வரலாற்றில் இன்று ஜூன் 7..!

வரலாற்றில் இன்று ஜூன் 7..!

நிகழ்வுகள்  

1917 – முதலாம் உலகப் போர்: பெல்ஜியத்தில் மெசைன் என்ற இடத்தில் 10,000 செருமானியப் படையினர் கொல்லப்பட்டனர்.

1919 – மால்ட்டா தலைநகர் வல்லெட்டாவில் தேசியவாதிகளின் கலகம் வெடித்தது. பிரித்தானியப் படையினர் சுட்டதில் நால்வர் கொல்லப்பட்டனர்.

1929 – வத்திக்கான் நகரை தனிநாடாக அங்கீகரிக்கும் உடன்பாடு இத்தானிய இராச்சியத்துக்கும் திரு ஆட்சிப்பீடத்திற்கும் இடையில் ஏற்பட்டது.

1938 – இரண்டாம் சீன-சப்பானியப் போர்: சீனத் தேசியவாதிகளின் அரசு சப்பானிய இராணுவத்தின் முற்றுகையைத் தடுக்கும் முகமாக மஞ்சள் ஆற்றைப் பெருக்கெடுக்கச் செய்தது. 500,000 முதல் 900,000 வரை உயிரிழந்தனர்.

1940 – ஏழாம் ஆக்கோன் மன்னரும், முடிக்குரிய இளவரசர் ஒலாவும் நோர்வே அரசும் நாட்டை விட்டு வெளியேறி இலண்டனில் நாடு கடந்த நிலையில் இயங்கினர். ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் நாடு திரும்பினர்.

1942 – இரண்டாம் உலகப் போர்: அலாஸ்காவுக்கு அப்பாலுள்ள அலூசியன் தீவுகளில் உள்ள அட்டு, கிசுக்கா ஆகிய அமெரிக்கத் தீவுகளை சப்பானியப் படைகள் கைப்பற்றின.

1944 – இரண்டாம் உலகப் போர்: நோமண்டி சண்டையில் 23 கனேடிய போர்க்கைதிகளை நாட்சி செருமனியப் படைகள் கொன்றனர்.

1944 – இரண்டாம் உலகப் போர்: 350 கிரீட்டிய யூதர்களையும் 250 கிரீட்டிய சார்பாளர்களையும் ஏற்றிச் சென்ற கப்பல் கிரேக்கத்தின் சந்தோரினி தீவுக்கு அருகில் மூழ்கியதில் கப்பலில் அனைவரும் உயிரிழந்தனர்.

1946 – இரண்டாம் உலகப் போர்க் காலத்தில் நிறுத்தப்பட்டிருந்த பிபிசி தொலைக்காட்சி சேவை ஏழு ஆண்டுகளின் பின்னர் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது.

1948 – செக்கோசிலோவாக்கியாவின் அரசுத்தலைவர் எட்வர்டு பெனெசு தனது நாட்டை கம்யூனிச நாடாக மாற்றுவதற்கு மறுப்புத் தெரிவித்து பதவியில் இருந்து விலகினார்.

1962 – அல்ஜியர்ஸ் பல்கலைக்கழக நூலகக் கட்டடம் வலதுசாரித் தீவிரவாதிகளால் எரியூட்டப்பட்டதில், 500,000 இற்கும் அதிகமான நூல்கள் எரிந்தன.

1967 – ஆறு நாள் போர்: இசுரேலியப் படைகள் எருசலேமினுள் நுழைந்தன.

1977 – ஐக்கிய இராச்சியத்தின் இரண்டாம் எலிசபெத் மகாராணியின் வெள்ளி விழா நிகழ்வுகளை 500 மில்லியன் மக்கள் தொலைக்காட்சியில் பார்வையிட்டனர்.

1981 – இசுரேலிய வான்படை ஈராக்கிய ஒசிராக் அணுக்கரு உலையை ஒப்பேரா நடவடிக்கையின் போது குண்டுவீசி அழித்தது.

1989 – சுரினாமில் விமானம் ஒன்று வீழ்ந்ததில் அதில் பயணம் செய்த 187 பேரில் 176 பேர் உயிரிழந்தனர்.

1991 – பிலிப்பீன்சில் பினட்டூபோ எரிமலை வெடித்து 7 கிமீ உயரத்துக்கு அதன் தூசிகள் பறந்தன.

2000 – இசுரேல், லெபனான் ஆகியவற்றிற்கிடையேயான எல்லைக் கோட்டை ஐக்கிய நாடுகள் அவை வரையறுத்தது.

2000 – கொழும்பில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் அமைச்சர் சி. வி. குணரத்ன மற்றும் தெகிவளை மாநகர உதவி மேயர் ஆகியோர் கொல்லப்பட்டனர்.

2006 – மட்டக்களப்பு மாவட்டத்தில் நெடுங்கல் கிராமத்தில் இடம்பெற்ற கண்ணிவெடியில் சிக்கி 6 மாதக் குழந்தை உட்பட 10 பேர் கொல்லப்பட்டனர்.

2007 – ஈழப்போர்: கொழும்பு விடுதிகளில் இருந்து தமிழர் கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர்.

2013 – சீனாவின் சியாமென் நகரில் பேருந்து ஒன்று தீப்பற்றியதில் 47 பேர் உயிரிழந்தனர்.

2014 – காங்கோ மக்களாட்சிக் குடியரசில், தெற்கு கீவு மாகாணத்தில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 37 பேர் கொல்லப்பட்டனர்.

பிறந்த நாள்  

1914 – கே. ஏ. அப்பாசு, தமிழக எழுத்தாளர், தயாரிப்பாளர், இதழியலாளர் (இ. 1987)

1917 – குவெண்டலின் புரூக்ஸ், அமெரிக்கக் கவிஞர் (இ. 2000)

1952 – ஓரான் பாமுக், நோபல் பரிசு பெற்ற துருக்கிய-அமெரிக்க எழுத்தாளர்

1953 – லதா, தென்னிந்தியத் திரைப்பட நடிகை

1954 – ஜெயந்தி நடராஜன், தமிழக அரசியல்வாதி

1959 – மைக் பென்சு, அமெரிக்காவின் 48வது துணை அரசுத்தலைவர்

1963 – வினோ நோகராதலிங்கம், இலங்கைத் தமிழ் அரசியல்வாதி

1964 – கிரகெம் லெப்ரோய், இலங்கைத் துடுப்பாளர்

1972 – கார்ல் அர்பன், நியூசிலாந்து நடிகர்

1974 – பியர் கிரில்ஸ், ஆங்கிலேய நூலாசிரியர், தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளர்

1974 – மகேஷ் பூபதி, இந்திய டென்னிசு வீரர்

1981 – அன்னா கோர்னிகோவா, உரிசிய டென்னிசு வீராங்கனை

நினைவு நாள்  

1906 – பொன்னம்பலம் குமாரசுவாமி, இலங்கை அரசியல்வாதி (பி. 1849)

1935 – இவான் மிச்சூரின், உருசியத் தாவரவியலாளர் (பி. 1855)

1954 – அலன் டூரிங், ஆங்கிலேயக் கணிதவியலாளர், கணினியியலாளர் (பி. 1912)

1970 – இ. எம். பிராஸ்டர், ஆங்கிலேய புதின எழுத்தாளர் (பி. 1879)

1978 – ரொனால்டு ஜார்ஜ் ரெய்போர்டு நோரிசு, நோபல் பரிசு பெற்ற ஆங்கிலேய வேதியியலாளர் (பி. 1897)

1999 – மு. செ. விவேகானந்தன், ஈழத்துக் கவிஞர், பாடகர், இசையமைப்பாளர், நடிகர் (பி. 1943)

2002 – பசப்பா தனப்பா ஜாட்டி, இந்தியாவின் 5வது துணைக் குடியரசுத் தலைவர் (பி. 1912)

2008 – அல்லாடி ராமகிருஷ்ணன், இந்திய இயற்பியலாளர் (பி. 1923)

சிறப்பு நாள்  

உலக உணவு பாதுகாப்பு நாள்


Share Tweet Send
0 Comments
Loading...