வரலாற்றில் இன்று மார்ச் 2..

வரலாற்றில் இன்று மார்ச் 2..

நிகழ்வுகள்

1956 – மொரோக்கோ பிரான்சிடம் இருந்து விடுதலை பெற்றது.

1958 – தி.மு.க. இந்திய மாநிலக் கட்சியாக அங்கீகரிக்கப்பட்டது.

1962 – பர்மாவில் இராணுவத் தளபதி நெ வின் இராணுவப் புரட்சி மூலம் ஆட்சியைக் கைப்பற்றினார்.

1969 – பிரான்சின் துலூஸ் நகரில் ஆங்கிலேய-பிரெஞ்சு கான்கோர்டு விமானம் தனது முதலாவது சோதனைப் பறப்பில் ஈடுபட்டது.

1970 – ரொடீசியா பிரித்தானியாவிடம் இருந்த பிணைப்பைத் துண்டித்து தன்னைக் குடியரசாக அறிவித்தது.

1972 – நாசாவின் பயனியர் 10 விண்கலம் வெளிக் கோள்களை ஆராய்வதற்காக புளோரிடாவில் இருந்து ஏவப்பட்டது.

1978 – செக் விண்வெளி வீரர் விளாதிமிர் ரெமேக் விண்வெளிக்குச் சென்ற முதலாவது உருசியர் அல்லது அமெரிக்கர் அல்லாத விண்வெளி வீரர் என்ற பெயரைப் பெற்றார்.

1989 – அனைத்து குளோரோபுளோரோகார்பன்களின் (CFC) தயாரிப்பையும் இந்நூற்றாண்டுக்குள் தடை விதிக்க 12 ஐரோப்பிய சமூக நாஅடுகள் உடன்பாட்டுக்கு வந்தன.

1990 – ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சியின் பிரதித் தலைவராக நெல்சன் மண்டேலா தெரிவு செய்யப்பட்டார்.

1991 – இலங்கையின் பாதுகாப்பு அமைச்சர் ரஞ்சன் விஜேரத்ன தொலைவில் இருந்து இயக்க்கப்பட்ட தானுந்துக் குண்டு ஒன்றின் மூலம் கொலை செய்யப்பட்டார்.

1992 – திரான்சுனிஸ்திரியா போர் ஆரம்பமானது.

1992 – ஆர்மீனியா, அசர்பைஜான், கசக்கஸ்தான், கிர்கிசுத்தான், மல்தோவா, சான் மரீனோ, தஜிகிஸ்தான், துருக்மெனிஸ்தான், உசுபெக்கிசுத்தான் ஆகிய நாடுகள் ஐநாவில் இணைந்தன.

1995 – யாகூ! நிறுவனமயப்படுத்தப்பட்டது.

1998 – வியாழனின் சந்திரனான ஐரோப்பாவில் அடர்ந்த பனிக்கட்டியின் கீழ் திரவநிலையில் கடல் இருப்பதாக கலிலியோ விண்கலம் தகவல் அனுப்பியது.

2002 – ஆப்கானித்தான் மீதான அமெரிக்க முற்றுகை: அனகோண்டா நடவடிக்கை ஆரம்பமானது. மார்ச் 19 இல் முடிவடைந்த இந்நடவடிக்கையில் 500 தாலிபான்களும் அல் காயிதா போராளிகளும், 11 மேற்கத்தையப் படையினரும் கொல்லப்பட்டனர்.

2017 – மாசுக்கோவியம், தென்னிசீன், ஒகனிசோன் ஆகிய தனிமங்கள் அதிகாரபூர்வமாக தனிம அட்டவணையில் சேர்க்கப்பட்டன.

பிறந்த நாள்

1896 – ரா. பி. சேதுப்பிள்ளை, தமிழறிஞர் (இ. 1961)

1917 – லாரி பேக்கர், இந்தியக் கட்டடக் கலைஞர் (இ. 2007)

1918 – ரஞ்சன், தமிழகத் திரைப்பட நடிகர் (இ. 1983)

1920 – கே. கணேஷ், இலங்கை மலையக எழுத்தாளர் (இ. 2004)

1923 – சுந்தரிபாய், தமிழக நகைச்சுவை நடிகை

1926 – முரே ரோத்பார்ட், அமெரிக்கப் பொருளியலாளர், வரலாற்றாளர் (இ. 1995)

1931 – மிக்கைல் கொர்பச்சோவ், சோவியத் ஒன்றியத்தின் அரசுத்தலைவர், அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர்

1931 – அழகிரி விசுவநாதன், தமிழக எழுத்தாளர்

1935 – குன்னக்குடி வைத்தியநாதன், வயலின் இசைக்கலைஞர் (இ. 2008)

1940 – மம்நூன் ஹுசைன், பாக்கித்தானின் 12வது அரசுத்தலைவர்

1948 – ஆந்திரேய் இலிந்தே, உருசிய-அமெரிக்க இயற்பியலாளர்

1949 – தினேஷ் குணவர்தன, இலங்கை அரசியல்வாதி

1963 – வித்தியாசாகர், இந்தியத் திரைப்பட இசையமைப்பாளர்

1968 – டேனியல் கிரெய்க், அமெரிக்க நடிகர்

1972 – சுபாஸ்கரன் அல்லிராஜா, இலங்கை-இங்கிலாந்து தொழிலதிபர்

1980 – ரிபெல் வில்சன், ஆத்திரேலிய நடிகை

1983 – ரவி கிருஷ்ணா, தென்னிந்தியத் திரைப்பட நடிகர்

1989 – நத்தலி இமானுவேல், ஆங்கிலேய நடிகை

1990 – டைகர் ஷெராப், இந்தியத் திரைப்பட நடிகர்.

நினைவு நாள்

1920 – தோட்டக்காடு ராமகிருஷ்ண பிள்ளை, தமிழக எழுத்தாளர் (பி. 1854)

1930 – டி. எச். லாரன்ஸ், ஆங்கிலேய புதின எழுத்தாளர், கவிஞர் (இ. 1885)

1939 – ஹாவர்ட் கார்ட்டர், ஆங்கிலேய தொல்லியலாளர், வரலாற்றாளர் (பி. 1874)

1949 – சரோஜினி நாயுடு, இந்தியாவின் முதல் பெண் ஆளுநர், இந்தியக் கவிஞர், செயற்பாட்டாளர் (பி. 1879)

1991 – ரஞ்சன் விஜேரத்ன, இலங்கை அரசியல்வாதி (பி. 1931)

2006 – குஞ்சுண்ணி, மலையாளக் கவிஞர் (பி. 1927)

2009 – ஜொவாவோ பேர்னார்டோ வியெய்ரா, கினி-பிசாவு அரசுத்தலைவர் (பி. 1939)

2016 – இரா. செல்வக்கணபதி, தமிழறிஞர், பேச்சாளர், எழுத்தாளர் (பி. 1940)


Share Tweet Send
0 Comments
Loading...