வரலாற்றில் இன்று ஜூன் 16

வரலாற்றில் இன்று ஜூன் 16

நிகழ்வுகள்

  • 1903ல் போர்ட் தானுந்து நிறுவனம் நிறுவனமயப்படுத்தப்பட்டது.
  • 1903ல் ருவால் அமுன்சென் தனது முதலாவது வடமேற்குப் பெருவழியின் கிழக்கு-மேற்கு நோக்கிய கடற்பயணத்தை ஒசுலோவில் இருந்து ஆரம்பித்தார்.
  • 1911ல் ஐபிஎம் நிறுவனம் நியூயார்க்கில் ஆரம்பிக்கப்பட்டது.
  • 1911ல் 772 கிராம் எடையுள்ள விண்வீழ்கல் விஸ்கொன்சின் கில்போர்ன் நகரில் வீழந்தது.
  • 1922ல் அயர்லாந்து சுயாதீன மாநிலத்தில்திடம்பெற்ற பொதுத்தேர்தலில் சின் பெயின் கட்சி பெரும்பான்மை இடங்களைக் கைப்பற்றியது.
  • 1940ல் லித்துவேனியாவில் கம்யூனிச அரசு ஆட்சிக்கு வந்தது.
  • 1944ல் ஐக்கிய அமெரிக்கா 14-வயது ஜார்ஜ் ஸ்டின்னி என்பவரை தூக்கிலிட்டது.
  • 1948ல் மலாயன் கம்யூனிச்டுக் கட்சி உறுப்பினர்கள் மூன்று பிரித்தானியத் தோட்ட அதிகாரிகளைக் கொன்றதை அடுத்து அங்கு அவசர காலச் சட்டம் கொண்டுவரப்பட்டது.
  • 1955ல் அர்கெந்தீனாவில் உவான் பெரோன் தலைமையிலான அரசைக் கவிழ்க்கும் பொருட்டு, அரசுக்கு ஆதரவான பேரணி ஒன்றின் மீது கடற்படையினர் குண்டுகள் வீசியதில் 364 பேர் கொல்லப்பட்டனர், 800 இற்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.
  • 1958ல் 1956 அங்கேரியப் புரட்சியில் ஈடுபட்ட தலைவர்கள் தூக்கிலிடப்பட்டனர்.
  • 1963ல் வஸ்தோக் 6: உருசியாவின் வலன்டீனா டெரெஷ்கோவா விண்வெளிக்குச் சென்ற முதல் பெண் என்ற பெருமையைப் பெற்றார்.
  • 1976ல் தென்னாபிரிக்காவில் சுவெட்டோவில் 15,000 கறுப்பின மாணவர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் காவற்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 566 மாணவர்கள் கொல்லப்பட்டனர்.
  • 1997ல் அல்சீரியாவில் நடத்த தீவிரவாதத் தாக்குதலில் 50 பொது மக்கள் கொல்லப்பட்டனர்.
  • 2010ல் பூட்டான் புகையிலைப் பயன்பாட்டை முற்றாகத் தடை செய்த முதலாவது நாடானது.
  • 2012ல் ஐக்கிய அமெரிக்க வான்படையின் தானியங்கி போயிங் எக்ஸ்-37 விண்ணூர்தி 469-நாள் பயணத்தின் பின்னர் பூமி திரும்பியது.
  • 2012ல் சீனா சென்சூ 9 விண்கலத்தை லியு யங் என்ற பெண் உட்பட மூவருடன் வெற்றிகரமாக ஏவியது.
  • 2013ல் வட இந்திய மாநிலமான உத்தராகண்டத்தில் பெரும் வெள்ளம், நிலச்சரிவுகள் இடம்பெற்றதில் பெரும் அழிவுகள் ஏற்பட்டன.

பிறந்த நாள்

  • 1723ல் இசுக்கொட்டிய மெய்யியலாளரும் பொருளியலாளருமான ஆடம் சிமித்  (இறப்பு 1790)
  • 1829ல் அமெரிக்க பழங்குடித் தலைவரான‌ யெரொனீமோ  (இறப்பு 1909)
  • 1888ல் உருசிய இயற்பியலாளரும் கணிதவியலாளருமான‌ அலெக்சாந்தர் ஃபிரீடுமேன்  (இறப்பு 1925)
  • 1891ல் உருசிய வானியலாளரான‌ விளாதிமிர் அலெக்சாந்திரோவிச் அல்பித்சுகி (இறப்பு 1952)
  • 1893ல் தமிழகத் தொழிலதிபரான‌ கருமுத்து தியாகராஜன் செட்டியார்  (இறப்பு 1974)
  • 1896ல் இந்தியத் துடுப்பாட்டக்காரரான‌ கோட்டா ராமசுவாமி (இறப்பு 1990)
  • 1902ல் அமெரிக்கத் தொல்லியலாளரான‌ ஜியார்ஜ் கேலார்ட் சிம்ப்சன்  (இறப்பு 1984)
  • 1902ல் நோபல் பரிசு பெற்ற அமெரிக்க மருத்துவரான பார்பரா மெக்லின்டாக் (இறப்பு 1992)
  • 1917ல் அமெரிக்கப் பதிப்பாளரான‌ கேத்தரின் கிரகாம்  (இறப்பு 2001)
  • 1921ல் சோவியத் உருசிய இயற்பியலாளரான‌ அலெக்சாந்தர் சுதக்கோவ்  (இறப்பு 2001)
  • 1924ல் தென்னிந்தியத் திரைப்பட நடிகர், பாடகர், தயாரிப்பாளர், இசையமைப்பாளரான டி. ஆர். மகாலிங்கம் (இறப்பு 1978)
  • 1930ல் அங்கேரிய-அமெரிக்க ஒளிப்பதிவாளரரும் தயாரிப்பாளருமான வில்மோஸ் சிக்மண்ட்  (இறப்பு 2016)
  • 1934ல் தென்னிந்திய நடிகையும் பரதநாட்டியக் கலைஞரும் பாடகியுமான‌ குமாரி கமலா
  • 1937ல் அமெரிக்க எழுத்தாளரான‌ எரிக் செகல்  (இறப்பு 2010)
  • 1940ல் இந்திய உச்சநீதிமன்ற நீதிபதியான என். சந்தோசு எக்டே
  • 1950ல் இந்திய நடிகரும் அரசியல்வாதியுமான மிதுன் சக்கரவர்த்தி
  • 1958ல் ஆத்திரேலிய போர்வீரரும் இசைக்கலைஞருமான அபு சயாப்
  • 1971ல் அமெரிக்க ராப் இசைக்கலைஞரும் தயாரிப்பாளருமன‌ டூப்பாக் ஷகூர்  (இறப்பு 1996)
  • 1986ல் தென்னிந்திய நடிகையான அஞ்சலி

நினைவு நாள்

  • 1925ல் இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளரும் அரசியல்வாதியுமான சித்தரஞ்சன் தாஸ் இறப்பு நாள் (பிறப்பு 1870)
  • 1940ல் லூயி பாஸ்டர் கண்டுபிடித்த விசர்நாய்க் கடி தடுப்பூசி மருந்தை தன் மேல் செலுத்தி சோதனை செய்த முதலாவது நபரான யோசப் மைசிட்டர் இறப்பு நாள் (பிறப்பு 1876)
  • 1944ல் வங்கக் கல்வியாளரும் வேதியியலாளரும் சமூக சேவையாளருமான‌ பிரபுல்ல சந்திரராய் இறப்பு நாள் (பிறப்பு 1861)
  • 1977ல் செருமானிய-அமெரிக்க இயற்பியலாளரும் பொறியியலாளருமான‌ வெர்னர் வான் பிரவுன் இறப்பு நாள் (பிறப்பு 1912)
  • 2015ல் இந்தியக் கட்டிடக்கலைஞரான‌ சார்லசு கோர்ரியா இறப்பு நாள் (பிறப்பு 1930)
  • 2016ல் ஆங்கிலேய அரசியல்வாதியான‌ எலன் ஜோ காக்சு இறப்பு நாள் (பிறப்பு 1974)
  • 2017ல் செருமனியின் 6வது அரசுத்தலைவரான எலன் ஜோ காக்சு இறப்பு நாள் (பிறப்பு 1930)

Share Tweet Send
0 Comments
Loading...