குறைவற்ற கூந்தலுக்கு..

குறைவற்ற கூந்தலுக்கு..

புறத்தோற்றத்தை சிறப்பாய் காட்டுவதில் முதன்மை வகிப்பது தலைமுடிதான். அதனால்தான், வாழ்க்கையில் எதை இழந்தும் கவலைப்படாத பலர், தலைமுடி உதிர்வதற்கு வாழ்க்கையே தொலைந்தது போல் வருத்தப்படுவார்கள். உடலின் உச்சியில் இருக்கும் அந்த அதிமுக்கியத்துவம் வாய்ந்த தலைமுடி பராமரிப்பின் முக்கிய அம்சங்கள் என்ன பார்க்கலாம் வாருங்கள்...

கூந்தல் வளர்ச்சிக்கும் சாப்பிடும் உணவிற்கும் தொடர்பு இருக்கிறது. வலுவான, நீளமான கூந்தலை பெறுவதற்கு ஒருசிலவகை உணவு வகைகளை தவறாமல் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

🍀கூந்தல் ஆரோக்கியத்திற்கு புரதம் அவசியமானது. முட்டையில் புரதம் அதிகம் நிறைந்திருக்கிறது. அது கூந்தல் அடர்த்தியாக வளர்வதற்கு தூண்டுகோலாகவும் விளங்குகிறது.

🍀ரோம கால்களின் வளர்ச்சிக்கு இரும்பு சத்து அவசியமானதாக இருக்கிறது. உடலில் இரும்பு சத்து குறைபாடு ஏற்பட்டால் முடி உதிர்வு தவிர்க்கமுடியாததாகிவிடும். அதை தவிர்க்க இரும்பு சத்து அதிகம் கொண்ட கீரை வகைகள், பச்சை இலை காய்கறிகளை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

🍀தினமும் ஒரு எலுமிச்சை பழத்தில் உள்ள சாறு பருகுவதும் நல்லது. அதில் இருக்கும் வைட்டமின் சி, ஜொலாஜன் உற்பத்திக்கு அவசியமானது. அது தலைமுடியை வலுவாக்க உதவும். கூந்தல் வளர்ச்சியையும் மேம்படும்.

🍀ஒமேகா - 3 கொழுப்பு அமிலங்கள் முடி வளரவும், கூந்தலை வலுப்படுத்தவும் உதவும். பாதாம் மற்றும் வால்நட் வகைகளில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் அதிகம் இருக்கிறது. ஆளி விதைகளை மதிய உணவுடன் சேர்த்து கொள்வதும் முடி வளர்ச்சியை அதிகரிக்க செய்யும்.

🍀முழுதானிய வகைகளில் இரும்பு, துத்தநாகம், வைட்டமின் பி போன்றவை நிறைந்திருக்கின்றன. மேலும் அதில் இருக்கும் பயோட்டினும் முடி வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது.

🍀தினமும் கேரட் ஜூஸ் பருகுவதும் கூந்தல் வளர்ச்சிக்கு வித்திடும். அதில் இருக்கும் வைட்டமின் ஏ ரோமக்கால்களின் வளர்ச்சிக்கு உதவுகிறது.

🍀அவகோடாவும் வைட்டமின் ஈ நிரம்பப்பெற்றது. காலை உணவுடன் சாலட்டாக அதனை சாப்பிடலாம்.

முடியை அழகாக்கும் கூந்தல் பராமரிப்பு

🍀அகத்திக்கீரை அல்லது பொன்னாங்கன்னி கீரையை அரைத்து தலைக்கு தேய்த்து வந்தால் முடி அடர்த்தியாக வளரும். எண்ணெயுடன் வெந்தயப்பொடியை சேர்த்து, தலையில் தடவி ஊறவைத்து குளித்தால் முடி நன்றாக வளரும்.

🍀புரோட்டீன் சத்து அதிகம் உள்ள உணவை சேர்த்துக் கொண்டால், முடி அடர்த்தியாக வளரும். ஆலிவ் ஆயில் பயன்படுத்தி மசாஜ் செய்து வந்தால், முடி வலிமை பெறும். காற்றழைச் சாறில் எண்ணெய் கலந்து தலையில் தேய்த்தால் அடர்த்தியாக வளரும்.

🍀நரைமுடியைத் தவிர்க்க சிறிது கருவேப்பிலை அரைத்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் நரை முடி கருமை பெறும். டீ, காபி அதிகம் குடிப்பதால் பித்த நரை உண்டாகும். எனவே, அதை தவிர்ப்பது நல்லது.

🍀மருதாணி, செம்பருத்தி, கருவேப்பிலை மூன்றையும் சம அளவில் எடுத்து அரைத்து, தலையில் தேய்த்து குளித்தால் நரைமுடி மாறும்.

🍀பேன் தொல்லை அதிகமாக இருந்தால், சீத்தாப்பழக் கொட்டையை இரண்டு நாட்கள் காய வைத்து பொடி செய்து தேங்காய் எண்ணெயில் கலந்து தலைக்கு தடவி குளிக்க வேண்டும்.

🍀பொடுகு நீங்க, வால் மிளகை ஊற வைத்து பால்விட்டு அரைத்து, தலையில் தடவி குளிக்கலாம். தேநீரை வடிகட்டிய பின், மிஞ்சும் தேயிலைத் தூளில் எலுமிச்சை சாறை பிழிந்து தலையில் தேய்த்துக் குளித்தால் முடி பளபளப்பாகும்.

🍀சிறிது சாதம் வடித்த கஞ்சியில் ஷாம்பூவை ஊற்றி தலையில் தேய்த்து குளித்தால், எண்ணெய்ப் பசை மற்றும் அழுக்கு நீங்கி கூந்தல் பளபளபாகும். தேங்காய் பாலைத்தலையில் ஊற வைத்துக் குளித்தால் முடி உதிர்வது நிற்கும்.


Share Tweet Send
0 Comments
Loading...