நவகைலாயங்களில் துாத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள இரண்டு ஸ்தலங்களில் குரு ஸ்தலமாக முறப்பநாடு கைலாசநாதர் கோவில் அமைந்திருக்கிறது.
திருத்தலச் சிறப்புகள்: நவகயிலாயத்தில் ஐந்தாவதாக விளங்கும் இத்தலத்தின் இறைவன் குரு பகவான் அம்சமாக விளங்குகிறார்.
வரலாற்றுச் சிறப்பு:
இக்கோயிலை கட்டியவர் வள்ளல் மகாராஜா மிருந்த முனிவர் பாதயாத்திரை செய்த இடமும் ஸ்ரீ ராமர் பாதம் பட்ட இடமும் காஞ்சனர் மலைக்கு மோட்சம் அளித்த இடமும் இதுவே.
சோழ மன்னன் ஒருவன் தனக்கு குதிரை முகத்தோடு பிறந்த பெண்ணின் நிலையைக் கண்டு கவலைக் கொண்டான். பல திருக்கோயில்களுக்குச் சென்று சிவபெருமானை வணங்கி பின்பு இங்கு வந்து தட்சிண கங்கை தீர்த்தக் கட்டத்தில் நீராடவும் குதிரை முகம் நீங்கி மனித முகம் கொண்டு மிக அழகாக தோன்றினாள். இங்குள்ள நந்தி, மன்னன் மகளின் குதிரை முகத்தை தான் ஏற்றுக் கொண்டதால் குதிரை முகத்துடனே காட்சியளிக்கிறது. மன்னன் மகிழ்ந்து சிவபெருமானுக்கு இங்கு கோயில் கட்டினான். வல்லாள மகராஜா இத்திருக்கோயிலை பெரிதாகக் கட்டி பூஜை காரியங்கள் சிறப்பாக நடைபெற நிலபுலன்கள் எழுதி வைத்தான்.
இறைவன் அருள்மிகு கைலாசநாதர்
இறைவி அருள்மிகு சிவகாமி
தீர்த்தம் தாமிரபரணி
தலவிருட்சம் பலாஆகமம்,காரண ஆகமம்,அரசமரம்


தனிச் சிறப்பு
நவகைலாயத்தில் ஐந்தாவது இடத்தை பெறுவது முறப்பநாடு ஆகும்.இந்த கோயில் நவக்கிரகத்தில் குருபகவான் ஆட்சி பெற்று ஏழாவது இடத்தை பெறுகிறது.குருபகவானின் அருள் பெற நாம் வழிபட வேண்டிய திருத்தலம் முறப்பநாடு ஆகும்.முறப்பநாடு பஸ் ஸ்டாப்பில் இறங்கி அங்கிருந்து நடந்து செல்லும் தூரத்தில் நவகைலாயத்தின் வியாழ பகவானை விட்டிருக்கும் அருள்மிகு கைலாச நாதர் திருக்கோயில் அமைத்துள்ளது.இயற்கை காலில் சூழ்ந்த வனப்புடன் பசுமை கொஞ்சும் காலில் கண்ணனுக்கு விருதாக உள்ளது.வாழை தோட்டங்களும் வயல் வெளிகளும் நிறைந்தஅப்பகுதி சிந்தை கவர்கிறது.நவகாலயத்தின் எந்த கோயிலுக்கும் இல்லாத தனிச் சிறப்பு சிவா பெருமான் குருபாகவனாக அருள் பாலிக்கும் முரப்பாணத்திட்கு மட்டுமே உண்டூ.புண்ணிய மதியம் தாமிரபரணி ஆறு காசியில் உள்ளது போன்று வடகிலுருந்து தெற்கு நோக்கி செல்கிறது.இதனால் இந்த இடத்திற்கு தட்சிணா கங்கை எனப் பெயர்.இங்கு நீராடுவது காசியில் நீராடுவதற்கு சமம் என்று கூறுவார்கள்.
குரு ஆதிக்கத்தில் உள்ள ராசி நட்சத்திரங்கள்
நட்சத்திரங்கள்
மூலம்,பூராடம்,உத்திராடம்,பூரட்டாதி
ராசி
தனம்,மீனம்

திருவிழாக்கள்
- குரு பெயர்ச்சி
- சிறப்பு பூஜைகள்
- பிரதோஷம்
- திருவாதிரை
- சிவராத்திரி
- மாதபிறப்பு நாட்கள்
இக்கோயில் தாமிரபரணியின் மேற்கு கரையில் அமைந்துள்ளது. ஒன்பது கைலாய தலங்களில் இத்தலம் நடுவில் இருக்கிறது. எனவே இத்தலத்தை, “நடுக்கைலாயம்” என்கின்றனர். இங்கு கைலாசநாதர் குரு அம்சமாக இருப்பதால் இவருக்கு மஞ்சள் ஆடை சாத்தி, கொண்டைக்கடலை நைவேத்யம் படைத்து வழிபடும் வழக்கம். சிவகாமி அம்பாள் தனிச்சன்னதியில் இருக்கிறாள். விநாயகருக்கு சன்னதி இருக்கிறது. இவரது சன்னதிக்கு முன்புறத்தில் துவாரபாலகர்கள் போல இரண்டு விநாயகர்கள் இருக்கிறார்கள். விநாயகரை இத்தகைய அமைப்பில் காண்பது அபூர்வம்.
சூரபத்மனும் மற்ற அரக்கர்களும் செய்த கொடுமையைத் தாங்க முடியாத முனிவர்கள் இறைவனிடம் முறையிட்ட இடம் என்பதால் “முறப்பநாடு” என்ற பெயர் வந்ததாம்.
கல்வெட்டுச் சிறப்பு: திருவைகுண்டம் அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயிலில் உள்ள கலியாணகுறடு என்ற மண்டபத்தில் நவகைலாயங்கள் பற்றிய செய்திகளும், ஓவியங்களும் வரையப்பட்டுள்ளது. சேரன்மகாதேவி கோயிலிலும் நவகைலாயம் குறித்த கல்வெட்டுகள் உள்ளது. விஜயநகர பேரரசின் தளபதி விட்டலராயன் இத்திருகோயிலுக்கு வந்து வழிபட்டதை விட்டிலாபுரம் கல்வெட்டு கூறுகிறது.
மற்ற தெய்வங்கள்:கைலாசநாதர் கோவிலின் மற்ற தெய்வங்களாக, சூரியன், அதிகார நந்தி, ஜூர தேவர், சப்தகன்னி, நாயன்மார், பஞ்சலிங்கம், கன்னிவிநாயகர், வள்ளி மற்றும் தெய்வானையுடன் முருகரும், சனீஸ்வரரும் இருக்கின்றனர்.
வேண்டுகோள்:
திருமணத்தடை நீங்க, குழந்தைச் செல்வம் பெற, கல்வியில் சிறந்து விளங்க, இறைவனை வேண்டிக்கொள்ளலாம்.
நேர்த்திக்கடன்:
வேண்டுகோள் நிறைவேறியவர்கள் இறைவனுக்குத் திருமுழுக்காட்டு செய்து, புத்தாடை அணிவித்து, சிறப்பு பூசைகள் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.
அமைவிடம்: திருநெல்வேலியிலிருந்து தூத்துக்குடி செல்லும் சாலையில் திருநெல்வேலியிலிருந்து பதினைந்து கிலோ மீட்டர் தொலைவில் முறப்பநாடு உள்ளது. ஊரின் வடக்குப் பக்கம் சுமார் அரை கிலோமீட்டர் தொலைவில் திருக்கோயில் அமைந்து உள்ளது.