கள்ளி மரம்!!!

கள்ளி மரம்!!!

உயிரியல் வகைப்பாடு

திணை: தாவரம்

தரப்படுத்தப்படாத: பூக்கும் தாவரம்

தரப்படுத்தப்படாத: இருவித்திலைத் தாவரம்

தரப்படுத்தப்படாத: ரோசிதுகள்

வரிசை: Malpighiales

குடும்பம்: ஆமணக்குக் குடும்பம் (தாவரவியல்)

பேரினம்: கள்ளி (செடி)

இனம்: E. antiquorum

இருசொற் பெயரீடு Euphorbia antiquorum L.

தமிழில் வேறு பெயர்கள்:

நான் முகக்கள்ளி (NAN MUGA KALLI)
நானாங்கள்ளி (NANANG KALLI)
வச்சிரம் (VACHIRAM)

பொதுபெயர் : டிரைஅங்குலர் ஸ்பர்ஜ், ஸ்கொயர் ஸ்பர்ஜ், இண்டியன் ஸ்பர்ஜ் டேர் (TRIANGULAR SPURGE, SQUARE SPURGE, INDIAN SPURGE TERE)

பயன்கள்  (USES)

உயிர் வேலிக்கு உத்தமமானது.
உலர்ந்த கட்டைகள் அடுப்புக்கு உடன் எரிக்க உதவும்.
இதன் பால் வைத்தியத்திற்கு பயன்படுகிறது.

மருத்துவ பயன்கள் (MEDICINAL USES)

மார்பு வலி மற்றும் மலச்சிக்கலை குணப்படுத்தும்.
இதன் பாலை கட்டிகளின் மீது தடவலாம்.
இதிலிருந்து எடுக்கும் சாற்றினை பயன்படுத்தி நோய் எதிர்ப்பு சக்தி பெறலாம்.

கீழ்க்கண்ட நோய்களைக் குணப்படுத்தும்

உடற்பருமன்
எலும்பு முறிவு
புற்றுநோய்
நீர்க்கட்டு
நீர்க்கோவை
மஞ்சள்காமாலை
முடக்குவாதம்
மூட்டுவலி
மூலம்
வெள்ளைப்படுதல்
பல்வலி
காதுவலி
ஆஸ்துமா

மரங்களின் இயல்பு (DESCRIPTION)

இதன் தண்டுகள் முப்பட்டை கொண்டது.

நான்கு பட்டை தண்டுகளாகவும் இருக்கும்.

தண்டுகல் பளிச்சென்று பச்சை நிறத்தில் இருக்கும்.

இதில் கருப்பு நிற முட்கள் புதைந்திருக்கும்.

தண்டுகள் மிருதுவான தசைப்பகுதி நிறைந்தது.

தண்டுகளில் சிறிய கீறல் போட்டாலும் அதில் பால் பொங்கிவடியும்.

ஐந்து முதல் ஏழு மீட்டர் உயரம் வளரும்

பூக்கள் : பூங்கொத்து கிண்ணம் போல இருக்கும்.

ஒரு பெண் பூவும் அதைச் சுற்றிலும் நிறைய ஆண் பூக்கள், இங்கும். பூக்களில் தேன் அதிகம் இருக்கும்.
அதனால் அதிகம் தேனீக்கள் சுற்றி வரும்.

கேரளாவில் களக்காடு காப்பு காடுகளில் ஒரு ராட்சச கள்ளியை கண்டுபிடித்திருக்கிறார்கள், அது 20 மீட்டர் உயரம் வரை வளருமாம், இதன் தண்டுகள் ஒரு மீட்டர் விட்டம் கொண்டதாக உள்ளது.

கள்ளி மரம் தலமரமாக உள்ள கோயில்கள் (SATHURAK KALLI AS STHALAVRIKSHA)

திருகண்டலம் சிவன் கோவில், திருவள்ளூர் மாவட்டம்
திருபுனவாசல் சிவன் கோவில், புதுக்கோட்டை மாவட்டம்
நீடாமங்கலம் விஷ்ணு கோவில், திருவாரூர் மாவட்டம்

செடியின் அமைவு

சப்பாத்திக் கள்ளிக் குடும்பத்தில் மிக உயரமாக வளரும் மரமாகும். இது 50 முதல் 70 அடி உயரம் வளரக் கூடியது. ஆடி மரம் 2 அடி விட்டம் கொண்டது. தூண் போன்ற பல கிளைகளைக் கொண்டு இருக்கும். பார்ப்பதற்கு மெழுகுவர்த்தி போன்று இருக்கும். கிளைகளின் முனைகளில் 10 செ.மீ. நீளமுடைய அழகிய வெள்ளை நிற புனல் வடிவப் பூக்கள் உண்டாகும். இப்பூக்கள் நண்பகல் நேரத்தில் வெடிக்கும். இதன் கனி சூன் மாதத்தில் பழுக்கும். இது ஊதா கலந்து செந்நிறமாக இருக்கும். அரி சோனா நாட்டில் பாப்பாகோ இந்தியர்கள் இதை உணவாக உண்கிறார்கள். விதை கருப்பாக, பளபளப்பாக இருக்கும்.

தமிழகத்தில் பல வகையான கள்ளி வகைகள் காணப்பட்டாலும் இலைக்கள்ளி, மான்செவிக் கள்ளி கொம்புக்கள்ளி, கொடிக்கள்ளி, திருகுக்கள்ளி, சதுரக்கள்ளி ஆகியவை மட்டுமே சித்த மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் இனங்கள்.

தமிழகமெங்கும் காணக் கிடைக்கும் சப்பாத்திக்கள்ளி, வெள்ளையர்களின் ஆட்சிக்காலத்தில் நமது நாட்டில் பரவிய இனம். சப்பாத்திபோல முக்கோணம், முக்கோணமாகக் காணப்படுவதால் நமது மக்கள் இதற்கு, `சப்பாத்திக்கள்ளி’ என ரசனையுடன் பெயர் வைத்திருக்கிறார்கள். இதில் பூக்கள் அதிகமாகக் காணப்படும். இதன் பழங்களை உண்ணலாம். வெள்ளையர்கள் வாழ்ந்த மாளிகைகளில் தூண் தூணாக ஒரு கள்ளி இனம் காணப்படும்.

திருகுக்கள்ளி

இது அனைத்து இடங்களிலும் காணப்படும் கள்ளி இனம். திருகித் திருகிக் காணப்படுவதால் ‘திருகுக்கள்ளி’ எனப்படுகிறது. சிறந்த வேலித்தாவரமாக முற்காலங்களில் தோட்டங்களில் வளர்க்கப்பட்டது. ஏற்கெனவே சொல்லப்பட்டதுபோல, இந்தக் கள்ளியின் சில தண்டுகள் நான்கு பட்டைகளுடன் காணப்பட்டால் அதையே ‘சதுரக்கள்ளி’ என்று சித்த மருத்துவர்கள் பயன்படுத்தி வந்தனர். திருகுக்கள்ளிப்பால், சாறு ஆகியவற்றைக் கொண்டு சித்த மருத்துவர்கள் பலவிதமான பேதி மருந்துகளை தயாரித்துப் பயன்படுத்துகின்றனர். ஆனால், முன்னெச்சரிக்கை கருதி அவற்றைப் பற்றி முழுமையாக இங்கு நான் விளக்கவில்லை. இதன் பால், சாறு சேர்த்து வாத கேசரி தைலம், நவநாத சித்தர் தைலம் முதலிய தைலங்கள் தயாரிக்கப்படுகின்றன. இவை வாத நோயாளிகளுக்குக் குளியல் தைலமாகவும், தொக்கணம் (மசாஜ்) செய்யப் பயன்படும் பிடி தைலமாகவும், பூச்சு தைலமாகவும் பயன்படுகின்றன.

நல்மருந்து 2.0 - ஆஸ்துமாவை குணமாக்கும் நஞ்சறுப்பான்... கட்டிகளை உடைக்கும் கடற்பாலை!

திருகுக்கள்ளியை இடித்துப் பிழிந்த சாற்றில் உப்பைக் கரைத்து, அடுப்பிலேற்றி குழம்புப் பக்குவத்தில் வைத்துக்கொள்ள வேண்டும். அதை வாதவலி, சுளுக்கு, வீக்கம், பிடி உள்ள இடங்களில் இளஞ்சூட்டில் பூசிவந்தால் வலி விரைவில் மாறும். இந்தக் கள்ளியைச் சிறு சிறு துண்டுகளாக வெட்டி, உலர்த்தி எரித்துச் சாம்பலாக்கி வைத்துக்கொள்ளவும்.

தேவைப்படும்போது தேங்காய் எண்ணெயில் குழப்பி அழுகிய புண்கள், நாள்பட்ட புண்கள்மீது போட்டுவர அவை மூடி விரைவில் ஆறும். முதல் ஐந்து நாள்களுக்குக் கொஞ்சமாகப் போட வேண்டும். உடல் ஒத்துக்கொள்வதைப் பொறுத்து, தொடர்ந்து போட்டு வரலாம். இதன் பாலை, பாலுண்ணி மற்றும் மருக்கள் மீது கொஞ்சம் கொஞ்சமாகப் பூசிவர அவை புண்ணாக மாறி ஆறும். அந்தப் புண்கள் விரைவில் ஆறுவதற்குத் தேங்காய் எண்ணெயும் போட்டு வரவும்.

சதுரக்கள்ளி

நாய், பூனை, எலி, பெருச்சாளி போன்றவை கடித்த இடத்தில் கள்ளிப்பாலைத் தடவிவரப் புண்ணாகும். சிறிது காலம் புண்ணை ஆறவிடாமல் வைத்திருந்து பிறகு, புண்களை ஆற்றும் மருந்துகளைப் போட்டு ஆற வைக்கவும். இப்படிச் செய்வதால், இந்தச் சிறு விலங்குகளின் விஷம் உடலில் தங்காது. இந்தக் கள்ளியின் பச்சைத் தண்டுகளை இடித்து, சாறு பிழிந்துவிட்டு சக்கையை மட்டும் அனலில் வாட்டி, இளஞ்சூட்டுடன் நகச்சுற்றுகளின் மேல் வைத்துக் கட்டினால் அப்படியே அமுங்கிவிடும்.

சீழ்ப் பிடித்திருந்தாலும் உடைந்து புண்ணாகிவிடும். பிறகு, புண்களைத் தைலங்கள் பூசி ஆறவைக்க வேண்டும். முற்காலங்களில் யானைக்கால் வீக்க நோயாளிகளுக்கும், மிகக்கொடிய குஷ்ட நோயாளிகளுக்கும், கல்லீரல், மண்ணீரல் பாதிக்கப்பட்டு வயிறு வீங்கிக் காணப்படும் பெரு வயிறு நோயாளிகளுக்கும் இதன் பால் சேர்த்து மருந்துகள் தயாரித்து, தொடர்ந்து கொடுத்து வீக்கங்களைக் குறைக்கச் செய்திருக்கிறார்கள்.

மான்செவிக் கள்ளி

மானின் செவியைப்போல இதன் இலைகள் காணப்படுவதால், இந்தக் கள்ளி ‘மான்செவிக்கள்ளி’ எனப்படுகிறது. பொதிகை மலையில் வாழும் காணிக் குடியிருப்புகளில் இவை அதிகமாகக் காணப்படுகின்றன. காணி மக்கள் இதை ‘மாந்தக்கள்ளி’, ‘மாஞ்சக்கள்ளி’ என அழைக்கின்றனர். இந்தக் கள்ளிச் செடியை வளரவிட்டால், சாதாரண மரங்களைப்போல 20 முதல் 30 அடி உயரம்கூட வளரும் தன்மையுடையவை. இதன் இலைகளை ஒடித்தவுடன் மிக வேகமாகப் பால் சொட்டும். இலைகளைத் தீ அனலில் லேசாக வதக்கிப் பிழிந்து 7-8 துளி சாறெடுத்து குழந்தைகளுக்குக் கொடுத்தால், உடலில் தேங்கிய மலம் வெளியேறும். குழந்தை பிறந்தது முதல் இதன் பால் தேவைப்படுவதால்தான் ஒவ்வொரு காணிக் குடியிருப்பிலும் இந்த மரங்கள் காணப்படுவதாக அந்த மக்கள் சொல்கிறார்கள்.

இலைக்கள்ளி

மரு, பாலுண்ணி மறைய, நகச்சுற்று மாற, விஷக்கடிகளுக்கு மேலே போட என திருகுக்கள்ளிக்கு உரிய மருத்துவப் பயன்கள் அனைத்தும் இந்த இலைக்கள்ளிக்கும் பொருந்தும். இதன் இலைச்சாற்றுடன் வெண்ணெய் கலந்து பூசிவர சொறி, சிரங்கு மறையும். இலைக்கள்ளிச் சாற்றுடன் சம அளவு சர்க்கரைப்பாகு அல்லது தேன் கலந்து நன்றாகக் குலுக்கி வைத்துக்கொள்ளவும். இதில் மூன்று முதல் ஐந்து மி.லி எடுத்து 15 மி.லி தண்ணீருடன் கலந்து கொடுத்துவந்தால் ஆஸ்துமா முதலான சுவாசப்பாதை நோய்கள் மறையும்.

மான்செவிக் கள்ளி

கறுப்பு நிறத்திலிருக்கும் இரும்புப் பொடியை வெள்ளை நிறமாக்குவது அதாவது, பற்பம் செய்வதும், வெள்ளை நிறத்தில் மின்னும் வெள்ளியைச் சிவப்பாக்குவது அதாவது, செந்தூரமாக்குவதும் சித்த மருத்துவத்தின் உச்சக்கட்ட மருந்தியல் உத்திகள். அந்த வகையில், இரும்பைப் பற்பமாக்குவதற்கு இந்த மான்செவிக் கள்ளிப்பால் தேவைப்படுகிறது. இந்தக் கள்ளிப்பாலில் இரும்பை ஊறவைத்து அரைத்துப் புடம்போட்டால் கிடைப்பது இரும்பு பற்பம். இதுவே அனைத்து நோய்களுக்கும் அருமருந்தாகும்.

நல்மருந்து 2.0 - ஆஸ்துமாவை குணமாக்கும் இலைக்கள்ளி! - இரும்பை இல்லாமல் ஆக்கும் மான்செவிக் கள்ளி!

கொம்புக்கள்ளி

கொம்பு, கொம்பாகக் காணப்படுவதால் `கொம்புக்கள்ளி’ எனப்பட்டது. வேலித் தாவரமாகவும் வளர்க்கப்படுகிறது. இதன் இளம்பட்டையை அரைத்து, எலும்பு முறிவுகளுக்கு வைத்துக்கட்டினால் முறிந்த எலும்புகள் விரைவில் கூடும். மற்ற கள்ளிகளுக்குச் சொல்லப்பட்ட அனைத்து மருத்துவப் பயன்களும் இதற்கும் பொருந்தும்.

இந்தக் கள்ளி மரத்தின் இளங்கொம்புகளை கரி நெருப்பு அனலில் வாட்டிப் பிழிந்த சாற்றுடன் (5 முதல் 10 துளி) கோரோசனை மாத்திரை அல்லது கஸ்தூரி மாத்திரை சேர்த்து பச்சிளங் குழந்தைகளுக்குக் கொடுத்தால் செங்கிரந்தி, கருங்கிரந்தி, கக்குவான் இருமல், கோழைக்கட்டு, வயிற்று உப்புசம் முதலியவை குணமாகும்.

இதன் கொம்புகள் மாசி, பங்குனி மாதங்களில் பழுத்து, மஞ்சள் நிறமாகி கீழே விழுந்துவிடும். அவற்றைக் கொண்டு ‘கருவங்கம்’ எனும் உலோகத்தைக் சுண்ணமாக்கி வழங்கிவர நீரிழிவு என்னும் மதுமேகம் முற்றிலும் குணமாகும்.

கொடிக்கள்ளி

இது கொடி வீசிப் படர்ந்து வளரும் கள்ளி இனம். ஏற்கெனவே குறிப்பிட்டுள்ள அனைத்து மருத்துவப் பயன்களும் இதற்குப் பொருந்தும். இதன் இளங்கொடிகளை அனலில் வதக்கிப் பிழிந்து, சாற்றில் மூன்று முதல் ஐந்து மி.லி குழந்தைகளுக்குக் கொடுத்துவர, பால கரப்பான் தீரும்.

கொடிக்கள்ளி எண்ணெய், கொடிக்கள்ளிப்பால் எண்ணெய் ஆகிய தயாரிப்பு முறை மருந்துகளைக் கொடுத்து தீர்க்க முடியாத தோல் நோய்கள், கல்லீரல், மண்ணீரல் வீக்க நோய்கள், இடுப்புவலி, வாதநோய்கள் ஆகியவற்றை குணமாக்க முடியும். ‘இலிங்கம்’ எனப்படும் ரச பாடாணத்துக்கு, கொடிக்கள்ளிப்பால் அல்லது சாறு சேர்க்கப்பட்டு `சர்வ நோய் லிங்கச் செந்தூரம்’ தயாரிக்கப்படுகிறது. இந்த மருந்து எல்லாக் காய்ச்சல்களையும் குணமாக்கும் மாமருந்து.

சோமலதா (அ) ஆட்டாங்கள்ளி

கொடிக்கள்ளியைப்போலவே காணப்படும். ஆனால், அவ்வளவு தடிமனாக இருக்காது. ஒடித்தால் பால் வராது. புளிப்புச் சுவையுள்ள தண்ணீர்தான் வரும்.

காலையில் சுவைத்தால் புளிப்புச் சுவையாகவும், மாலையில் சுவைத்தால் இனிப்பாகவும் இருக்கும். இதை, புளிப்பிரண்டை’ அல்லது புளிச்சாங்கொடி’ என்றும் சொல்கிறார்கள். இதை வதக்கி, துவையல் அரைத்து இரவு உணவுடன் உண்டுவந்தால் உள்புண்கள் ஆறும். காலையில் மலம் நன்றாகக் கழியும்.

கள்ளி முனையான்

இந்தத் தாவரத்தின் சிறிய தண்டுகளை உடையது சிறு கள்ளி முனையான்’ என்றும், பெரிய தண்டுகளை உடையது பெருங்கள்ளி முனையான்’ அல்லது `எருமைக்கள்ளி முனையான்’ என்றும் அழைக்கப்படுகிறது. நல்ல புளிப்புச்சுவை உடைய இந்தத் தாவரத்தை துவையலாக அரைத்துச் சாப்பிட்டு வர சுவையின்மை, பசியின்மை முதலியவை குணமாகும். குறிப்பாக, மஞ்சள்காமாலை நோயாளிகள் இந்தத் துவையலை பத்திய உணவுடன் சாப்பிட்டுவர நாவின் சுவையின்மை மாறி நன்கு பசியெடுக்கும்.


Share Tweet Send
0 Comments
Loading...