வரலாற்றில் இன்று ஜூன் 9..!

வரலாற்றில் இன்று ஜூன் 9..!

நிகழ்வுகள்

  • 1900 – இந்தியத் தேசியவாதி பிர்சா முண்டா பிரித்தானிய சிறையில் வாந்திபேதியினால் இறந்தார்.
  • 1903 – அநுராதபுரத்தில் இடம்பெற்ற கலவரத்தில் கத்தோலிக்க ஆலயம் ஒன்று பௌத்தர்களினால் சேதமாக்கப்பட்டு மதகுரு தாக்கப்பட்டார். 40 பேர் கைது செய்யப்பட்டனர்.
  • 1923 – பல்கேரியாவில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியில் இராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது.
  • 1928 – ஆத்திரேலியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் முதற்தடவையாக சார்லசு கிங்சுபோர்ட் சிமித் வானூர்தியில் கடந்தார்.
  • 1935 – வடமேற்கு சீனாவில் சப்பானியரின் ஆக்கிரமிப்பை சீனக் குடியரசு அங்கீகரித்தது.
  • 1936 – யாழ்ப்பாண நகரசபைக் கட்டடத்தை இலங்கை மகாதேசாதிபதி சேர் ரெஜினால்ட் எட்வர்ட் ஸ்ரப்சு திறந்து வைத்தார்.
  • 1944 – இரண்டாம் உலகப் போர்: பிரான்சில் தூலி என்ற இடத்தில் 99 பொது மக்கள் செருமனியப் படையினரால் படுகொலை செய்யப்பட்டனர்.
  • 1944 – இரண்டாம் உலகப் போர்: பின்லாந்து 1941 முதல் கைப்பற்றி வைத்திருந்த கரேலியா பகுதியினுள் சோவியத் ஒன்றியம் ஊடுருவியது.
  • 1946 – பூமிபால் அதுல்யாதெச்சு தாய்லாந்தின் மன்னராக முடி சூடினார்.
  • 1953 – அமெரிக்காவின் மாசச்சூசெட்ஸ் மாநிலத்தை சூறாவளி தாக்கியதில் 94 பேர் உயிரிழந்தனர்.
  • 1959 – முதலாவது அணுக்கரு ஆற்றல் ஏவுகணை நீர்மூழ்கி ஜார்ஜ் வாசிங்டன் வெள்ளோட்டம் விடப்பட்டது.
  • 1962 – தங்கனீக்கா குடியரசாகியது.
  • 1967 – ஆறு நாள் போர்: இசுரேல் சிரியாவிடம் இருந்து கோலோன் குன்றுகளைக் கைப்பற்றியது.
  • 1972 – அமெரிக்காவின் தெற்கு டகோட்டாவில் பெரும் மழை காரணமாக அணை ஒன்று உடைந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதில் 238 பேர் உயிரிழந்தனர்.
  • 1979 – சிட்னியில் லூனா பூங்காவில் சிறிய தொடருந்து ஒன்று தீப்பற்றியதில் ஏழு பேர் உயிரிழந்தனர்.
  • 1999 – கொசோவோ போர்: செர்பியா-மொண்டெனேகுரோ நேட்டோவுடன் அமைதி உடன்பாட்டில் கையெழுத்திட்டது.
  • 2009 – பாக்கித்தான், பெசாவரில் உணவு விடுதி ஒன்றில் குண்டு வெடித்ததில் 17 பேர் கொல்லப்பட்டனர்.
  • 2010 – ஆப்கானித்தான், காந்தகாரில் திருமண வீடொன்றில் சிறுவன் ஒருவன் தற்கொலைத் தாக்குதல் நடத்தியதில் 40 பேர் கொல்லப்பட்டனர், 70 பேர் காயமடைந்தனர்.

பிறந்த நாள்

  • 1898 – பள்ளியகரம் நீ. கந்தசாமிப் புலவர், தமிழகப் புலவர் (இ. 1977)
  • 1917 – எரிக் ஹாப்ஸ்பாம், எகிப்திய-ஆங்கிலேய வரலாற்றாளர் (இ. 2012)
  • 1931 – நந்தினி சத்பதி, ஒடிசாவின் 8வது முதலமைச்சர் (இ. 2006)
  • 1937 – இராமச்சந்திர காந்தி, இந்திய மெய்யியல் அறிஞர் (இ. 2007)
  • 1943 – சி. மௌனகுரு, இலங்கை அரங்க ஆய்வாளர், பயிற்சியாளர், இயக்குநர், கல்வியாளர்
  • 1949 – கிரண் பேடி, இந்தியக் காவல்துறை அதிகாரி, செயற்பாட்டாளர்
  • 1951 – டி. சகுந்தலா, தென்னிந்தியத் திரைப்பட நடிகை (இ. 2014)
  • 1951 – ஜேம்ஸ் நியூட்டன் ஹவார்ட், அமெரிக்க இசையமைப்பாளர், தயாரிப்பாளர்
  • 1952 – யூசஃப் ரசா கிலானி, பாக்கித்தான் அரசியல்வாதி
  • 1954 – எலிசபெத் மே, அமெரிக்க-கனடிய சுற்றுச்சூழலியலாளர், அரசியல்வாதி
  • 1963 – ஜானி டெப், அமெரிக்க நடிகர்
  • 1977 – அமீஷா பட்டேல், இந்திய நடிகை
  • 1977 – உஸ்மான் அப்சால், பாக்கித்தானிய-ஆங்கிலேயத் துடுப்பாட்ட வீரர்
  • 1981 – நேடலி போர்ட்மன், இசுரேலிய-அமெரிக்க நடிகை
  • 1981 – அனுஷ்கா சங்கர், ஆங்கிலேய-இந்திய சித்தார் கலைஞர்
  • 1985 – சோனம் கபூர், இந்திய நடிகை

நினைவு நாள்

  • 1900 – பிர்சா முண்டா,  இந்திய விடுதலைப் போராட்ட வீரர் (பி. 1875)
  • 1959 – அடால்ஃப் வின்டாசு, நோபல் பரிசு பெற்ற செருமானிய வேதியியலாளர் (பி. 1876)
  • 1970 – எம். ஐ. எம். அப்துல் மஜீத், இலங்கை அரசியல்வாதி (பி. 1919)
  • 1981 – குடந்தை ப. சுந்தரேசனார், தமிழகப் பண்ணாராய்ச்சியாளர் (பி. 1914)
  • 1995 – கொகினேனி ரங்க நாயுகுலு, இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர், அரசியல்வாதி (பி. 1909)
  • 2011 – மக்புல் ஃபிதா உசைன், இந்திய ஓவியர், இயக்குநர் (பி. 1915)
  • 2013 – கே. டி. பிரான்சிஸ், இலங்கைத் துடுப்பாட்ட நடுவர் (பி. 1939)

சிறப்பு நாள்

  • சுயாட்சி நாள் (ஓலந்து தீவுகள்)
  • தேசிய வீரர்கள் நாள் (உகாண்டா)

Share Tweet Send
0 Comments
Loading...