தினசரி நடப்பு நிகழ்வுகள் 19.2.2021 (Daily Current Affairs)

தினசரி நடப்பு நிகழ்வுகள் 19.2.2021 (Daily Current Affairs)

அறிவியல் தொழில்நுட்பம்

🔷ஆரம்ப நிலை மின் வாகன உற்பத்தி நிறுவனமான பை பீம் (Pi Beam) நிறுவனம் மலிவு விலையிலான இ-பைக் ஒன்றை நாட்டில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது

🔷பைமோ எனும் பெயரில் இது விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் விலை ரூ. 30 ஆயிரம் ஆகும்.

🔷இதனை உருவாக்கியிருக்கும் பை பீம் நிறுவனமானது மெட்ராஸ் ஐஐடி-க்கு சொந்தமான நிறுவனமாகும்.

எய்ட்ஸ் நோய்க்கு மருந்து கண்டுபிடித்துள்ள சென்னை ஐஐடி விஞ்ஞானிகள் !!

🔷சென்னை ஐஐடி உயிரி தொழில்நுட்பத் துறை பேராசிரியர் சந்தீப் சேனாபதி தலைமையில் ஆராய்ச்சியாளர்கள் எய்ட்ஸை குணப்படுத்தும் புதிய மருந்தை கண்டுபிடித்துள்ளனர்.

🔷எய்ட்ஸ் நோய் வைரஸ்கள் மருந்துகளை செயல்படாமல் செய்யக்கூடியவை. எனவே ஆராய்ச்சியாளர்கள் நோயின் பலவீனமான பகுதிகளின் மூலக்கூறு அமைப்பை ஆராய்ந்து, அதனை அழிக்கக் கூடிய மருந்தை கண்டுபிடித்துள்ளனர்.

🔷அதுமட்டுமல்லாமல், நவீன தொழில்நுட்பங்களைக் கொண்டு பல புதிய மருந்துகளை உருவாக்கக் கூடிய தரவுகளையும் சென்னை ஐஐடி விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.

திட்டங்கள்

இலவசமாக பால் வழங்கும் திட்டம் !!

🔷சிக்கிம் மாநிலத்தின் முதல்வரான தமாங் அந்த மாநிலத்தில் உள்ள மாணவிகளுக்கு இலவசமாக பால் வழங்கும் புதிய திட்டத்தினை துவக்கி வைத்தார்.

🔷இந்த திட்டம் மூலமாக ஒரு நாளிற்கு 1500 மாணவிகள் பயனடைவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு மாணவிக்கு 200 மில்லி பால் அரசு சார்பில் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

🔷மாணவ – மாணவிகள் மத்தியில் நோய் எதிர்ப்பு சக்தியினை அதிகரிக்க இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

நியமனங்கள்

ஐ.நா., செயலாளராக இந்தியர் நியமனம் !!

🔷ஐ.நா., வளர்ச்சி திட்டப் பிரிவின் நேர் உதவிச் செயலாளராக, இந்தியாவைச் சேர்ந்த உஷா ராவ் மோனரி நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை ஐ.நா., பொதுச் செயலர் அன்டோனியா குட்டரஸ் பிறப்பித்துள்ளார்.

🔷ஐ.நா., வளர்ச்சி திட்டப் பிரிவு, உலகின் பல்வேறு நாடுகளில், ஐ.நா., நிதியுதவியில் நடைபெறும் வளர்ச்சித் திட்டங்களை கண்காணிக்கும் பணியை மேற்கொண்டு வருகிறது.

🔷'பிளாக்ஸ்டோன் இன்ப்ராஸ்ட்ரக்சர்' குழுமத்தின் மூத்த ஆலோசகராக உள்ள, உஷா ராவ் மோனரி 30 ஆண்டுகளுக்கும் மேலாக அடிப்படை கட்டமைப்பு துறை முதலீடுகளில் அனுபவம் பெற்றவர்.

🔷இதுவரை இல்லாத வகையில், ஐ.நா.,வின் முக்கிய பொறுப்புகளில், உஷா ராவ் மோனரி உட்பட, ஏராளமான பெண்கள் இடம் பெற்று வருகின்றனர்.

தமிழ்நாடு

அரசு நடுநிலைப் பள்ளிக்கு ஐஎஸ்ஓ தரச்சான்று !!

🔷புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே ஆவணத்தான்கோட்டை அரசு நடுநிலைப் பள்ளிக்கு ஐஎஸ்ஓ தரச்சான்று வழங்கப்பட்டுள்ளது.

🔷ஆவணத்தான்கோட்டை மேற்கில் 1936-ல் தொடங்கப்பட்ட தொடக்கப்பள்ளி பின்னர், 1986-ல் நடுநிலைப் பள்ளியாகத் தரம் உயர்த்தப்பட்டது.

🔷166 மணவ, மாணவிகள் பயிலும் இப்பள்ளியில், தலைமை ஆசிரியர் உட்பட 7 ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். பள்ளி மாணவர்களுக்குத் தனி வாகனம், மாணவர்களுக்குக் காலை உணவு திட்டம், நேர்மை அங்காடி, நவீன கழிப்பறை, இறகுப் பந்து மைதானம், சிறுவர் பூங்கா, ஏசியுடன் கூடிய ஸ்மார்ட் வகுப்பறை ஆகிய வசதிகளுடன் பிளாஸ்டிக் பயன்பாடில்லாத பள்ளியாகவும் உள்ளது.

🔷மேலும், தனித்தனி பயிற்சியாளர்கள் மூலம் கராத்தே, யோகா, சிலம்பம், கணினி, ரோபோ, எழுத்துப் பயிற்சி ஆகியவை அளிக்கப்படுகின்றன. எங்கு போட்டி நடந்தாலும் மாணவர்களைப் பங்கேற்கச் செய்கின்றனர்.

🔷ஆசிரியர்களின் திறமைகளைப் பாராட்டி இப்பள்ளியைச் சேர்ந்த 7 ஆசிரியர்களுக்கும் 'புதுமை ஆசிரியர்கள்' எனும் சான்றிதழை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் த.விஜயலட்சுமி அண்மையில் வழங்கினார்.

🔷இதன் அடிப்படையில் தங்கள் பள்ளியை ஆய்வு செய்து ஐஎஸ்ஓ தரச் சான்றிதழ் வழங்குமாறு டெல்லியிலுள்ள ஒரு தரச்சான்று நிறுவனத்திடம் பள்ளியின் தலைமை ஆசிரியர் ப.கலைச்செல்வி விண்ணப்பித்தார்.

🔷இதைத் தொடர்ந்து, பள்ளியைப் பல கட்டங்களாக அந்த நிறுவனத்தினர் ஆய்வு செய்தனர். பின்னர், அந்நிறுவனத்தின் மூலம் பள்ளிக்கு ஐஎஸ்ஓ 9001:2015 எனும் சர்வதேச தரச் சான்று வழங்கப்பட்டது.

சாதனைகள்

கடலில் 36 கி.மீ தூரம் நீந்தி 12 வயது சிறுமி சாதனை !!

🔷ஆட்டிசம் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்த கடலில் 12 வயது சிறுமி 36 கி.மீ தூரம் நீந்தி சாதனை படைத்துள்ளார்.

🔷ஆட்டிசம் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்த, கடற்படை மாலுமி ஒருவரின் 12 வயது மகள், மும்பை பாந்த்ரா - வொர்லி கடல் பகுதியிலிருந்து, கேட் வே ஆப் இந்தியா வரை 36 கி.மீ தூரம் நீந்தி சாதனை படைத்தார்.

🔷கடற்படை வீரர் மதன் ராய் என்பவரின் மகள் ஜியா ராய் (12). ஆட்டிசத்தால் (மன இறுக்க கோளாறு) பாதிக்கப்பட்டவர்.

🔷இதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, இந்த சிறுமி கடலில் நீண்ட தூரம் நீந்தி சாதனை படைக்க விரும்பினார்.

🔷மும்பை பாந்த்ரா - வொர்லி கடல் பகுதியில் 8 மணி நேரம் 40 நிமிடத்தில் இவர் 36 கி.மீ தூரம் நீந்தி மும்பை கேட்வே ஆப் இந்தியா பகுதியை வந்தடைந்தார்.

🔷இந்த நிகழ்ச்சியை, மகாராஷ்டிரா நீச்சல் சங்கம், மத்திய இளைஞர் விளையாட்டுத்துறை அமைச்சகத்தின் உடல் தகுதி இந்தியா இயக்கம் ஆகியவை இணைந்து நடத்தியது.

🔷மும்பை நீர் விளையாட்டு சங்கத்தின் தலைவர் திருமிகு. ஜரிர் என் பாலிவாலா பரிசு கோப்பையை வழங்கி கெளரவித்தார்.

🔷இதற்கு முன்பு கடந்த ஆண்டு பிப்ரவரி 15 -ம் தேதி, ஜியா ராய், எலிபென்டா தீவில் இருந்து கேட்வே ஆப் இந்தியா வரை, 14 கி.மீ தூரத்தை 3 மணி நேரம் 27 நிமிடங்களில் நீந்தி கடந்தார்.

🔷ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டவர், கடலில் 14 கி.மீ தூரம் நீந்தி கடந்தது உலக சாதனையாக இருந்தது. இவர் தற்போது இந்த சாதனையை முறியடித்துள்ளார்.


Share Tweet Send
0 Comments
Loading...