வெற்றி தரும் வெற்றிலை தீபம்

வெற்றி தரும் வெற்றிலை தீபம்

காலையில் பிரம்ம முகூர்த்தமான நான்கு மணி முதல் ஆறு மணி வரையும் (சூரிய உதயதிற்கு முன்) தீபம் ஏற்றி வழிபட்டால் அனைத்து செயல்களும் நன்மையைத் தரும், மற்றும் பெரும் புண்ணியம் உண்டாகும். முன்வினைப் பாவம் விலகும். மாலையில் மாலை ஆறு மணி  முதல் ஏழு மணி வரை (சூரிய உதயதிற்கு பின்) தீபமேற்றினால் திருமணத்தடை, கல்வித்தடை நீங்கும் என்பது ஐதீகம் மற்றும் வீட்டில்  லெட்சுமி வாசம் செய்வாள்.தீபம் ஏற்றுவதால் சுபம், ஆரோக்கியம், நன்மை, தனசேர்த்தி, நல்லபுத்தி ஆகியவை பெருகும்.

நம்மிடம் வாசம் செய்யும் மூதேவியானவள் நம்மை விட்டு விலக வேண்டும் என்று இந்த பரிகாரத்தை செய்வதாக இருந்தாலும் சரி. அல்லது காம்பில் வாசம் செய்யும் பார்வதிதேவியின் மூலம் நமக்கு அதிர்ஷ்டம் கிடைக்கப் போவதாக இருந்தாலும் சரி. இது பார்ப்பவர்களின் கண்களில் உள்ளது. எந்த ஒரு சந்தேகத்துடனும், குழப்பத்துடனும் இந்த பரிகாரத்தை செய்ய வேண்டாம். மனத் திருப்தியோடு செய்வதற்கு ஒரு உதாரணத்தை வேண்டுமென்றாலும் இந்த இடத்தில் கூறலாம்.

பரிகாரம் என்பது பார்ப்பவர்களின் கண்களிலும், சிந்திப்பவர்களின் எண்ணத்திலும் தான் உள்ளது. இந்த தீபத்தை ஏற்றுவதன் மூலம் எந்த ஒரு கஷ்டமும் நமக்கு வந்துவிடாது. அதிர்ஷ்டம் உங்களைத் தேடி வர வேண்டும் என்றும், இந்த பரிகாரத்தை செய்யலாம். உங்களிடம் இருக்கும் துரதிர்ஷ்டம் உங்களை விட்டு செல்ல வேண்டும் என்று நினைத்துமா இந்த பரிகாரத்தை செய்து கொள்ளலாம். ஆனால் நன்மை நடக்குமா? என்ற சந்தேகத்தோடு மட்டும் எந்த ஒரு பரிகாரத்தையும் செய்ய வேண்டாம்.

வெற்றி+இலை என்பதை பிரித்தால் வெற்றியின் இலை என வரும். இதையே நாம் வெற்றிலை என்கிறோம். நம் நாட்டில் நடக்கும் முக்கியமான அனைத்து நிகழ்வுகளையும் வெற்றிலையையானது அலங்கரிக்கும். வெற்றிலைக்கு பல புராண வரலாறுகள் இருக்கின்றன.

"வெற்றிலையின் நுனியில் லட்சுமியும் நடுவில் சரஸ்வதியும் காம்பில் பார்வதிதேவியும் இருப்பதாக வரலாறு சொல்கிறது"அந்த அளவிற்கு வெற்றிலையானது புராணம் காலங்களை எல்லாம் தாண்டி தற்போதும் பயன்படுத்தப்பட்டு கொண்டிருக்கின்ற ஒரு புனிதப் பொருள் ஆகும். அனைத்து செடிகளும் மொட்டாகி பூவாகி காயாகி பழமாகும் மீண்டும் அதிலிருந்து விதை கிடைக்கும். ஆனால் வெற்றிலை மட்டும் ஒரே ஒரு உருவம் எடுத்தாலும் அது கடவுளையே சேரும். வெற்றிலை மற்றும் பாக்கு சேர்ந்த ஒரு காம்பினேஷன் மகாவிஷ்ணு மற்றும் பார்வதி தேவியின் மறு உருவம் எனவும் கூறுவர்.

சேதாரமில்லாத புத்தம்புது வெற்றிலையினை 6 எண்ணிக்கையில் எடுத்துக்கொள்ள வேண்டும். முக்கியமாய் நுனிப்பகுதி சேதாரமில்லாமல் இருக்கக்கூடாது. நுனியில்லாத வெற்றிலையை பூஜைக்கு எப்போதுமே பயன்படுத்த கூடாது. வெற்றிலையிலிருந்து காம்பினை கிள்ளி எடுத்துக் கொள்ளவேண்டும். காம்பில்லாத 6  வெற்றிலைகளை ஒரு பலகையின் மீதோ அல்லது ஒரு டேபிளின் மீதோ 6 வெற்றிலைகளையும் மயில் தோகை போல் விரித்து, வைத்து விடவேண்டும்.  அதன்மேல் ஒரு அகல் தீபத்தை வைத்து, நல்லெண்ணெய் ஊற்றி, திரி போட்டு வைக்கவும். அடுத்து கிள்ளி வைத்திருக்கும் 6 காம்புகளையும் நல்லெண்ணெய்க்குள்  போட்டு, தீபத்தை ஏற்ற வேண்டும்.

ஏற்றிய தீபத்தில் எண்ணெய் சூடாகி வெற்றிலை காம்பில் இருந்து லேசான நறுமணம் வீசும். தீபத்திற்கடியில் இருக்கும் காம்பு இல்லாத வெற்றிலையில் தீபத்தின் சூடுபட்டு, வெற்றிலையிலிருந்து நறுமணம் வீசும். இந்த நறுமணத்தை நன்றாக உள்ளிழுத்து தீபத்தை நோக்கியவாறு ஐந்து நிமிடங்கள் உங்கள் மனதில் நினைத்திருக்கும் கோரிக்கையை வைத்து தியானம் செய்தாலே போதும். உங்களுக்கு இருக்கும் எப்படிப்பட்ட பிரச்சனையாக இருந்தாலும், விரைவில் தீர்ந்து மகிழ்ச்சி பொங்கும். நினைத்தது ஈடேறும். காரணம் வெற்றிலையில் வீற்றிருக்கும் முப்பெரும்தேவிகளின் அருட்பார்வை கிட்டும். நம் நிலை மாறும்.

இப்படிப்பட்ட ஒரு தனி சிறப்பு மிகுந்த வெற்றிலையை தீபமேற்றி வழிபட வெற்றிகள் வந்து சேரும். வெற்றியில் தீபம் ஏற்றுவது என்பது ஒரு வழிபாட்டு முறையாகும்.Share Tweet Send
0 Comments
Loading...