வியக்க வைக்கும் வேப்பிலை பயன்கள்

வியக்க வைக்கும் வேப்பிலை பயன்கள்

வேப்பிலை சாற்றின் ஏராளமான நன்மைகளைப் பற்றி தெரிந்த நம் முன்னோர்கள் காலங்காலமாக அதை பயன்படுத்தி வருகின்றனர். நீரிழிவு நோயை கட்டுப்படுத்துவதில் இருந்து சரும ஆரோக்கியத்தை பாதுகாப்பது வரை வேப்பிலை சாற்றில் ஏராளமான மருத்துவ குணங்கள் காணப்படுகிறது. வேப்பிலை மரத்தின் பூக்கள், இலைகள், பட்டைகள் என ஒவ்வொரு பாகங்களும் நமக்கு பயன்படுகின்றன.

மருத்துவ குணம்

🌺தினமும் காலையில் வேப்பிலை சாற்றை குடித்து வருவது உங்க செரிமான பிரச்சினைகளை போக்க உதவுகிறது. இதிலுள்ள அஸ்ட்ரிஜெண்ட் பண்புகள் வாயு உருவாக்கத்தை தடுக்கின்றன. இதன் மூலம் வயிற்று வீக்கம், வாயு மற்றும் வயிற்று மந்தம், மலச்சிக்கல் போன்ற பிரச்சினைகளை குறைக்கிறது.

🌺வேப்பிலை சாறு நிறைய தொற்றுகளுக்கு காரணமான பாக்டீரியா, வைரஸ், வைரல் மற்றும் பூஞ்சை இவற்றை எதிர்த்து போராட உதவுகிறது. காய்ச்சல், சலதோஷம் மற்றும் தொண்டை புண் அறிகுறிகளை குறைக்க உதவுகிறது.

🌺வேப்பிலை சாற்றில் அழற்சி எதிர்ப்பு பண்புகள், அல்சர், பெப்டிக் புண்கள், வாய்ப் புண்கள் போன்றவற்றை குறைக்கிறது. இதிலுள்ள பயோஆக்டிவ் சேர்மங்கள் திசு உருவாக்கத்தையும், சேதமடைந்த திசுக்களை மீட்கவும் உதவுகிறது. சீக்கிரமே காயங்களை ஆற்ற உதவுகிறது.

🌺வேப்பிலையிலும் நச்சுத்தன்மைகளை நீக்கும் சக்தி இருக்கிறது. வேப்பிலை சாற்றை தினமும் குடித்து வர உடம்பில் இருக்கும் நச்சுக்களை கழிவுகளை நீக்குகிறது. இது இரத்தத்தை சுத்தம் செய்ய உதவுகிறது. இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது.

 அழகுப் பொருளாக


🌺வேப்பிலையை கொதிக்கும் தண்ணீரில் போட்டு, தண்ணீரின் நிறம் மாறும் வரை ஊற வைத்து, நீரை வடித்து ஒரு பாட்டிலில் ஊற்றி, தினமும் குளிக்கும் போது, குளிக்கும் நீரில் சிறிது ஊற்றி, குளித்தால், சருமத்தில் ஏற்படும் முகப்பரு மற்றும் வெள்ளை புள்ளிகள் நீங்கிவிடும்.

🌺 ஸ்கின் டோனராகவும் பயன்படுத்தலாம். அதற்கு அந்த வேப்பிலை நீரை, காட்டனில் நனைத்து, தினமும் இரவில் படுக்கும் போது, துடைத்து வந்தால், முகப்பரு, கரும்புள்ளிகள் போன்றவை போய்விடும். அதேப்போன்று, அந்த நீரை தலைக்கு ஊற்றினால், தலையில் இருக்கும் பொடுகு மற்றும் அதிகமான கூந்தல் உதிர்தல் சரியாகிவிடும்.

🌺 வேப்ப இலை மற்றும் ஆரஞ்சு தோல் சிறிது எடுத்துக் கொண்டு, அதனை கொதிக்கும் நீரில் போட்டு, சிறிது நேரம் ஊற வைத்து அரைத்து, அத்துடன் தேன், தயிர் மற்றும் சோயா பால் சேர்த்து பேஸ்ட் போன்று செய்து, முகத்தில் தடவி, ஊற வைத்து கழுவி வந்தால், பருக்கள், வெள்ளை புள்ளிகள், கரும்புள்ளிகள், தழும்புகள் போன்றவை நீங்கிவிடும். இதனை மாதத்திற்கு ஒரு முறை செய்து வந்தால் நல்லது.

🌺வேப்பிலையை நன்கு பேஸ்ட் போல் அரைத்து, அதில் சிறிது தேன் கலந்து, தலைக்கு தடவி, ஷாம்பு போட்டு குளித்தால், பொடுகு நீங்கி, கூந்தல் பட்டுப் போன்று மின்னும். இந்த முறை ஹேர் கண்டிஷனர் போன்றது.

🌺 வேப்பிலையில் வலியைப் போக்கும், காய்ச்சலைக் சரிசெய்யும், காயங்களை குணப்படுத்தும் பொருள் உள்ளது. எனவே இதனை காயங்கள், காது வலி, தலை வலி போன்றவற்றிற்கு பயன்படுத்தினால், குணமாகிவிடும்.

🌺வேப்ப மரத்தின் வேர்களில் நிறைய மருத்துவ பொருள் நிறைந்துள்ளது. இதன் வேரை பொடி செய்து பேன், பொடுகுத் தொல்லை போன்றவற்றிற்கு பயன்படுத்தலாம். அதுமட்டுமின்றி, இது சொரியாசிஸ், பருக்கள், சொறி சிரங்கு, படை மற்றும் பல தோல் நோய்களை தடுக்கும்.


Share Tweet Send
0 Comments
Loading...