வரலாற்றில் இன்று ஜூலை 17..!

வரலாற்றில் இன்று ஜூலை 17..!

நிகழ்வுகள்

1902 – வில்லிசு கேரியர் முதலாவது குளிரூட்டியை நியூயோர்க்கில் உருவாக்கினார்.

1911 – யாழ்ப்பாணத்தில் தேசவழமைச் சட்டத்தின் திருமண விதிகளுக்கு மாற்றாக "யாழ்ப்பாண திருமண சிறப்புச் சட்டம்" கொண்டுவரப்பட்டது.

1917 – பிரித்தானிய அரச குடும்பத்தினரின் ஆண் வாரிசுகள் மட்டுமே வின்சர்ரென்ற பெயரைப் பெறுவார்கள் என்ற ஆணையை ஐக்கிய இராச்சியத்தின் ஐந்தாம் ஜோர்ஜ் மன்னர் பிறப்பித்தார்.

1918 – போல்செவிக்குகளின் உத்தரவின் பேரில் உருசியப் பேரரசர் இரண்டாம் நிக்கலாசும் அவரது முழுக் குடும்பத்தினரும் எக்கத்தரீன்பூர்க் நகரில் கொல்லப்பட்டனர்.

1918 – டைட்டானிக் கப்பலில் இருந்து 705 பேரைக் காப்பாற்றிய கர்பாத்தியா என்ற கப்பல் அயர்லாந்துக்கருகில் செருமானிய யூ-55 மூழ்கடிக்கப்பட்டதில் 5 பேர் உயிரிழந்தனர்.

1932 – நாட்சிக் குழுக்களுக்கும், எசுஎசு, எஸ்ஏ, மற்றும் செருமானியக் கம்யூனிசக் கட்சி உறுப்பினரக்ளுக்கும் இடையே கலவரம் மூண்டது.

1936 – எசுப்பானிய உள்நாட்டுப் போர்: எசுப்பானியாவில் அண்மையில் அமைக்கப்பட்ட இடதுசாரி அரசுக்கெதிராக இராணுவக் கிளர்ச்சி ஆரம்பமாகியது.

1944 – இரண்டாம் உலகப் போர்: கலிபோர்னியாவில் ஆயுதங்கள் ஏற்றிச் சென்ற இரண்டு கப்பல்கள் வெடித்ததில் 320 பேர் உயிரிழந்தனர்.

1945 – இரண்டாம் உலகப் போர்: நேச நாடுகளின் மூன்று முக்கிய தலைவர்கள் வின்ஸ்டன் சர்ச்சில், ஹாரி எஸ். ட்ரூமன், ஜோசப் ஸ்டாலின் ஆகியோர் போரில் தோல்வியடைந்த செருமனியின் எதிர்காலத்தை நிர்ணயிக்க செருமனியின் போட்சுடாம் நகரில் உச்சி மாநாட்டை நடத்தினர்.

1953 – அமெரிக்காவில் புளோரிடா மாநிலத்தில் விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியதில் 44 பேர் உயிரிழந்தனர்.

1955 – வால்ட் டிஸ்னி கலிபோர்னியாவில் டிஸ்னிலாண்ட்டைத் திறந்து வைத்தார்.

1967 – நாசாவின் சேர்வயர் 4 ஆளில்லா விண்கலம் சந்திரனில் "சைனஸ் மெடை" என்ற இடத்தில் மோதியது.

1968 – ஈராக்கில் இடம்பெற்ற புரட்சியில் அரசுத்தலைவர் அப்துல் ரகுமான் ஆரிஃப் பதவியில் இருந்து அகற்றப்பட்டு அகமது அசன் அல்-பாக்கர் தலைவரானார்.

1973 – ஆப்கானித்தான் மன்னர் முகமது சாகிர் ஷா கண் சிகிச்சைக்காக இத்தாலி சென்றிருந்த போது பதவியில் இருந்து அகற்றப்பட்டு அவரது உறவினர் முகமது தாவுத் கான் மன்னரானார்.

1975 – அமெரிக்காவின் அப்பல்லோ விண்கலமும் சோவியத்தின் சோயுசு விண்கலமும் விண்வெளியில் ஒன்றாக இணைந்தன. இரண்டு நாடுகளின் விண்கலங்கள் ஒன்றாக இணைந்தது இதுவே முதற் தடவையாகும்.

1976 – கனடாவின் மொண்ட்ரியால் நகரில் கோடை ஒலிம்பிக் விளையாட்டுகள் ஆரம்பமாயின. இனவொதுக்கல் காலத்தில் தென்னாப்பிரிக்காவில் நடந்த போட்டிகளில் கலந்து கொண்ட நியூசிலாந்து அணிக்கு எதிர்ப்புத் தெரிவித்து 25 ஆபிரிக்க நாடுகள் இப்போட்டிகளைப் புறக்கணித்தன.

1976 – கிழக்குத் திமோர் இந்தோனேசியாவுடன் இணைக்கப்பட்டு, அதன் 27வது மாகாணமானது.

1979 – நிக்கராகுவா அரசுத்தலைவர் அனஸ்தாசியோ சமோசா டெபாயில் பதவியில் இருந்து விலகி மயாமிக்குத் தப்பி ஓடினார்.

1979 – இலங்கையில் பயங்கரவாதத் தடைச் சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அடுத்த மூன்று நாட்களில் 47 தமிழ் இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.[2]

1981 – அமெரிக்காவில் கேன்சசு நகரில் நடைப் பாலம் ஒன்று இடிந்ததில் 114 பேர் உயிரிழந்தனர்.

1984 – ஐக்கிய அமெரிக்காவில் மது அருந்துவோருக்கான குறைந்த பட்ச வயது 18 இலிருந்து 21 ஆக அதிகரிக்கப்பட்டது.

1989 – திரு ஆட்சிப்பீடத்திற்கும் போலந்துக்கும் இடையே உறவுகள் புதுப்பிக்கப்பட்டன.

1994 – பிரேசில் இத்தாலியை வென்று உலக உதைபந்து உலகக்கிண்ணத்தைப் பெற்றது.

1996 – நியூயோர்க்கில் லோங் தீவில் பாரிசு சென்றுகொண்டிருந்த போயிங் 747 அமெரிக்க விமானம் வெடித்துச் சிதறியதில் அனைத்து 230 பேரும் உயிரிழந்தனர்.

1998 – பப்புவா நியூ கினியில் 7.0 அளவு நிலநடுக்கம் மற்றும் ஆழிப்பேரலை காரணமாக 10 கிராமங்கள் அழிந்தன. 2,700 பேர் உயிரிழந்தனர்.

1998 – பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றம் ஒன்றை நிரந்தரமாக அமைப்பதற்கான உடன்பாடு ரோம் நகரில் எட்டப்பட்டது.

2000 – பாட்னாவில் அலாயன்சு ஏர் வானூர்தி 7412 செயப் பிரகாஷ் நாராயண் பன்னாட்டு வானூர்தி நிலையத்தை அண்மித்தபோது, குடியிருப்புப் பகுதியில் மோதியதில் 60 பேர் உயிரிழந்தனர்.

2001 – சூலை 2000 விபத்தின் பின்னர் கான்கோர்டு மீண்டும் சேவையில் விடப்பட்டது.

2006 – இந்தோனேசியா, ஜாவாவில் 7.7 அளவு நிலநடுக்கம் மற்றும் ஆழிப்பேரலை காரணமாக 668 பேர் உயிரிழந்தனர்.

2006 – இந்தியா சத்தீஸ்கர் மாநிலத்தில் தந்தேவாடா மாவட்டத்தில் எர்ராபோரே நிவாரண முகாம் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 30 பேர் கொல்லப்பட்டனர்.

2007 – பிரேசிலில் விமானம் ஒன்று தரையில் மோதியதில் 199 பேர் உயிரிழந்தனர்.

2014 – ஆம்ஸ்டர்டாமில் இருந்து கோலாலம்பூர் நோக்கிச் சென்று கொண்டிருந்த மலேசியா எயர்லைன்சு விமானம் 17 உக்ரைன்-உருசிய எல்லையில் ஏவுகணைத் தாக்குதல் மூலம் சுட்டு வீழ்த்தப்பட்டதில் அதில் பயணம் செய்த அனைத்து 298 பேரும் கொல்லப்பட்டனர்.

2015 – ஈராக், தியாலாவில் நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் 120 பேர் கொல்லப்பட்டனர்.

பிறந்த நாள்

1881 – அலெக்சாண்டர் சவீனொவ், உருசிய சோவியத் ஓவியர் (இ. 1942)

1894 – ஜார்ஜஸ் இலமேத்ர, பெல்ஜிய மதகுரு, வானியலாளர் (இ. 1966)

1898 – பெரினிசு ஆபாட், அமெரிக்கப் படப்பிடிப்பாளர் (இ. 1991)

1899 – ஜேம்ஸ் காக்னி, அமெரிக்க நடிகர் (இ. 1986)

1941 – பாரதிராஜா, தமிழகத் திரைப்பட இயக்குனர்

1954 – அங்கெலா மேர்க்கெல், செருமனியின் 8வது அரசுத்தலைவர்

1957 – வெண்டி இலவுரல் பிரீடுமன், கனடிய-அமெரிக்க வானியலாளர்

1969 – கேரி கிரே, அமெரிக்க நடிகர்

1979 – மைக் வோகெல், அமெரிக்க நடிகர்

நினைவு நாள்

1790 – ஆடம் சிமித், இசுக்கொட்டிய மெய்யியலாளர், பொருளியலாளர் (பி. 1723)

1918 – உருசியாவின் இரண்டாம் நிக்கலாசு (பி. 1868), மற்றும் அவரது குடும்பம்

1919 – டி. எம். நாயர், இந்திய அரசியல்வாதி (பி. 1868)

1972 – ஜெரோம் எமிலியானுஸ்பிள்ளை, யாழ்ப்பாண ரோமன்-கத்தோலிக்க ஆயர் (பி. 1901)

1997 – இரா. கிருஷ்ணன், இந்தியத் திரைப்பட இயக்குநர் (பி. 1909)

2001 – கேத்தரின் கிரகாம், அமெரிக்கப் பதிப்பாளர் (பி. 1917)

2012 – மிருணாள் கோரே, இந்திய அரசியல்வாதி (பி. 1928)

2014 – சுபா ஜெய், மலேசியத் தொலைக்காட்சி, திரைப்பட நடிகை, (பி. 1976)

2015 – இழூல்சு பியான்கி, பிரெஞ்சு வாகன ஓட்ட வீரர் (பி. 1989)

சிறப்பு நாள்

சர்வதேச உலக நீதி தினம்


Share Tweet Send
0 Comments
Loading...