வல்லிக்கண்ணன் பிறந்த நாள்

வல்லிக்கண்ணன் பிறந்த நாள்
  • புகழ்பெற்ற எழுத்தாளர் வல்லிக்கண்ணன் 1920ஆம் ஆண்டு நவம்பர் 12ஆம் தேதி திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ராஜவல்லிபுரத்தில் பிறந்தார். இவருடைய இயற்பெயர் ரா.சு.கிருஷ்ணசாமி.
  • இவர், தனது ஊர் பெயரில் உள்ள வல்லி மற்றும் தனது செல்லப் பெயரான கண்ணன் ஆகியவற்றை இணைத்து வல்லிக்கண்ணன் என்று பெயர் சூட்டிக்கொண்டார். இதுவே இவரது பெயராக நிலைத்துவிட்டது.
  • இவர் மொத்தம் 75 நூல்கள் எழுதியுள்ளார். இவரது 'புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்' என்ற நூலுக்காக 1978ஆம் ஆண்டு இவருக்கு சாகித்திய அகாடமி விருது வழங்கப்பட்டது.
  • வல்லிக்கண்ணன் சிறப்புச் சிறுகதைகள்' என்ற நூல் தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2002ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களின் சிறுகதைப் பிரிவில் பரிசு பெற்றுள்ளது.
  • சுமார் 75 ஆண்டுகாலம் இலக்கியத்துக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்ட வல்லிக்கண்ணன் தன்னுடைய 85வது வயதில் (2006) மறைந்தார்.

Share Tweet Send
0 Comments
Loading...