வரலாற்றில் இன்று ஜூலை 16..!

வரலாற்றில் இன்று ஜூலை 16..!

நிகழ்வுகள்

1661 – ஐரோப்பாவின் முதலாவது வங்கித்தாள்கள் சுவீடன் வங்கியினால் வெளியிடப்பட்டன.

1790 – கொலம்பியா மாவட்டம் அமெரிக்காவின் தலைநகரமாக அறிவிக்கப்பட்டது.

1809 – லா பாஸ் (இன்றைய பொலிவியாவில்) எசுப்பானிய முடியாட்சியில் இருந்து விடுதலையை அறிவித்தது. எசுப்பானிய அமெரிக்காவின் முதலாவது தனிநாடு பெதுரோ டொமிங்கோ முரில்லோ தலைமையில் அமைக்கப்பட்டது.

1849 – காத்தலோனியாவில் அந்தோனி மரிய கிளாரட் அமல மரியின் மறைப்போத மைந்தர்கள் சபையை (இன்றைய கிளரீசியன் அமைப்பு) நிறுவினார்.

1861 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: அரசுத்தலைவர் ஆபிரகாம் லிங்கனின் உத்தரவின் பேரில், அமெரிக்க ஒன்றியப் படைகள் வர்ஜீனியாவினுள் 25-மைல்கள் தூரம் அணிவகுத்துச் சென்றன.

1931 – எத்தியோப்பியாவின் முதலாவது அரசியலமைப்பை அதன் மன்னர் முதலாம் ஹைலி செலாசி வெளியிட்டார்.

1942 – பெரும் இன அழிப்பு: பிரெஞ்சு அரசு பாரிசில் உள்ள அனைத்து 13,152 யூதர்களையும் கைது செய்து அவுசுவிட்சு வதை முகாமுக்கு அனுப்பக் காவற்துறையினருக்கு உத்தரவிட்டது.

1945 – மன்காட்டன் திட்டம்: ஐக்கிய அமெரிக்கா புளுட்டோனியம்-கொண்ட அணுக்கரு ஆயுதங்களை நியூ மெக்சிகோ, அலமொகோர்தோ என்ற இடத்தில் வெற்றிகரமாக சோதித்தது.

1948 – 1948 அரபு - இசுரேல் போர்: இயேசு கிறிஸ்து வாழ்ந்த நாசரேத்து நகரத்தை இசுரேல் ஆக்கிரமித்தது.

1950 – உலகக்கிண்ண உதைப்பந்தாட்ட இறுதிப் போட்டியில் உருகுவே பிரேசிலை 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.

1950 – கொரியப் போர்: அமெரிக்கப் போர்க் கைதிகள் 31 பேர் வட கொரிய இராணுவத்தினரால் கொல்லப்பட்டனர்.

1951 – பெல்ஜியம் மன்னர் மூன்றாம் லியோபோல்ட் முடிதுறந்ததை அடுத்து, அவரது மகன் முதலாம் பாடோயின் புதிய மன்னராகப் பதவியேற்றார்.

1965 – பிரான்சையும் இத்தாலியையும் இணைக்கும் மோண்ட் பிளாங்க் சுரங்கப் பாதை திறக்கப்பட்டது.

1969 – அப்பல்லோ திட்டம்: அப்பல்லோ 11, நிலாவில் தரையிறங்க முதலாவது மனிதரை ஏற்றிக் கொண்டு கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து புறப்பட்டது.

1979 – ஈராக்கிய அரசுத்தலைவர் அசன் அல்-பாக்கிர் பதவி துறந்ததை அடுத்து சதாம் உசேன் தலைவரானார்.

1983 – சில்லி தீவுகளில் பிரித்தானியாவின் உலங்குவானூர்தி வீழ்ந்து விபத்துக்குள்ளாகியதில் 20 பேர் உயிரிழந்தனர்.

1989 – புளொட் அமைப்பின் தலைவர் உமாமகேஸ்வரன் கொழும்பில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

1990 – பிலிப்பீன்சில் 7.7 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதில் 1,621 பேர் உயிரிழந்தனர்.

1990 – உக்ரைன் சோவியத் குடியரசின் நிலத்துக்கு அக்குடியரசின் நாடாளுமன்றம் உரிமை கோரியது.

1995 – காங்கேசன்துறையில் விடுதலைப் புலிகளால் இலங்கை கடற்படையின் எடித்தாரா கப்பல் மூழ்கடிக்கப்பட்டது.

1999 – ஜான் எஃப். கென்னடியின் மகனும், மனைவியும் அத்திலாந்திக்குப் பகுதியில் மார்த்தாவின் திராட்சைத் தோட்டம் அருகே விமான விபத்தொன்றில் கொல்லப்பட்டனர்.

2004 – தமிழ்நாடு கும்பகோணத்தில் தனியார் பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற தீவிபத்தில் 94 பிள்ளைகள் தீயிற் கருகி மாண்டனர்.

2004 – மிலேனியம் பூங்கா சிக்காகோவில் அமைக்கப்பட்டது.

2006 – தென்கிழக்கு சீனாவில் இடம்பெற்ற கடற் சூறாவளியினால் 115 பேர் உயிரிழந்தனர்.

2013 – கிழக்கிந்தியாவின் பிகார் மாநிலத்தில் பாடசாலை ஒன்றில் நஞ்சு கலந்த மதிய உணவுண்ட 27 மாணவர்கள் உயிரிழந்தனர்.

பிறந்த நாள்

1194 – அசிசியின் புனித கிளாரா, இத்தாலியப் புனிதர் (இ. 1253)

1746 – கியூசெப்பே பியாசி, இத்தாலியக் கத்தோலிக்கப் பாதிரியார், கணிதவியலாளர், வானியலாளர் (இ. 1826)

1872 – ருவால் அமுன்சென், நோர்வேஜிய விமான ஓட்டி, நாடு-காண் பயணி (இ. 1928)

1888 – பிரிட்சு ஜெர்னிகி, நோபல் பரிசு பெற்ற டச்சு இயற்பியலாளர் (இ. 1966)

1896 – திறிகுவே இலீ, ஐநாவின் 1வது பொதுச் செயலர் (இ. 1968)

1907 – டி. ஆர். சுந்தரம், தென்னிந்தியத் திரைப்படத் தயாரிப்பாளர், இயக்குநர் (இ. 1963)

1909 – அருணா ஆசஃப் அலி, இந்திய விடுதலை இயக்கத் தன்னார்வலர் (இ. 1996)

1936 – யாசுவோ ஃபுக்குடா, சப்பானின் 91வது பிரதமர்

1936 – வெங்கட்ராமன் சுப்ரமணியம், இந்திய-ஆத்திரேலியத் துடுப்பாளர்

1942 – மார்கரெட் கோர்ட், ஆத்திரேலிய டென்னிசு வீராங்கனை

1947 – சிவகங்கை இராசேந்திரன், இந்தி எதிர்ப்புப் போராளி (இ. 1965)

1968 – தன்ராஜ் பிள்ளை, இந்திய வளைதடிப் பந்தாட்ட வீரர்

1968 – லாரி சாங்கர், அமெரிக்க மெய்யியலாளர், விக்கிப்பீடியா நிறுவனர்களில் ஒருவர்

1973 – ஷான் பொலொக், தென்னாப்பிரிக்கத் துடுப்பாளர்

1984 – கத்ரீனா கைஃப், பிரித்தானிய-இந்திய நடிகை

1989 – கேரத் பேல், வெல்சிய கால்பந்தாட்டக் காரர்

1989 – கிம் வூ-பின், தென்கொரிய நடிகர்

1990 – ஜேம்ஸ் மாஸ்லொவ், அமெரிக்க நடிகர்

நினைவு நாள்

1890 – வில்லியம் ஆர்ச்சர் போர்ட்டர், பிரித்தானிய வழக்கறிஞர், கல்வியாளர் (பி. 1825)

1916 – இலியா மெச்னிகோவ், உருசிய விலங்கியலாளர் (பி. 1845)

1989 – உமாமகேஸ்வரன், புளொட் அமைப்பின் தலைவர்

2009 – டி. கே. பட்டம்மாள், கருநாடக இசைப் பாடகி (பி. 1919)

2012 – இசுடீபன் கோவே, அமெரிக்கத் தொழிலதிபர் (பி. 1932)

2013 – பருண் டே, இந்திய வரலாற்றாய்வாளர், கல்வியாளர் (பி. 1932)


Share Tweet Send
0 Comments
Loading...