ஆக்சிஜனை அள்ளி தரும் பூவரச மரம்!

ஆக்சிஜனை அள்ளி தரும்  பூவரச மரம்!

அன்றைய காலத்து கிராமத்துச் சிறுவர்களின் விளையாட்டுப்பொருளாக இருந்து வந்த பூவரசு மரம் கிணற்றுமேடுகளில் நிச்சயம் இடம்பெற்றிருக்கும். நீர் இறைக்கும் கமலையை இழுத்துவரும் மாடுகள் சோர்ந்து போகாமல் இருப்பதற்காக இதை நட்டு வைத்திருந்தார்கள். இந்த மரங்கள் ஆக்சிஜனை அதிகளவு உற்பத்தி செய்யும் மரங்களில் ஒன்று என்பதால் கிராமம்தோறும் காணப்பட்டன. இன்றைக்குக் கிணற்றில் நீரும் இல்லை, அவற்றிலிருந்து நீர் இறைக்கும் கமலைகள் மட்டுமல்ல மாடுகளும் இல்லை, அவை இளைப்பாறுவதற்காக நடப்பட்ட மரங்களும் இல்லை.

அதுமட்டுமல்ல சுமார் 20 ஆண்டுகளுக்கு முன் மார்கழி மாதத்தின் காலைப்பொழுதுகளில் நம் வீட்டுப்பெண்கள் தமிழ்க் கலாசாரத்தின் அடையாளங்களில் ஒன்றாகக்கருதப்படும் கோலமிடுதல் முக்கியமானது. வீடுகளின் முற்றங்களில் விழுந்து கிடக்கும் இலைதழைகள் மற்றும் குப்பைகளை அகற்றி மாட்டுத்தொழுவத்துக்குப் பின்புறம் இருக்கும் உரக்குழியில் போடுவார்கள். பிறகு மாட்டுத்தொழுவத்தில் இருந்து சாணம் எடுத்து வந்து நீர் விட்டுக் கரைத்துத் தெளித்து மாக்கோலம் இட்டு அதன் நடுவே சாணத்தில் பிள்ளையார் பிடித்து அதில் பூவரசம் பூவை செருகி வைப்பார்கள். இது மரபின் மருத்துவம் என்றால் அது மிகையாகாது.

தாவரவியல் பெயர்

பூவரசம் மரத்தின் தாவரவியல் பெயர் தெஸ்பீசியா பாபுல்னியா (Thespesia poulnea (L) என்பதாகும். இதை கல்லால் பூப்பருத்தி என்றும், புவிராசன், அர்த்தநாரி, ஈஸ்வரம், பம்பரக்காய், பூளம் என்ற வேறு பெயர்களிலும் அழைப்பார்கள். சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற நூல்களிலும் பூவரசு மரம் பற்றி குறிப்பிட்டிருக்கிறது. இலங்கையின் யாழ்ப்பாணம் மாவட்டத்தின் தென்மேற்குப்பகுதியில் உள்ள ஏழு தீவுகளில் ஒன்றான புங்குடுதீவில் பூவரசு மரங்கள் நிறைந்த காடு இடம்பெற்றிருக்கிறது.

மருத்துவக்குணம் நிறைந்த பூவரசு மரம் மிக எளிதாக வளரக்கூடியது. அதன் கிளைகளை வெட்டி நட்டாலே தளிர் விட்டு வளரும். அதிக பிராணவாயுவைப் பெறுவதோடு நோய்களையும் வெல்வோம்; மீண்டும் `பீப்பீ' ஊதப் புறப்படுவோம்.

1)மூலிகையின் பெயர் -: பூவரசு.

2) தாவரப்பெயர் -: THESPESIA POPULNEA.

3) தாவரக்குடும்பம் -: LVACEAE.

4) வகைகள் -: கொட்டைப் பூவரசு சாதாரணப் பூவரசு என இருவகைப் படும்.

5) பயன் தரும் பாகங்கள் -: இலை, பூ, பழுப்பு, காய், வேர் மற்றும் பட்டை முதலியன.

6) வளரியல்பு -: புவிக்கரசனாகிய பூவரசன் காய கல்ப மரமாகும்.வேம்பு போல நூற்றாண்டு கால மரம். மருந்துக்கு மிகவும் ஏற்றது. தென்னிந்தியாவில் அதிகமாக் காணப்படுகிறது.இதன் இலை பசுமை நிறமாகவும், அரச இலையைவிட சற்று அகலமாகவும் இருக்கும். இதன் பூமொட்டுசிறிய பம்பரம் போல் இருக்கும்.மொட்டு மலர்ந்தவுடன் புனல் வடிவில் மஞ்சள் நிறமுடையதாக மலரும். கொட்டைப் பூவரசு காய்களை உடைத்தால் உள்ளே நிறைய விதைகள் இருக்கும். காய்களை உடைத்தால் விதைகள் இல்லாமல் சப்பையான காய்கள் இருப்பது சாதாரணப் பூவரசு. பூவரசு புழுக்களைக் கொன்று நம் உடலைத் தூய்மையாக்கி உடலை உரமாக்கும் தன்மை உடையது. விதை குச்சிகள் மூலம் இனப்பெருக்கம் உண்டாகும்.

மருத்துவக்குணம்

இத்தகைய வரலாற்றுச் சிறப்புமிக்க பூவரசு மருத்துவக்குணம் நிறைந்தது ஒரு மரமாகும். இதன் இலை, பூ, காய், விதை, பட்டை, வேர் என எல்லாவற்றுக்கும் மருத்துவக்குணங்கள் உண்டு.

தேமல்

பூவரசு இலையை அரைத்து சொறி, சிரங்கு, தேமல் போன்றவற்றுக்குப் பற்று போட்டு வந்தால் பலன் கிடைக்கும். பூவரசு மரத்தின் காய்களை அம்மி அல்லது கருங்கல்லில் உரசினால் வரக்கூடிய மஞ்சள் நிறப்பாலை தேமல் உள்ள இடங்களில் தடவி வந்தால் நாளடைவில் தேமல் அகலும். படர்தாமரை என்று சொல்லக்கூடிய தோல் நோயும் குணமாகும். கை-கால் மூட்டு வீங்கியிருந்தாலும் இதே மஞ்சள் நிறப்பாலை பூசினால் குணம் கிடைக்கும்.

பேதி

பூவரசு மரத்தின் வேர்ப்பட்டையை நீர் விட்டு நீர் சேர்த்து கொதிக்க வைத்து அதில் 50 மில்லி அளவு எடுத்து 10 மில்லி விளக்கெண்ணெய் சேர்த்து காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் பேதியாகும். இதன் மூலம் தோல் நோய்களிலிருந்து விடுதலை கிடைக்கும்.

சொரியாசிஸ் நோய்

செதில் செதிலாக உதிரக்கூடிய சொரியாசிஸ் நோய்க்கு பூவரசம்பட்டை நல்ல மருந்தாகும். அதாவது, 100 ஆண்டுகள் ஆன பூவரசு மரத்தின் பட்டையுடன் காய், பூ சேர்த்துப் பொடியாக்கி காலை, மாலை ஒரு டேபிள்ஸ்பூன் வீதம் சாப்பிட்டு வந்தால் பலன் கிடைக்கும். முற்றிய மரத்தின் பட்டையை இடித்துச் சாறு எடுத்து அதை வாயில் வைத்துக் கொப்புளிப்பதோடு உள்ளுக்குள் விழுங்கி வந்தால் உதட்டில் வரக்கூடிய வெண்தேமல் சரியாகும்.

சர்க்கரை நோயாளி

சர்க்கரை நோயாளிகளுக்குப் புண் ஏற்பட்டால் அது ஆறாமல் மிகுந்த பிரச்னையை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது. அப்படிப்பட்ட சூழலில் பூவரசம்பட்டையை நீர் விட்டுக் கொதிக்க வைத்து சூடு ஆறியதும் கழுவி வந்தால் பலன் கிடைக்கும்.

கரும்படலம்

கழுத்தில் அணியக்கூடிய செயின், கைக்கடிகாரம் போன்றவற்றை அணிவதால் சிலருக்குத் தோலில் கருமை நிறம் ஏற்படும். அப்படிப்பட்ட சூழலில் பூவரசம் பூவின் இதழ்களை நல்லெண்ணெய் விட்டு காய்ச்சி சூடு ஆறியதும் கருமை நிறத்தின் மீது பூசி வந்தால் கரும்படலம் நாளடைவில் மறையும்.

அல்சைமர் எனும் ஞாபகமறதி நோய்க்கும் சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது என்று சித்த மருத்துவர்கள் கூறுகின்றனர்.

பூச்சி கடி

உடம்பில் என்ன பூச்சி கடித்ததென்று தெரியாத காணாக்கடிகளுக்கு பூவரசு மரப்பட்டை 210 கிராம் எடுத்து இடித்து ஒரு சட்டியிலிட்டு, 1400 மி.லி. நீர் விட்டுக் காய்ச்சி மூன்றில் ஒன்றாக வற்றியபின் வடிகட்டி, தினமும் இரண்டு வேளை அருந்தி வந்தால் காணாக் கடி விஷம், பாண்டு, சோகை, பெருவயிறு முதலிய நோய்கள் குணமாகும்.

தொழு நோய்

பூவரசு பட்டையை எடுத்து பாலில் அவித்து உலர்த்தி அதனுடன் சம அளவு பறங்கிப் பட்டை சேர்த்து நன்கு இடித்து சூரண்ம் செய்து கொள்ள வேண்டும். இதனைஒரு தேக்கரண்டி அளவு எடுத்து தேவையான அளவு பசு வெண்ணெயில் காலை,மாலை இரண்டு வேளை உண்டு வந்தால் நாட்பட்ட தொழு நோய்க்கு நன்மை பயக்கும். இதை உட்கொள்ளும் போது உணவில் உப்பை நீக்க வேண்டும்.

பூவரசு எண்ணெய்

பூவரசங்காயிலிருந்து முறைப்படி எடுக்கப்படும் எண்ணெய் பெருவயிறு, வயிற்றுப்புண் இவைகளுக்கு சிறந்த மருந்தாகும்.

பூவரசம் பட்டையிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய்யை தேவையான அளவு உள்ளுக்குக் கொடுத்தால் பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப் படுதல் நோய் குணமாகும்.

கருத்தடை
பூவரசன் பட்டைத்தூள் 100 கிராம், சீமைக்காசிக்கட்டி 100 கிராம், இந்துப்பு 100 கிராம், சேர்த்து அரைத்து வைக்கவும்.குழந்தை வேண்டாம் என்பவர்கள் கருத்தடைக்காக இதனைச் சாப்பிடலாம். விலக்கான நாள் முதல் ஏழு நாள் 10 கிராம் அளவு வெந்நீரில் குடிக்கவும். ஏழு நாளும் பால், மோர், மிளகு ரசம், பருப்புத் துவையல் மட்டும் சாப்பிடவும். நல்லெண்ணெயில் தலை முழுகவும். இதனால் கருப்பை சுருங்கிவிடும்.. ஒரு வருடம் வரை கரு தரிக்காது நல்ல கருத்தடை முறை இது.


Share Tweet Send
0 Comments
Loading...