நல்லெண்ணையின் நற்குணங்கள்

நல்லெண்ணையின் நற்குணங்கள்

அனைவரும் ஆலிவ் எண்ணெயில் மட்டும் தான் நிறைய சத்துக்கள் நிறைந்துள்ளன என்று நினைக்கிறோம். ஆனால் நல்லெண்ணெயிலும் அதிகளவு சத்துக்கள் அடங்கியுள்ளது.மேலும் இந்த எண்ணெய் சைவ உணவாளர்களுக்கு மிகச் சிறந்த ஒரு உணவுப் பொருள். ஏனெனில் இந்த எண்ணெயில், முட்டையில் நிறைந்துள்ள புரோட்டீனுக்கு நிகரான அளவில் புரோட்டீனானது நிறைந்துள்ளது.

எள்ளிலிருந்து ஆட்டி எடுக்கப்படும் நல்லெண்ணெய் வெளிப் பூச்சுக்கும், உணவுப் பொருளாகவும், மருந்துப்  பொருளாகவும் பயன்படுகிறது. இதனை உணவில் சேர்த்து சாப்பிடும் போது, குடலியக்கமானது சீராக செயல்பட்டு, செரிமானப் பிரச்சனை வராமல் இருக்கும்.

ஆரோக்கிய இதயம்
நல்லெண்ணெயில் சீசேமோல் என்னும் பொருள் நிறைந்துள்ளது. எனவே இதனை உணவில் அதிகம் சேர்க்கும் போது, அது இதயத்திற்கு சரியான பாதுகாப்பு அளித்து, இதய நோய் வராமல் தடுக்கிறது.

நீரிழிவு
நல்லெண்ணெயில் உள்ள அதிகப்படியான மக்னீசியம், இன்சுலின் சுரப்பை தடுக்கும் பொருளை எதிர்த்து போராடி உடலில் நீரிழிவு வருவதைத் தடுக்கும்.

வலுவான எலும்புகள்
நல்லெண்ணெயில் ஜிங்க் என்னும் கனிமச்சத்து அதிகம் நிறைந்துள்ளது. இது எலும்புகளில் கால்சியம் அதிகம் இருக்குமாறு பார்த்து கொள்ளும்.
எனவே எலும்புகள் வலுவுடன் இருக்க வேண்டுமெனில், கால்சியம் உணவுகளுடன், நல்லெண்ணெயையும் சாப்பிடுவது நல்லது.அதிலும் இந்த எண்ணெயை பெண்கள் அதிகம் சாப்பிடுவது மிகவும் நல்லது.

செரிமான பிரச்சனை
மற்ற எண்ணெய்களான கடுகு மற்றும் தேங்காய எண்ணெயை விட, நல்லெண்ணெய் மிகவும் லேசாக இருப்பதால் இதனை உணவில் சேர்த்து சாப்பிடும் போது, குடலியக்கமானது சீராக செயல்பட்டு செரிமானப் பிரச்சனை வராமல் இருக்கும்.

இரத்த அழுத்தம்
நல்லெண்ணெயில் இருக்கும் மக்னீசியம், இரத்த அழுத்தத்தைக் குறைக்க பெரிதும் உதவியாக இருக்கும்.
அதிலும் நீரிரிவு நோயாளிகளுக்கு, உயர் இரத்த அழுத்தம் இருந்தால் அவர்கள் நல்லெண்ணெயை சாப்பிடுவது நல்ல பலனைத் தரும்.

கல்லீரல் வலிமை பெற

மது மற்றும் இதர போதைப் பொருட்கள் உடலுக்கு தொடக்கத்தில் நன்மை செய்வது போல் தெரிந்தாலும், காலம் செல்ல செல்ல பல விதமான உடல் ஆரோக்கிய குறைபாடுகளை ஏற்படுத்தும். குறிப்பாக உடலின் மிக முக்கிய உறுப்புகளை பாதிப்படைய செய்யும். நல்லெண்ணெய் கொண்டு செய்யப்படும் உணவுகளை சாப்பிடுபவர்களுக்கு நல்லெண்ணெயில் இருக்கும் சத்துக்கள் கல்லீரலில் படிந்து, மது அருந்தும் போது, அதிலிருக்கும் ஆல்கஹால் கல்லீரலை பாதிக்காமல் பாதுகாக்கும் கவசமாக செயல்படுகிறது. மேலும் கல்லீரலில் இருக்கின்ற நச்சுதன்மையையும், நுண்கிருமிகளையும் வெளியேற்றுகிறது.

பளிச் பற்கள்
தினமும் காலையில் எழுந்து நல்லெண்ணெயால் வாயை கொப்பளித்தால், பற்களில் தங்கியிருக்கும் சொத்தைகள் நீங்குவதோடு, பற்கள் நன்கு பளிச்சென்று ஆரோக்கியமாக இருக்கும்.

அழகான சருமம்
நல்லெண்ணெயில் நிறைந்துள்ள ஜிங்க் சத்தால், சருமத்தின் நெகிழ்வுத் தன்மை அதிகரித்து, சருமத்தில் கொலாஜெனின் வளர்ச்சியை ஊக்குவிக்கும்.

புற்றுநோய் வராமல் காக்க

எந்த வகை வகையான புற்றுநோய் ஏற்படுவதையும் தடுப்பதில் நல்லெண்ணெய் சிறப்பாக செயல்படுகிறது. நல்லெண்ணெயில் போலேட் எனப்படும் கூட்டு வேதிப்பொருள் அதிகளவில் உள்ளது. மேலும் மக்னீசியச் சத்தும் நல்லெண்ணெயில் தேவைக்கு அதிகமான அளவிலேயே இருக்கின்றன. இந்த இரண்டு சத்துக்களும் குடல் மற்றும் ஈரல் பகுதிகளில் உண்டாகக்கூடிய புற்றுநோய்களை தடுப்பதில் பேருதவி புரிகிறது. அதனுடன் கால்சியம் சத்தும் நல்லெண்ணையில் அதிகமுள்ளது. இது வயிறு மற்றும் அவற்றுடன் தொடர்புடைய உறுப்புகளில் புற்றுநோய் ஏற்படாமல் தடுக்கிறது.

ஆர்த்ரைடிஸ் நோய் குணமாக

உடலில் சில அத்தியாவசிய சத்துக்கள் குறையும் போது எலும்புகளின் மூட்டுக்களில் வலி மற்றும் வீக்கம் அதிகம் ஏற்படுகின்றன. இத்தகைய பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்க நமது உணவில் செம்புச்சத்து அதிகம் இருப்பது அவசியம். நல்லெண்ணெயில் இந்த செம்புச் சத்து நிறைந்துள்ளன. நல்லெண்ணெய் கொண்டு செய்யப்பட்ட உணவுகளை சாப்பிடுபவர்களின் ரத்தத்தில் அந்த சத்துகள் கலந்து எலும்புகள் மற்றும் எலும்பை சார்ந்திருக்கும் தசைகளுக்கு வலிமையை தருகின்றன. குறிப்பாக ஆர்தரைட்டிஸ் எனப்படும் மூட்டுவலி நோய்களால் அவதிப்படுபவர்கள், அடிக்கடி நல்லெண்ணெய் கொண்டு செய்யப்பட்ட உணவுகளை சாப்பிடுவதால் மூட்டு வலி மற்றும் வீக்கங்கள் குறைவதை அனுபவபூர்வமாக உணர முடியும்.


Share Tweet Send
0 Comments
Loading...