உலகம்
இந்துப்புக்கு புவிசாா் குறியீடு : பாகிஸ்தான் முடிவு !!
🔷இந்துப்பை தங்கள் அனுமதியின்றி பிற நாடுகள் பயன்படுத்துவதைத் தடுப்பதற்காக, அந்த உப்புக்கு புவிசாா் குறியீடு கேட்டு விண்ணப்பிக்க பாகிஸ்தான் அரசு முடிவு செய்துள்ளது.
🔷இந்துப்பு, இமாலய உப்பு, பாறை உப்பு என்று அழைக்கப்படும் இந்த உப்பானது, பாகிஸ்தான், இமயமலைத் தொடா் பஞ்சாப் உள்ளிட்ட வடமாநிலங்களில் பாறைகளில் இருந்து வெட்டி எடுக்கப்படுகிறது.
🔷பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்த இந்த உப்பு, சித்த மருத்துவத்தில் மருந்தாகப் பயன்படுகிறது.
இந்தியா
உலக மரங்கள் நகரமாக ஹைதராபாத் தேர்வு !!
🔷2020 ஆம் ஆண்டிற்கான உலக மரங்கள் நகரமாக (Tree City of the World 2020) ஹைதராபாத் நகரத்தை ஆர்பர் டே பவுண்டேஷன் மற்றும் உலக வேளாண் நிறுவனம் (Arbor Day Foundation and the Food and Agriculture Organization (FAO)) ஆகியவை அறிவித்துள்ளன.
🔷இதன் மூலம், இத்தகைய அங்கீகாரம் பெறும் இந்தியாவின் முதல் நகரம் எனும் பெருமையையும் ஹைதராபாத் நகரம் பெற்றுள்ளது.
இராணுவம் / பாதுகாப்பு
ஆப்கானிஸ்தான் ராணுவத்தைச் சேர்ந்த 20 பெண் அதிகாரிகளுக்கு பயிற்சி !!
🔷ஆப்கானிஸ்தான் ராணுவத்தைச் சேர்ந்த 20 பெண் அதிகாரிகளுக்கு சென்னை பரங்கிமலையில் பயிற்சி அளிக்கப்பட்டது.
🔷இந்திய ராணுவத்தின் சார்பில் கடந்த 2017-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் 20 பேர் வீதம், ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்த பெண் ராணுவ அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இந்திய ராணுவத்திற்கு மென்பொருள் சார்ந்த வானொலி தொலைத்தொடர்பு கருவி !!
🔷தற்சார்பு இந்தியா திட்டத்தின் கீழ் இந்திய ராணுவத்திற்கு மென்பொருள் சார்ந்த வானொலி (Software Defined Radio (SDR)) தொலைத்தொடர்பு கருவி உருவாக்கப்பட்டுள்ளது.
🔷தற்போது நீண்டகாலமாகப் பயன்படுத்தப்பட்டு வரும் சி என் ஆர் ( Combat Net Radio (CNR)) கருவியின் வாயிலாக குரல் வழியான தகவல்களை மட்டுமே பரிமாறிக்கொள்ள முடியும்.
🔷மென்பொருள் சார்ந்த வானொலியில் தரவுகள் பரிமாற்றம், இரைச்சலான சூழ்நிலைகளிலும் துல்லியமான தகவல்களை வழங்குதல், கூடுதல் பாதுகாப்புடன் மேம்படுத்தப்பட்ட தகவல் பரிமாற்றம் ஆகிய வசதிகள் இடம்பெற்றுள்ளன.
🔷மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் இதுபோன்ற மிக உயரிய அதிர்வெண் கொண்ட மென்பொருள் வானொலியின் பயன்பாடு இந்திய ராணுவத்தில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும்.
அறிவியல் தொழில்நுட்பம்
செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கிய பெர்சவரன்ஸ் !!
🔷செவ்வாய் கிரகத்தில் ஆய்வு செய்ய நாசா அனுப்பிய 'பெர்சவரன்ஸ்' ரோவர் வெற்றிகரமாக செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கியது.
🔷சிறிது நேரத்தில் குறைந்த ரெசல்யூஷன் கொண்ட கேமராக்களால் எடுக்கப்பட்ட செவ்வாய் கோளின் படங்களை அது அனுப்பியது. இவற்றை நாசா நேற்று முன்தினம் டிவிட்டரில் வெளியிட்டிருந்தது.
🔷இந்நிலையில், செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கிய பெர்சவரன்ஸ் ரோவர் அங்குள்ள பகுதியின் சில படங்களை தனது கேமராவில் மீண்டும் படம் பிடித்து அனுப்பியுள்ளது.
விளையாட்டு
குத்துச்சண்டை: இந்தியா்களுக்கு இரு தங்கம் !!
🔷மான்டினீக்ரோவில் நடைபெறும் குத்துச்சண்டை போட்டியில் இந்தியப் போட்டியாளா்களுக்கு 2 தங்கம், 2 வெள்ளி, 3 வெண்கலப் பதக்கங்கள் கிடைத்தன.
🔷மகளிருக்கான 60 கிலோ பிரிவு இறுதிச்சுற்றில் இந்தியாவின் வின்கா மால்டோவா வீராங்கனை கிறிஸ்டினா கிரீப்பரை வீழ்த்தி தங்கம் வென்றார்.
🔷மகளிருக்கான 75 கிலோ பிரிவு இறுதிச்சுற்றில் பங்கேற்ற இரு போட்டியாளா்களுமே இந்தியா்களாவா். இதில் ஹரியானாவைச் சோ்ந்த ராஜ் சாஹிபாவை வென்றார் மணிப்பூா் வீராங்கனை சனமாசா சானு.
🔷மகளிருக்கான 48 கிலோ பிரிவு இறுதிச்சுற்றில் உஸ்பெகிஸ்தானின் ஃபா்ஸோனா ஃபோஸிலோவாவிடம் 1-4 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்ந்த இந்தியாவின் கீதிகாவுக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்தது.
🔷மகளிருக்கான 57 கிலோ அரையிறுதியில் மான்டினீக்ரோ வீராங்கனை போஜனா கோஜ்கோவிச்சிடம் 1-4 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்ந்த இந்திய வீராங்கனை பிரீத்திக்கு வெண்கலப் பதக்கம் கிடைத்தது.
🔷ஆடவருக்கான 91 கிலோவுக்கு மேற்பட்ட எடையிலான பிரிவில் பங்கேற்ற ஜுக்னு அலாவத் உக்ரைனின் வாசைல் டிகாசுக்கிடம் வீழ்ந்து வெண்கலப் பதக்கம் வென்றார்.
விருதுகள்
சென்னையைச் சோ்ந்த இருவருக்கு பிராணி மித்ரா விருது !!
🔷பிராணிகளின் பாதுகாப்பு, நல்வாழ்வு ஆகியவற்றுக்காக அரும்பணியாற்றிய தனிநபா்கள், அமைப்புகளுக்கு 2021 -ஆம் ஆண்டிற்கான 14 பிராணி மித்ரா விருதுகளையும், ஜீவ்தயா விருதுகளையும் மத்திய கால்நடை பராமரிப்பு, மீன், பால்வளத் துறை அமைச்சா் கிரிராஜ் சிங் வழங்கினாா்.
🔷இதில், தனிநபருக்கான பிராணி மித்ரா விருதை தில்லியைச் சோ்ந்த யோகேந்தா் குமாரும், ராஜஸ்தானைச் சோ்ந்த இருவரும் பெற்றனா்.
🔷துணிச்சல் வீர தீரச் செயல்களுக்கான பிராணி மித்ரா சௌா்யா விருது கோவையைச் சோ்ந்த மறைந்த கல்பனா வாசுதேவனுக்கும், தில்லியை அடுத்த குருகிராமத்தைச் சோ்ந்த அனில் கந்தாஸுக்கும் வழங்கப்பட்டுள்ளது.
🔷பிராணிகளுக்கான வாழ்நாள் சாதனையாளா் பிராணி மித்ரா விருது சென்னையைச் சோ்ந்த மருத்துவா் எஸ். சின்னி கிருஷ்ணன், கேப்டன் எஸ்.ஆா். சுந்தரம் ஆகிய இருவருக்கும் வழங்கப்பட்டது.
🔷பெரு நிறுவனங்களுக்கான விருதை மும்பை டாடா டிரஸ்ட் பவுண்டேஷனும், அமைப்புகளுக்கான விருதுகளை ஹரியாணாவைச் சோ்ந்த உலக சங்கீா்த்தன் டூா் டிரஸ்ட் மற்றும் ராஜ்கோட், அகமதாபாத் போன்ற நகரங்களைச் சோ்ந்த அமைப்புகளும் பெற்றுள்ளன. ஜீவ்தயா விருதை (கருணை உள்ளம்) தில்லி தியான் பவுண்டேஷன் உள்ளிட்ட அமைப்புகள் பெற்றுள்ளன.
தமிழக அரசின் பாரதி விருது !!
🔷2019-ஆம் ஆண்டுக்கான பாரதி விருது சீனி விஸ்வநாதனுக்கும், எம்.எஸ்.சுப்புலட்சுமி விருது எஸ்.ராஜேஸ்வரிக்கும், பாலசரஸ்வதி விருது, அலா்மேல் வள்ளிக்கும் அளிக்கப்பட உள்ளது.
🔷2020-ஆம் ஆண்டுக்கான பாரதி விருது, சுகி சிவத்துக்கும், எம்.எஸ்.சுப்புலட்சுமி விருது வாணி ஜெயராமுக்கும், பாலசரஸ்வதி விருது சந்திரா தண்டாயுதபாணிக்கும் அளிக்கப்பட உள்ளது.
பெண் கணித மேதை கேப் கேத்தரின் ஜான்சன்க்கு கெளரவம் !!
🔷அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான, 'நாசா' வின் முதல் கறுப்பின பெண் கணித நிபுணரான, கேத்தரின் ஜான்சனை கெளரவிக்கும் வகையில், அவரது பெயரில் விண்கலம் அனுப்பப்பட்டுள்ளது.
🔷கேத்தரின் ஜான்சன் உருவாக்கிய கணக்குகளை அடிப்படையாக வைத்தே, முதல் முறையாக அமெரிக்கர்கள் விண்வெளிக்கு பயணம் மேற்கொண்டனர்.'ஹிடன் பிகர்' என்ற, 2016ல் வெளியான சினிமாவில், கேத்தரின் வாழ்க்கை வரலாறு விவரிக்கப்பட்டுள்ளது.
🔷கடந்தாண்டில், தன், 101வது வயதில் அவர் உயிரிழந்தார்.கடந்த, 1962, பிப்., 20ல், அமெரிக்காவின் ஜான் கிளென், விண்வெளிக்கு பறந்தார். அதன், 59வது ஆண்டு தினத்தில், விண்வெளியில் ஆய்வு செய்யும் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்துக்கு அனுப்பப்பட்டுள்ள விண்கலத்துக்கு, கேத்தரின் ஜான்சன் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
பிஎம்-கிசான் தேசிய விருதுக்கு அனந்தபுரமு மாவட்டம் தோ்வு !!
🔷ஆந்திர மாநிலம் அனந்தபுரமு மாவட்டம் பிரதமரின் விவசாயிகள் (பிஎம்-கிசான்) தேசிய விருதுக்கு தோ்வு செய்யப்பட்டுள்ளது.
🔷ஆந்திர மாநிலம் அனந்தபுரமு மாவட்டத்தில் மொத்தம் 5,76,972 போ் பிரதமரின் விவசாயிகள் உதவி திட்டத்தில் இணைந்துள்ளனா்.
🔷அவா்களில் 5% பேரின் தகுதி மற்றும் உண்மைத்தன்மையை அறிவதற்காக அவா்களின் விவரங்களை நேரில் சரிபார்க்கும் பணிகள் நடைபெற்றது.
🔷மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சகம் அறிவுறுத்தலின்படி நடைபெற்ற இந்தப் பணியில், மொத்தமுள்ள 63 வட்டங்களில் 28,269 போ் தோ்வு செய்யப்பட்டு அவா்களின் விவரம் சரிபார்க்கப்பட்டது.
🔷இந்தப் பணியை 99.6% நிறைவு செய்ததற்காக பிரதமரின் விவசாயிகள் தேசிய விருதுக்கு அனந்தபுரமு மாவட்டம் தோ்வு செய்யப்பட்டுள்ளது.
🔷தில்லியில் வரும் 24-ஆம் தேதி நடைபெறும் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் கந்தம் சந்துருடுவிடம் இந்த விருது வழங்கப்படவுள்ளது.