வரலாற்றில் இன்று ஜூன் 11..!

வரலாற்றில் இன்று ஜூன் 11..!

நிகழ்வுகள்

1895 – வரலாற்றில்  முதலாவது தானுந்து ஓட்டப் பந்தயம்  பாரிசில் நடைபெற்றது. ‌

‌1898 – சீனாவில் சமூக, அரசியல் கல்வி சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த நூறு நாள்கள் சீர்திருத்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால், இத்திட்டம் 104 நாட்களின் பின்னர் பேரரசி டோவாகர் சிக்சியினால் இடைநிறுத்தப்பட்டது.‌‌

1901 – நியூசிலாந்து தன்னுடன் குக் தீவுகளை இணைத்துக் கொண்டது.‌‌

1903 – செர்பியாவில் அதிகாரிகள் குழு ஒன்று அரசர் மாளிகையைத் தாக்கி மன்னர் அலெக்சாந்தர் ஒப்ரெனோவிச்சையும், அரசி திராகாவையும் படுகொலை செய்தனர்.‌‌

1917 – கிரேக்க இராச்சியத்தின் மன்னராக அலெக்சாந்தர் முடி சூடினார்.‌‌

1935 – அமெரிக்கக் கண்டுபிடிப்பாளர் எட்வின் ஆர்ம்ஸ்ட்ரோங் உலகின் முதலாவது பண்பலை ஒலிபரப்பை நியூ ஜேர்சி, அல்ப்பைனில் அறிமுகப்படுத்தினார்.‌‌

1937 – பெரும் துப்புரவாக்கம்: சோவியத் ஒன்றியத்தில் யோசப் ஸ்டாலினின் உத்தரவுப்படி எட்டு இராணுவத் தலைவர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.‌‌

1940 – இரண்டாம் உலகப் போர்: மால்ட்டா மீது முதற் தடவையாக இத்தாலிய விமானங்கள் தாக்குதலை நடத்தின.‌‌

1942 – இரண்டாம் உலகப் போர்: அமெரிக்கா சோவியத் ஒன்றியத்துக்கு கடன்-ஒப்பந்தத்தில் நிவாரணம் வழங்க ஒப்புக் கொண்டது.‌‌

1955 – பிரான்சில் நடைபெற்ற தானுந்து ஓட்டப் பந்தயம் ஒன்றில் இரண்டு தானுந்துகள் மோதிக் கொண்டதில் 83 பார்வையாளர்கள் உயிரிழந்தனர், 100 பேர் வரை காயமடந்தனர்.‌‌

1956 – 1956 கல்லோயா படுகொலைகள்: இலங்கையின் வடக்கே கல்லோயாவில் சிங்களக் குடியேற்றிகள் நடத்திய தாக்குதலில் 150க்கும் கூடுதலான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.‌‌

1963 – தெற்கு வியட்நாமில் மத விடுதலையை வலியுறுத்தி திக் குவாங் டுக் என்ற பௌத்த மதகுரு தனக்குத் தானே தீமூட்டித் தற்கொலை செய்து கொண்டார்.‌‌

1964 – இரண்டாம் உலகப் போர் வீரர் வால்ட்டர் சைஃபர்ட் செருமனியின் கோல்ன் நகரில் ஆரம்பப் பள்ளி ஒன்றில் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் எட்டு மாணவர்களும், இரண்டு ஆசிரியர்களும் கொல்லப்பட்டனர். மேலும் பலர் காயமடைந்தனர்.‌‌

1968 – உலகத் தமிழ்க் கழகம் தேவநேயப் பாவாணர் தலைமையில் திருச்சிராப்பள்ளியில் அமைக்கப்பட்டது.‌‌

1981 – ஈரானில் 6.9 ரிக்டர் நிலநடுக்கம் ஏற்பட்டதில் 2,000 வரையில் உயிரிழந்தனர்.‌‌

1991 – ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் பேரறிவாளன் சிறையில் அடைக்கப்பட்டார்.‌‌

2002 – அன்டோனியோ மெயூச்சி என்பவரே தொலைபேசியை முதன் முதலில் கண்டுபிடித்தவர் என அமெரிக்கக் காங்கிரசினால் அறிவிக்கப்பட்டார்.‌‌

2004 – நாசாவின் காசினி-ஐசென் விண்ணுளவி சனிக் கோளின் ஃபீபி துணைக்கோளை அண்டிச் சென்றது.‌‌

2007 – கடும் மழை, வெள்ளம் காரணமாக வங்காள தேசத்தில் சிட்டகொங் நகரில் மண்சரிவு காரணமாக 130 பேர் உயிரிழந்தனர்.‌‌

2008 – கனடியப் பழங்குடியினரின் தங்கல் வசதிகள் உடைய பள்ளியில் இடம்பெற்ற முறைகேடுகளுக்காக கனடா பிரதமர் இசுட்டீவன் கார்ப்பர் கனடிய முதல் குடிமக்களிடம் பகிரங்க மன்னிப்புக் கோரினார்.‌‌

2010 – ஆப்பிரிக்காவில் முதலாவது உலகக்கோப்பை காற்பந்துப் போட்டிகள் தென்னாப்பிரிக்காவில் ஆரம்பமாயின.‌‌

2012 – ஆப்கானித்தானில் இடம்பெற்ற இரண்டு நிலநடுக்கங்கள் அங்கு நிலச்சரிவை ஏற்படுத்தியதில் ஒரு கிராமமே மூழ்கியது, 80 பேர் உயிரிழந்தனர்.‌‌

2018 – அமெரிக்க அரசுத்தலைவர் டோனால்ட் டிரம்ப்பிற்கும், வட கொரியா தலைவர் கிம் ஜொங்-உன்னுக்கும் இடையே சிங்கப்பூரில் பேச்சுவார்த்தை இடம்பெற்றது.

பிறப்புகள்

1908 – சோ. இளமுருகனார், ஈழத்துப் புலவர் (இ. 1975)‌‌

1930 – ஏ. சி. திருலோகச்சந்தர், தமிழகத் திரைப்பட இயக்குநர் (இ. 2016)‌‌

1933 – ஜீன் வைல்டர், அமெரிக்க நடிகர், இயக்குநர் (இ. 2016)‌‌

1947 – லாலு பிரசாத் யாதவ், பீகாரின் 20வது முதலமைச்சர்‌‌

1951 – மித்திர வெத்தமுனி, இலங்கைத் துடுப்பாட்ட வீரர் (இ. 2019)‌‌

1969 – பீட்டர் டிங்க்லேஜ்ரமெரிக்க நடிகர், தயாரிப்பாளர்‌‌

1986 – சயா லபஃப், அமெரிக்க நடிகர்‌‌

2004 – உத்ரா உன்னிகிருஷ்ணன், தென்னிந்தியத் திரைப்படப் பின்னணிப் பாடகி

இறப்புகள்

1970 – அலெக்சாண்டர் கெரென்சுகி, உருசிய அரசியல்வாதி (பி. 1881)‌‌

1979 – ஜான் வெயின், அமெரிக்க நடிகர், இயக்குநர் (பி. 1907)‌‌

1983 – கன்சியாம் தாசு பிர்லா, இந்தியத் தொழிலதிபர், அரசியல்வாதி (பி. 1894)‌‌

1994 – அ. துரைராஜா, இலங்கைப் பொறியியலாளர், கல்வியாளர் (பி. 1934)‌‌

1995 – பாவலரேறு பெருஞ்சித்திரனார், தமிழறிஞர் (பி. 1933)‌‌

2013 – வித்தியா சரண் சுக்லா, இந்திய அரசியல்வாதி (பி. 1929)‌‌

2016 – இந்தர் மல்கோத்ரா, இந்திய இதழாளர், நூலாசிரியர் (பி. 1930)

சிறப்பு நாள் ‌‌

அமெரிக்கர் வெளியேறிய நாள் (லிபியா)


Share Tweet Send
0 Comments
Loading...