உலக நிமோனியா தினம் (World Pneumonia Day)

உலக  நிமோனியா தினம் (World Pneumonia Day)
  • நிமோனியா நோயைப் பற்றிய விழிப்புணர்வை உண்டாக்குவதற்காக ஆண்டுதோறும் உலகம் முழுவதும் நவம்பர் 12ஆம் தேதி உலக நிமோனியா தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது
  • ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளை கொல்லும் முதன்மை உயிர்க்கொல்லி நோயான நிமோனியா பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும் நிமோனியாவிற்கு எதிரான தடுப்பு, சிகிச்சை மற்றும் எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காகவும் இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது.
  • நிமோனியா ஓர் நுரையீரலைத் தாக்கும் கடுமையான சுவாச நோய் தொற்றாகும். தொற்று பாதிப்புகளால் நுரையீரலில் உள்ள காற்றுப் பைகள் வீக்கமடைவதால் நிமோனியா ஏற்படுகின்றது. வைரஸ், பாக்டீரியா, பூஞ்சைகள் உட்பட பல்வேறு நோய்க் காரணிகளினால் நிமோனியா உண்டாகின்றது.
  • சிறுவர்களின் நலனைப் பிரதி நிதித்துவப்படுத்தும் நோக்கத்தோடு நூற்றுக்கும் அதிகமான உலகளாவிய அமைப்புகள் இணைந்து 2009ஆம் ஆண்டு நவம்பர் 12ஆம் தேதி முதலாவது உலக நிமோனியா தினத்தை கடைபிடித்தனர். 2010ஆம் ஆண்டு முதல் இது நவம்பர் 12ஆம் தேதி அனுசரிக்கப்பட்டு வருகிறது.

Share Tweet Send
0 Comments
Loading...