வரலாற்றில் இன்று ஜுலை 3..!

வரலாற்றில் இன்று ஜுலை 3..!

நிகழ்வுகள்

1844 – ஐசுலாந்தில் கடைசிச் சோடி பெரிய ஆக்கு பறவைகள் கொல்லப்பட்டன.

1848 – அமெரிக்கக் கன்னித் தீவுகளில் அடிமைகள் விடுவிக்கப்பட்டனர்.

1849 – பிரான்சு உரோமைக் குடியரசு மீது படையெடுத்து திருத்தந்தை நாடுகளை மீள்வித்தது.

1863 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: கெட்டிசுபெர்க்கு சண்டையின் கடைசி நாள்.

1866 – புருசியாவின் வெற்றியுடன் ஆஸ்திரிய-புரூசியப் போர் முடிவுக்கு வந்தது.

1867 – தமிழ்நாடு விழுப்புரம் வளவனூர் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

1872 – 1823 இல் ஆரம்பிக்கப்பட்ட பட்டிக்கோட்டா குருமடம் யாழ்ப்பாணக் கல்லூரி என்ற பெயரில் வட்டுக்கோட்டையில் ஆரம்பிக்கப்பட்டது.

1890 – ஐடஹோ ஐக்கிய அமெரிக்காவின் 43வது மாநிலமாக இணைந்தது.

1940 – இரண்டாம் உலகப் போர்: செருமனியின் பிடியில் பிரெஞ்சுப் போர்க்கப்பல்கள் சிக்குவதைத் தடுக்க ஜிப்ரால்ட்டரில் இருந்து புறப்பட்ட பிரித்தானியப் போர்க் கப்பல்களால் தாக்கப்பட்டதில் பிரான்சின் மூன்று கப்பல்கள் 1200 கடற்படையினருடன் மூழ்கின.

1944 – இரண்டாம் உலகப் போர்: பெலருசின் தலைநகர் மின்ஸ்க் சோவியத் செஞ்சேனைப் படையினரால் நாட்சி செருமனியிடம் இருந்து விடுவிக்கப்பட்டது.

1952 – புவேர்ட்டோ ரிக்கோவின் அரசமைப்புச் சட்டத்தை ஐக்கிய அமெரிக்க சட்டமன்றம் ஏற்றுக்கொண்டது.

1969 – விண்வெளிப் போட்டி: சோவியத் ஒன்றியத்தின் என்1 என்ற ஏவூர்தி ஏவுதளத்திலேயே வெடித்துச் சிதறியது.

1970 – வட அயர்லாந்து, பெல்பாஸ்ட் நகரில் போல்சு என்ற இடத்தில் ஐரிசு தேசியவாதிகளைத் தேடும் பணிக்காக 3 நாட்கள் ஊரடங்கு நடைமுறைக்கு வந்தது. நூற்றுக்கணக்கானோர் பிரித்தானியக் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.

1970 – பிரித்தானிய விமானம் எசுப்பானியாவில் மலையொன்றுடன் மோதியதில் 113 பேர் கொல்லப்பட்டனர்.

1988 – அமெரிக்கப் போர்க் கப்பல் வின்செனசு பாரசிக வளைகுடா மீது பறந்த ஈரானிய பயணிகள் விமானம் ஒன்றை சுட்டு வீழ்த்தியதில் அதில் பயணம் செய்த அனைத்து 290 பேரும் கொல்லப்பட்டனர்.

2006 – பூமியில் இருந்து 432,308 கிமீ தூரத்தில் 2004 எக்சு.பி14 என்ற சிறுகோள் பறந்தது அவதானிக்கப்பட்டது.

2013 – எகிப்தில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியை அடுத்து அரசுத்தலைவர் முகம்மது முர்சி இராணுவத்தினரால் பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.

பிறந்த நாள்

1782 – பியெரி பெர்தியர், பிரெஞ்சு புவியியலாளர் (இ. 1861)

1883 – பிரான்ஸ் காஃப்கா, செக்-ஆத்திரிய எழுத்தாளர் (இ. 1924)

1918 – எஸ். வி. ரங்கராவ், தென்னிந்தியத் திரைப்பட நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் (இ. 1974)

1920 – நா. சண்முகதாசன், ஈழத்தமிழ்த் தொழிற்சங்கவாதி, இடதுசாரி மாவோயிச அரசியல்வாதி (இ. 1993)

1923 – டி. ஆர். பாப்பா, தமிழக திரைப்பட இசையமைப்பாளர், வயலின் இசைக் கலைஞர் (இ. 2004)

1924 – செல்லப்பன் ராமநாதன், சிங்கப்பூரின் 6வது குடியரசுத் தலைவர் (இ. 2016)

1928 – எம். எல். வசந்தகுமாரி, கருநாடக இசைப் பாடகர் (இ. 1990)

1942 – அடூர் கோபாலகிருஷ்ணன், கேரளத் திரைப்பட இயக்குநர்

1948 – கோ. இளவழகன், தனித்தமிழ் இயக்கச் செயற்பாட்டாளர்

1949 – நெ. அப்துல் அஜீஸ், இந்திய அரசியல்வாதி

1952 – வசீம் ராஜா, பாக்கித்தானியத் துடுப்பாட்ட வீரர் (இ. 2006)

1962 – டாம் குரூஸ், அமெரிக்க நடிகர்

1971 – ஜூலியன் அசாஞ்சு, விக்கிலீக்ஸ் நிறுவனர்

1980 – அர்பஜன் சிங், இந்தியத் துடுப்பாளர்

1982 – கனிகா இந்திய நடிகை, பாடகி

1986 – கிரத்திக்கா தீர், இந்தியத் தொலைக்காட்சி நடிகை

1987 – செபாஸ்டியன் வெட்டல், செருமானிய மோட்டார் பந்தய வீரர்

நினைவு நாள்

1904 – தியோடோர் எர்ட்செல், ஆசுத்திரிய ஊடகவியலாளர், நாடகாசிரியர் (பி. 1860)

1954 – எஸ். வி. சுப்பையா பாகவதர், தமிழ்த் திரைப்பட, நாடக நடிகர், பாடகர்

1971 – ஜிம் மோரிசன், அமெரிக்கப் பாடகர் (பி. 1943)

1996 – ராஜ்குமார், இந்தித் திரைப்பட நடிகர் (பி. 1926)


Share Tweet Send
0 Comments
Loading...