ஈரடி குறளில் உலகத் தத்துவங்கள் அனைத்தையும்
'திருக்குறள்' என்னும் உன்னதப் படைப்பில் மக்களுக்கு
எடுத்துச் சொல்லி உலக இலக்கிய அரங்கில்
தமிழ்மொழிக்கென்று ஓர் உயர்ந்த இடத்தை
நிலைப்பெற செய்த திருவள்ளுவருக்கு
அர்ப்பணிக்கப்பட்ட ஒரு வரலாற்று நினைவுச்சின்னமாக
விளங்கும் சென்னையில் அமைந்துள்ள வள்ளுவர் ர
கோட்டம் திறக்கப்பட்ட தினம் இன்று!
வள்ளுவர் கோட்டத்தின்
சிறப்பு
ஆசியாவிலே மிகப்பெரிய அரங்கங
களுள் இதுவும் ஒன்று, தரைத்தளத்தில்
220 அடி நீளத்தில், 100 அடி
அகலத்தில் சுமார் 3 ஆயிரத்து 500
பேர் அமரக் கூடிய தூண்கள் இல்லாத
பிரம்மாண்டமான அரங்கம், இந்த
அரங்கத்தின் பின்பகுதியில் திருவாரூர்
தேரை நினைவுபடுத்தும் வகையில்
133 அதிகாரங்களும் சுருக்கமாக
சித்திரத்தில் வடிக்கப்பட்ட சிற்ப தேர்
கம்பீரமாகக் காட்சியளிக்கிறது..