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் தப்பியவர்கள் நாட்சிகளால் கொல்லப்பட்டனர்.

1950 – இந்தியாவும் பாக்கித்தானும் லியாக்கத்-நேரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.

1954 – கனடிய வான்படை விமானம் ஒன்று திரான்சு கனடா விமானம் மோதியதில் 37 பேர் உயிரிழந்தனர்.

1954 – தென்னாப்பிரிக்காவின் விமானம் ஒன்று கடலில் வீழ்ந்ததில் 21 பேர் உயிரிழந்தனர்.

1960 – இரண்டாம் உலகப் போரின் பின்னர் இடச்சுக்களினால் கைப்பற்றப்பட்ட செருமானியப் பிரதேசங்களை 280 மில்லியன் மார்க்குகளுக்கு கொள்வனவு செய்வதற்கான உடன்படிக்கையில் நெதர்லாந்தும் மேற்கு செருமனியும் கையெழுத்திட்டன.

1961 – பாரசீக வளைகுடாவில் டாரா என்ற கப்பலில் பெரும் குண்டுவெடிப்பு நிகழ்ந்ததில் 238 பேர் கொல்லப்பட்டனர்.

1970 – இசுரேல் விமானங்கள் எகிப்தியப் பள்ளிக்கூடம் ஒன்றில் குண்டுகளை வீசியதில் 46 சிறுவர்கள் கொல்லப்பட்டனர்.

1985 – போபால் பேரழிவு: போபாலில் நச்சு வாயுக் கசிவினால் 2,000 பேருக்கு மேல் கொல்லப்பட்ட நிகழ்வுக்காக இந்தியா யூனியன் கார்பைட் நிறுவனத்துக்கெதிராக வழக்குத் தொடர்ந்தது.

1993 – மாக்கடோனியக் குடியரசு ஐக்கிய நாடுகள் அவையில் இணைந்தது.

2000 – அரிசோனாவில் அமெரிக்கக் கடற்படை விமானம் ஒன்று வீழ்ந்ததில் 19 கடற்படையினர் உயிரிழந்தனர்.

2004 – தார்ஃபூர் போர்: சூடான் அரசுக்கும் இரண்டு தீவிரவாத அமைப்புகளுக்கும் இடையில் போர் நிறுத்த உடன்பாடு எட்டப்பட்டது.

பிறந்த நாள்

1911 – மெல்வின் கால்வின், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க வேதியியலாளர் (இ. 1997)

1917 – எஸ். இராமநாதன், தமிழக கருநாடக வாய்ப்பாட்டு, வீணை கலைஞர் (இ. 1988)

1938 – கோபி அன்னான், கானா நாட்டு பொருளியலாளர், ஐக்கிய நாடுகளின் 7வது பொதுச் செயலர்

1949 – ஜோன் மேடென், ஆங்கிலேயத் திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர்

1954 – கோ. வா. உலோகநாதன், இந்திய-அமெரிக்கப் பொறியியலாளர் (இ. 2007)

1983 – அல்லு அர்ஜுன், தென்னிந்தியத் திரைப்பட நடிகர்

1988 – நித்யா மேனன், தென்னிந்தியத் திரைப்பட நடிகை, பின்னணிப் பாடகி


நினைவு நாள்

1894 – பங்கிம் சந்திர சட்டர்ஜி, இந்திய ஊடகவியலாளர், கவிஞர் (பி. 1838)

1964 – காருக்குறிச்சி அருணாசலம், தமிழக நாதசுவரக் கலைஞர் (பி. 1907)

1968 – அரோல்டு டி. பாப்காக், அமெரிக்க வானியலாளர் (பி. 1882)

1969 – சினைதா அக்சென்சியேவா, உக்ரைனிய வானியலாளர் (பி. 1900)

1973 – பாப்லோ பிக்காசோ, எசுப்பானிய ஓவியர், சிற்பி (பி. 1881)

1973 – நீலகண்ட ஸ்ரீராம், பிரம்மஞான சபை தலைவர் (பி. 1889)

1989 – ஏ. எம். ராஜா, தென்னிந்தியத் திரைப்படப் பின்னணிப் பாடகர் (பி. 1929)

1992 – டேனியல் போவே, நோபல் பரிசு பெற்ற சுவிட்சர்லாந்து-இத்தாலிய மருந்தியலாளர் (பி. 1907)

2008 – சரண் ராணி பாக்லீவால், இந்துத்தானி இசை, சரோத் இசைக் கலைஞர் (பி. 1929)

2013 – மார்கரெட் தாட்சர், ஐக்கிய இராச்சியத்தின் பிரதமர் (பி. 1925)

2015 – ஜெயகாந்தன், தமிழக எழுத்தாளர் (பி. 1934)

2015 – நாகூர் இ. எம். ஹனீஃபா, தமிழக இசுலாமியப் பாடகர் (பி. 1925)

2016 – எலிசபெத் உரோயமர், அமெரிக்க வானியலாளர் (பி. 1929)

Share Tweet Send
0 Comments
Loading...