வரலாற்றில் இன்று ஜூலை 13..!

வரலாற்றில் இன்று ஜூலை 13..!

நிகழ்வுகள்

1900 – சீனாவுக்கு எதிரான எட்டு நாடுகள் கூட்டணி தியென்சினைக் கைப்பற்றியது.

1930 – முதலாவது உலகக்கோப்பை காற்பந்து போட்டிகள் உருகுவையில் ஆரம்பமாயின. லூசியென் லோரென்ட் பிரான்சுக்காக மெக்சிகோவுக்கு எதிராக முதலாவது கோலைப் போட்டார்.

1933 – செருமனியில் நாட்சி கட்சி தவிர்த்து அனைத்து அரசியல் கட்சிகளும் தடை செய்யப்பட்டன.

1938 – அவார்ட் இயூசு உலகைச் சுற்றி 91-மணி நேரத்தில் விமானத்தில் பறந்து உலக சாதனையை ஏற்படுத்தினார்.

1948 – இத்தாலியின் கம்யூனிசக் கட்சியின் தலைவர் பல்மீரோ டொக்ளியாட்டி நாடாளுமன்றத்துக்கு முன்னர் சுடப்பட்டார்.

1958 – ஈராக்கியப் புரட்சி: ஈராக்கில் மன்னராட்சி முடிவுக்கு வந்தது. அப்துல் கரீம் காசிம் நாட்டின் புதிய தலவரானார்.

1965 – மரைனர் 4 விண்கலம் செவ்வாய்க் கோளுக்குக் கிட்டவாகச் சென்று முதற்தடவையாக வேறொரு கோளின் மிக அண்மையான படங்களைப் பூமிக்கு அனுப்பியது.

1966 – குவாத்தமாலா நகரில் மனநோய் வைத்தியசாலையில் இடம்பெற்ற தீவிபத்தில் 225 பேர் கொல்லப்பட்டனர்.

1967 – நாசாவின் சேர்வெயர் 4 ஆளில்லா விண்கலம் ஏவப்பட்டது.

1969 – ஒந்துராசு காற்பந்து அணி எல் சால்வடோர் அணியிடம் தோற்றதை அடுத்து, ஒந்துராசில் சல்வதோர் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு எதிராகக் கலவரம் வெடித்தது.

1976 – கனடாவில் மரண தண்டனை முறை ஒழிக்கப்பட்டது.

1995 – எம்பி3 பெயரிடப்பட்டது.

1995 – இலங்கை இராணுவத்தினரின் முன்னேறிப்பாய்தல் நடவடிக்கைக்கு எதிராக விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் புக்காரா ரக விமானம் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டது.

2002 – பாஸ்டில் நாள் நிகழ்வுகளில் கலந்து கொண்ட பிரெஞ்சு அரசுத்தலைவர் ஜாக் சிராக் கொலை முயற்சி ஒன்றில் இருந்து உயிர் தப்பினார்.

2015 – நாசாவின் நியூ ஹரைசன்ஸ் விண்கலம் புளூட்டோவுக்கு அண்மையாக முதல் தடவையாக சென்றது.

2016 – பிரான்சில் நீசு நகரில் நடத்தப்பட்ட தீவிரவாதத் தாக்குதலில் 86 பேர் உயிரிழந்தனர், 400 பேர் காயமடைந்தனர்.

பிறந்த நாள்

1854 – மகேந்திரநாத் குப்தர், சுவாமி இராமகிருஷ்ணரின் சீடர் (இ. 1932)

1862 – கஸ்டவ் கிளிம்ட், ஆத்திரிய ஓவியர் (இ. 1918)

1913 – ஜெரால்ட் ஃபோர்ட், ஐக்கிய அமெரிக்காவின் 38வது அரசுத்தலைவர் (இ. 2006)

1918 – இங்மார் பேர்ஜ்மன், சுவீடியத் திரைப்பட இயக்குநர் (இ. 2007)

1920 – எசு. பி. சவாண், இந்திய அரசியல்வாதி (இ. 2014)

1925 – க. பசுபதி, ஈழத்து முற்போக்கு இடதுசாரி இலக்கியவாதி, கவிஞர் (இ. 1965)

1929 – வா. செ. குழந்தைசாமி, இந்தியப் பொறியியலாளர் (இ. 2016)

1935 – ஐ-இச்சி நெகிழ்சி, சப்பானிய வேதியியலாளர்

1938 – அனுருத்த ரத்வத்தை, இலங்கை அரசியல்வாதி (இ. 2011)

1942 – கா. காளிமுத்து, தமிழக அரசியல்வாதி (இ. 2006)

1943 – ரோகண விஜயவீர, இலங்கைப் புரட்சியாளர் (இ. 1989)

1947 – நவின்சந்திரா ராம்கூலம், மொரிசியசின் 3வது பிரதமர்

1953 – வைரமுத்து, தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர், கவிஞர்.

1954 – சரத்குமார், தமிழகத் திரைப்பட நடிகர், அரசியல்வாதி

1967 – ஹசான் திலகரத்ன, இலங்கைத் துடுப்பாளர்

1968 – மைக்கேல் பால்மர், சிங்கப்பூர் அரசியவாதி

1969 – அஸ்வினி, தென்னிந்தியத் திரைப்பட நடிகை (இ. 2012)

1973 – கனகா, தென்னிந்தியத் திரைப்பட நடிகை

1987 – சாரா கேனிங், கனடிய நடிகை

நினைவு நாள்

1827 – அகஸ்டீன்-ஜீன் ஃபிரெனெல், பிரெஞ்சு இயற்பியலாளர் (பி. 1788)

1951 – நவும் இதெல்சன், சோவியத்-உருசிய வானியலாளர் (பி. 1885)

2004 – சுவாமி கல்யாண் தேவ், இந்தியத் துறவி (பி. 1876)

2008 – சுசுமு ஓனோ, சப்பானியத் தமிழறிஞர் (பி. 1919)

2015 – எம். எஸ். விஸ்வநாதன், இந்தியத் திரைப்பட இசையமைப்பாளர் (பி. 1928)

2017 – மரியாம் மீர்சாக்கானி, ஈரானியக் கணிதவியலாளர் (பி. 1977)


Share Tweet Send
0 Comments
Loading...