பீர்க்கங்காயின் மருத்துவப் பயன்கள்

பீர்க்கங்காயின் மருத்துவப் பயன்கள்

பீர்க்கங்காய் வெள்ளரி இனத்தை சேர்ந்த ஒரு காய்கறி. பீர்க்கங்காய் இலை, விதைகள், வேர் என அனைத்திலும் மருத்துவ குணம் உள்ளது. பீர்க்கங்காயில் நார்ச்சத்து, வைட்டமின்கள் ஏ, பி, சி, துத்தநாகம், இரும்பு, ரிபோஃப்ளோ வின், மெக்னீசியம், தயாமின் மற்றும் தாது உப்புக்கள் உள்ளது.

பீர்க்கங்காயில் பிஞ்சுவை விட முற்றிய பீர்க்கங்காய் சமையலுக்கு சிறந்தது. பீர்க்கங்காயில் உள்ள வைட்டமின்கள் தொற்று நோய்க் கிருமிகள் தாக்காமல் உடலை பாதுகாக்கிறது. மேலும் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது.

பீர்க்கங்காயில் எல்லா விதமான வைட்டமின்களும், தாது உப்புக்களும் இருப்பதால், தொற்றுக் நோய் கிருமிகள் தாக்காமல் உடலைக் காத்து, நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது.

பீர்க்கங்காயின் நன்மைகள்:

  • தோல் சம்பந்தமான அனைத்து கோளாறுகளுக்கும் நல்ல தீர்வை கொடுக்கக் கூடியது பீர்க்கங்காய் ஆகும்.
  • இதன் இலைகளும் மருத்துவ குணம் உடையவை. இலைகளை கண்ணில் ஏற்படும்  வலிகள் மற்றும் வீக்கத்திற்கு அதன் சாற்றை போடுவதில் மூலம் விரைவில் குணம் அடையும்.
  • சிறுநீரக கோளாறுகளுக்கு  நன்கு  முற்றிய பீர்க்கங்காயை பயன்படுத்தப் படுகிறது.
  • பீர்க்கங்காயில்  இருக்கும்  வைட்டமின்கள் தோல் நோய்களையும் மற்றும் நீரழிவு நோய்களையும் குணப்படுத்துவதில் உதவுகின்றன.
  • பீர்க்கங்காயை உணவில் எடுத்து கொள்ள அதிக படியான காய்ச்சல், சளி தொல்லை, இருமலால் அவதி படுவோருக்கு நல்ல மருந்தாகப் பயன்படுகிறது.
  • ரத்த சோகையில் இருந்து விடுபட பீர்க்கங்காய் சாப்பிடலாம்.
  • பீர்க்கங்காயின் பழங்கள் நன்மை தர கூடியதே. அதை வாந்திக்கு பயன்படுத்தலாம்.  சுவாச கோளாறுகளுக்கும் அரு மருந்து.
  • மண்ணீரலில் ஏற்படும் புண்களை குணப்படுத்த பீர்க்கங்காயின் சாற்றை அதில் போடுவதன் மூலம் விரைவில் குணம் அடையும்.
  • உடலில் இருக்கும் எண்ணெய் சருமத்திற்கு இதனை பயன்படுத்த நல்லது. இதில் அடங்கி இருக்கும் கார்போஹைட்ரேட்டுகள் உடலுக்கு நல்ல ஆரோக்கியத்தை கொடுக்கிறது.
  • அனைத்து வகையான வைட்டமின்களும், தாது உப்புக்களும் அதிக அளவில் இருப்பதால், தொற்றுக் கிருமிகள் தாக்காமல் உடலைக் காத்து, நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது.
  • மஞ்சள் காமாலை நோய்க்கு பீர்க்கங்காய் சாறு மருந்தாகப் பயன்படுகிறது.
  • நீரிழிவு நோயாளிகள் பாகற்காய்க்கு மாற்றாக பீர்க்கங்காயைச் சேர்த்துக் கொள்ளலாம்.
  • சொறி, சிரங்கு, நாள்பட்ட புண்கள், காய்ச்சல் உள்ளவர்கள், பீர்க்கங்காய் சாம்பார் வைத்து சேர்த்துக்கொள்ளலாம். புண்கள், சொறி, சிரங்கு உள்ள இடங்களில் இலைச் சாற்றைத் தடவுதல் நல்லது.
  • இதன் விதைகள் பேதியை தடுக்கும், கபம் வெளியேற்றும், எண்ணெய் தோல் நோய்களுக்கு தடவும் மருந்தாகப் பயன்படும்.
  • வேரானது நீர்க் கோர்வைக்கும், மிதமான பேதி மருந்தாகவும் பயன்படுகிறது.
  • இதை கொண்டு தயாரிக்கப்படும் கஷாயம் மாதவிடாய் மற்றும் சிறுநீரகக் கோளாறுகளுக்கு பயன்படும்.


Share Tweet Send
0 Comments
Loading...