இருபத்தியொறு வகைகளுக்கு மேற்பட்ட பனைவகைகளில் இந்தவகை வாழ்வில் ஒருமுறைமட்டுமே பூக்கும்.அதோடு அது சிறிது காலத்தில் இறந்துவிடும்.நாம் காணும் சாதாரனபனை (Borassus-Palmyra palm) ஒவ்வொரு பருவத்திலும் பூக்கும் அதன் பெண்மரத்திலிருந்துதான் நமக்கு சுவையான நுங்கு கிடைக்கிறது...ஆனால் இந்த தாளிப்பனை அதன் வாழ்வில் ஒரே முறைமட்டுமே மிகப்பெரிய பூங்கொத்தை பூக்கிறது.அதில் லட்சக்கணக்கான மலர்களுண்டு.ஒரே மரத்திலேயே ஆண்,மற்றும் பெண் தன்மைகளைக் கொண்டிருக்கும்.காய்கள் காய்த்தபின் பனை வறண்டுவிடுகிறது.சுமாராக என்பதடிக்கு மேலான உயரமும்,நல்ல பருமனும்,பதினாறடி விட்ட அளவுள்ள ஒலைகளையும் கொண்டிருக்கிறது.

ஓலைச்சுவடிகள் எழுதுவதற்கு பயன்படுத்தப்படும், வாழ்நாளில் ஒரே ஒரு முறை மட்டும் பூக்கும், 100 அடி உயரமுள்ள அரிய வகை கூந்தப் பனை மரம், பண்டைய காலங்களில் ஓலைச்சுவடிகள் எழுதுவதற்கு தேவையான ஓலைச் சுவடிகள் தாழிப்பனை மரங்களில் இருந்தே பெறப்பட்டன.
குறிப்பாக, தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடக மாநிலங்களில் இந்த மரத்தை காண முடிந்தது. சாதாரண பனை மரம் வருடத்திற்கு ஒரு முறை காய் காய்க்கும். ஆனால், அரிய வகை மரமான தாழிப்பனை வாழ்நாளில் ஒரே ஒரு முறை மட்டுமே காய்க்கும் என்பது குறிப்பிடத்தக்கது. பண்டைய காலத்தில் ஓலை சுவடிகள் எழுத இந்த மரத்தில் இருந்து பெறப்படும் ஓலைகளைத்தான் பயன்படுத்த்தினார்களாம்.
இம்மரத்தின் ஓலைகளை பக்குவப்படுத்தி, சுவடிகள் எழுதப்பட்டன. தாழிப்பனை மரம் நன்கு வளர்ந்து 65 முதல் 70 ஆண்டுகளில் பூ பூக்கும்.
ஒரு முறை பூத்த பின், அந்த மரம் காய்ந்து விடும். பண்டைய காலத்தில் இம்மரத்தில் பூக்கின்றது என்பது தெரிந்தவுடன், பூவின் காம்பை வெட்டி அதிலிருந்து கள் இறக்குவார்களாம் இதற்க்கு காரணம், வாழ்நாளில் ஒரு முறை மட்டுமே பூப்பதால், அனைத்து சத்துகளும் கள்ளில் கிடைக்கிறது. இந்த கள்ளை குடித்தால் தீராத நோய்கள் நீங்குமாம் .
காலப்போக்கில் தாழிப்பனை இனம் மெல்ல மெல்ல அழியத் தொடங்கியது. தற்போது, தென்னிந்தியாவில் ஒரு சில இடங்களில் மட்டுமே இம்மரம் உள்ளதாக கூறப்படுகிறது. இந்தியாவைத் தவிர வேறு எந்த நாட்டிலும் தாழிப்பனை மரம் இல்லை என்பதால் இவ்வகை மரங்களை பாதுகாக்கபடவேண்டிய இயற்கையின் படைப்பில் மிகவும் அரிதான மரம் தாழிப்பனை.
தென்னிந்தியாவையும்,இலங்கையையும் தாயகமாக கொண்ட தாளிப்பனை.கம்போடியா,மியான்மர்,தாய்லாந்து,அந்தமான் தீவுகள் எங்கும் அதிக அளவில், காணப்பட்டிருக்கிறது.
"விசிறிப்பனை"
மன்னர்கள் காலத்தில் இப்போதைய மின்விசிறிகள் இல்லையே! அப்போது இந்த தாலிப்பனையின் நீண்ட மென்மையான ஒலைகளைக்கொண்டு "பங்கா" எனப்படும் பெரிய விசிறிகளைச் செய்து, பயன்படுத்தியிருக்கிறார்கள்.அதனால் இதற்கு விசிறிப்பனை என்கிற பெயரும் உண்டு....
"குடைப்பனை"
கேரளப் பகுதிகளில் தொடர்ந்து மழைபெய்து கொண்டிருப்பதால், இதன் கனமற்ற நீண்ட ஒலைகளின் மூலம் குடையை போன்ற தொப்பிகள் செய்து விவசாயப்பணிகளின் போது பயன்படுத்தி வந்திருக்கிறார்கள்.அதனால் இதற்கு குடப்பன-குடைப்பனை என்கிற பெயரும் உண்டு...
தாளி, தாளம், சீதாளி, சீதாளம், தேர்ப்பனை, ஈரப்பனை, ஆதம் என்ற பெயர்களும் உண்டு.சங்க காலத்தில் மாட்டு வண்டிகளுக்கு மேற்கூரையாகவும்,துறைமுகப் பகுதிகளில் இதன் ஓலைக்குடைகளின்கீழ் பலவிதமான கடைகளை நடத்தி வந்திருக்கிறார்கள்.