கியூபா பற்றிய தகவல்கள்

கியூபா பற்றிய தகவல்கள்

கியூபாவின் தேசிய பாஷை ஸ்பானிஷ்.

உலகின் 105 ஆவது பெரிய தேசம் கியூபா.

கியூபாவிற்கு என்று ஒரு மதம் கிடையாது. பெரும்பாலான மக்கள் ரோமன் கத்தோலிக்கம் பின்பற்றுகிறார்கள்.

கியூபன் பிசோ மற்றும் கியூபன் கன்வெர்டபல் பீசோ என்று இரண்டு வகை நாணயங்களில் வர்த்தகம் உள்ளது. கியூபன் பிசோ சாதாரண வர்த்தகத்திற்கு, கன்வெர்ட்டிபிள் பிசோ உயர்வகை பொருள்களின் வர்த்தகத்திற்கு உபயோகப்படுகிறது.

எத்தனையோ வருடங்களாக பிடல் காஸ்ட்ரோ குடும்பத்தினர் மட்டுமே ஆட்சி புரியும் நாடு இது.

உள்நாட்டு உற்பத்தி 68.7 பில்லியன் டாலர். கியூபா உலகத்தின் 63வது பெரிய பொருளாதாரம் ஆகும்.

பெரும்பாலான வேலைகளுக்கு அரசாங்கமே ஆட்களை தேர்வு செய்து தங்களின் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது.

மீன், மருத்துவ பொருட்கள், காபி, மற்றும் சிட்ரஸ் பழ வகைகள் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

என்னை, உணவு, ரசாயன பொருட்கள், மற்றும் இயந்திரங்கள் இறக்குமதி செய்யப்படுகிறது.

99.8 சதவீத மக்கள் படிப்பறிவு உள்ள மக்கள்.உலகத்தின் மிகப்பெரிய லிட்ரேஸி அளவு உள்ள நாடு.

ஜனத்தொகை யின் அடிப்படையில் கரீபியன் தீவுகளில் மிகப்பெரிய நாடு.

உலகின் மிக சிறிய பறவை பீ ஹும்மிங் பறவை இங்கு உள்ளது. இதன் நீளம் இரண்டு அங்குலம்.

6 வயதிலிருந்து 15 வயதிற்கு உட்பட்ட அத்தனை குழந்தைகளும் பள்ளிகளில் சேர்க்கப்பட வேண்டும். அவர்கள் அணியும் சீருடை களிலிருந்து அவர்கள் என்ன வகுப்பில் படிக்கிறார்கள் என்று அறிந்து கொள்ளலாம்.

20 செய்தித்தாள்கள் உள்ளது.

2011 வரை வெளிநாட்டு வாகனங்கள் இறக்குமதி செய்ய தடை இருந்ததனால் 1959 ஆம் வருட காலகட்டத்தில் தயாரித்த கிளாசிக் கார்களை மட்டுமே பார்க்க முடிந்தது. தற்பொழுது அந்த தடை நீக்கப்பட்டு உள்ளதால். தற்கால கார்களை பார்க்கலாம்.

4 ஆயிரம் தீவுகள் உள்ள நாடு கியூபா.

ஃபிடல் காஸ்ட்ரோ பதவியேற்ற பின்னால் அங்கிருந்து 10 லட்சத்திற்கும் அதிகமானோர் அமெரிக்கா சென்று விட்டார்கள்.

மருத்துவர் மற்றும் நோயாளி விகிதம் மிக சிறப்பாக உள்ள நாடு கியூபா.உலக நாடுகளின் மருத்துவ முன்னேற்றத்திற்காக கியூபா தன் நாட்டு மருத்துவர்களை மற்ற நாடுகளுக்கு அனுப்புகிறது.

விமான நிலைய ஊழியர்கள், போலீசார்,மற்றும் ராணுவத்தில் உள்ளவர்களை படம் பிடிப்பதற்கு தடை உள்ள நாடு.

2008 ஆம் ஆண்டு வரை செல்போன் உபயோகிக்க தடை இருந்தது.

54 ஆண்டுகள் வரை அமெரிக்கா மற்றும் கியூபாவிற்கு இடையே உறவு என்பதே இல்லை. 2015 இல் இரு நாடுகளுக்கு இடையே உறவு மலர்ந்தது.

அரசாங்க வண்டிகள் நடந்து செல்பவர்களை ஏற்றிக் கொண்டு செல்லும்.

2013 இன் கணக்குபடி ஒரு கியூப நாட்டு பிரஜையின் வருமானம் மாதத்துக்கு 20 டாலர்.

2008 ஆம் ஆண்டு வரை யாருக்கும் கம்ப்யூட்டர் வாங்க அனுமதி இல்லை.

தேசத்தில் 5% மட்டுமே இன்டர்நெட் தொடர்பு உண்டு.

இந்த நாட்டின் பிரபல விளையாட்டுக்கள் பேஸ்பால் மற்றும் பாக்சிங்.

17 வயதுக்கு மேற்பட்ட மற்றும் 28 வயதுக்குள்பட்ட ஆண், பெண் அனைவரும் சில வருடங்கள் ராணுவத்தில் வேலை செய்தாக வேண்டும்.

ரேடியோ, மற்றும் டெலிவிஷன் அரசாங்க கட்டுப்பாட்டில்.

அனைவரும் ஓட்டளித்து ஆகவேண்டும்.

250க்கும் மேற்பட்ட மியூசியங்கள் உள்ள நாடு

49 ஆண்டுகள் ஜனாதிபதியாக இருந்த பிடல் காஸ்ட்ரோ 2008 ல் ராஜினாமா செய்தார்.

கியூபா நாட்டின் சிகர்ஸ் உலக புகழ் பெற்றது.


Share Tweet Send
0 Comments
Loading...