எங்கே எந்த மரம் ஏற்றது!

எங்கே எந்த மரம் ஏற்றது!

உயிருள்ள ஒரு மரத்தின் மதிப்பு ரூ.10 இலட்சம் மரம் நமக்கு என்ன தருகிறது?

மலர்கள், காய், கனிகள் தருகிறது . நிழல், குளிர்ச்சி, மழை தருகிறது
காற்றை சுத்தப்படுத்துகிறது .நாம் வெளியிடும் கார்பன் டைஆக்சைடை கிரகித்துக் கொண்டு, நமக்குத் தேவையான ஆக்சிஜனை வெளியிடுகிறது. கார்பன் டைஆக்சைடை கிரகித்துக் கொள்வதால் புவி வெப்பமடையும் விளைவை குறைக்கிறது.
மண்ணில் வேரோடி இருப்பதால், மண் அரிப்பைத் தடுக்கிறது. நிலச்சரிவுகளை தடுக்கிறது. மரத்தைச் சுற்றி நீர் சேகரமாகவதால், நிலத்தடி நீர் அதிகரிக்கிறது. காய்ந்த சருகு இலைகள் மண்ணுக்கு உரமாகின்றன. ஒரு ஐம்பது ஆண்டு வளர்ந்த மரம் பல லட்சம் ரூபாய் சொத்துக்குச் சமமான நன்மைகளைத் தருகிறது.
ரூ. 5.30 லட்சம் மதிப்புள்ள ஆக்சிஜனை வெளியிடுகிறது.
ரூ. 6.40 லட்சம் மதிப்புள்ள மண் அரிப்பைத் தடுக்கிறது.
ரூ. 10.00 லட்சம் மதிப்புள்ள உணவைத் தருகிறது.
ரூ. 10.30 லட்சம் மதிப்புள்ள காற்று மாசுபாட்டைத் தடுக்கிறது.

ஒரு மரம் தன் வாழ்நாளில் கிரகித்துக் கொள்ளும் கார்பன் டைஆக்சைடின் அளவு 1000 கிலோ.

மரங்களை மனிதர்கள் பல்வேறு வகைகளில் பயன்படுத்தி வருகிறார்கள். அவற்றை அறிந்து கொள்ள நம்மைச் சுற்றிப் பார்த்தால் போதும். அதன் பயன்களின் பட்டியலை இந்த ஒரு பக்கத்துக்குள் அடக்க முடியாது.

அத்தகைய மரங்களை எங்கே எந்தந்த மரங்களை நட்டு இயற்கையை பாதுகாக்கலாம் என்று கீழே காண்போம். அடுத்த தலைமுறைக்கு மரங்களின் வகைகளை எடுத்துரைப்போம்.

கோடை நிழலுக்கு


🌺வேம்பு
🌺தூங்குமூஞ்சி
🌺புங்கன்
🌺பூவரசு
🌺மலைப்பூவரசு
🌺காட்டு அத்தி
🌺வாத மரம்.

பசுந்தழை உரத்திற்கு


🌺புங்கம்
🌺வாகை இனங்கள்
🌺கிளைரிசிடியா
🌺வாதநாராயணன்
🌺ஒதியன்
🌺கல்யாண முருங்கை
🌺காயா
🌺சூபாபுல்
🌺பூவரசு.

கால்நடைத் தீவனத்திற்கு


🌺ஆச்சா
🌺சூபாபுல்
🌺வாகை
🌺ஒதியன்
🌺தூங்குமூஞ்சி
🌺கருவேல்
🌺வெள்வேல்.

விறகிற்கு


🌺வேலமரம்
🌺யூகலிப்டஸ்
🌺சவுக்கு
🌺குருத்தி
🌺நங்கு
🌺பூவரசு
🌺சூபாபுல்.

கட்டுமான பொருட்கள்


🌺கருவேல்
🌺பனை
🌺தேக்கு
🌺தோதகத்தி
🌺கருமருது
🌺உசில்
🌺மூங்கில்
🌺விருட்சம்
🌺வேம்பு
🌺சந்தனவேங்கை
🌺கரும்பூவரசு
🌺வாகை
🌺பிள்ளமருது
🌺வேங்கை
🌺விடத்தி

மருந்து பொருட்களுக்கு


🌺கடுக்காய்
🌺தானிக்காய்
🌺எட்டிக்காய்

எண்ணெய்க்காக


🌺வேம்பு
🌺பின்னை
🌺புங்கம்
🌺இலுப்பை
🌺இலுவம்

காகிதம் தயாரிக்க


🌺ஆனைப்புளி
🌺மூங்கில்
🌺யூகலிப்டஸ்
🌺சூபாபுல்

பஞ்சிற்கு


🌺காட்டிலவு
🌺முள்ளிலவு
🌺சிங்கப்பூர் இலவு

தீப்பெட்டித் தொழிலுக்கு


🌺பீமரம்பெருமரம்
🌺எழிலைப்பாலை
🌺முள்ளிலவு

தோல்பதனிடவும் மை தயாரிக்கவும்


🌺வாட்டில்
🌺கடுக்காய்
🌺திவி – திவி
🌺தானிக்காய்

நார் எடுக்க


🌺பனை
🌺ஆனைப்புளி
🌺தென்னை

பூச்சி மருந்துகளாகப் பயன்படுத்த


🌺வேம்பு
🌺புங்கம்
🌺ராம்சீதா
🌺தங்க அரளி

கோயில்களில் நட


🌺வேம்பு
🌺வில்வம்
🌺நாகலிங்கம்
🌺தங்க அரளி
🌺மஞ்சளரளி
🌺நொச்சி
🌺அரசு

குளக்கரையில் நட


🌺மருது
🌺புளி
🌺ஆல்
🌺அரசு
🌺நாவல்
🌺அத்தி
🌺ஆவி
🌺இலுப்பை

பள்ளிகளில் வளர்க்க


🌺நெல்லி
🌺அருநெல்லி
🌺களா
🌺விருசம்
🌺விளா
🌺வாதம்
🌺கொடுக்காப்புளி
🌺நாவல்

மேய்ச்சல் நிலங்களில் நட


🌺வெள்வேல்
🌺ஓடைவேல்,
🌺தூங்குமூஞ்சி

சாலை ஓரங்களில் நட


🌺புளி
🌺வாகை
🌺செம்மரம்
🌺ஆல்
🌺அத்தி
🌺அரசு
🌺மாவிலங்கு

அரக்கு தயாரிக்க


🌺குசும்
🌺புரசு
🌺ஆல்

நீர்ப்பரப்பில் (கண்மாய்) பயிரிட


🌺நீர்மருது
🌺நீர்க்கடம்பு
🌺மூங்கில்
🌺நாவல்
🌺தைல மரம்
🌺ராஜஸ்தான் தேக்கு
🌺புங்கன்
🌺இலுப்பை


Share Tweet Send
0 Comments
Loading...