உலக ஆமைகள் தினம் - World Turtle Day

உலக ஆமைகள் தினம் - World Turtle Day

🐢உலக ஆமைகள் தினம் மே 23ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. அரிய வகை விலங்கினங்களில் ஒன்றான ஆமைகள் உயிரிழப்பதை தடுக்கவும், அழிவிலிருந்து பாதுகாக்கவும், மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவும் உலக ஆமைகள் தினம் 2000ஆம் ஆண்டிலிருந்து கடைபிடிக்கப்படுகிறது.

🐢அமெரிக்கா, கலிபோர்னியா மாகாணத்தில், ஆமைகள் மீட்பு குழுவினர், 2௦௦௦, மே, 23ம் தேதியை, உலக ஆமைகள் தினமாக அறிவித்தனர். ஆமைகள் இனத்தை பாதுகாக்கவும், இனப்பெருக்க காலத்தில் தொந்தரவு ஏற்படுத்தாத வகையிலும், பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த முடிவு செய்தனர். வரம்பு மீறிய மீன்பிடி முறையால், அழிவின் விளிம்பில் உள்ள ஆமைகளை பாதுகாக்க, மீனவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

🐢இந்நாளில், 'கடல் சுற்றுச்சூழலை பாதுகாத்து, கடலை சுத்தமாக்கும் ஆமைகளை பேணிக் காப்போம்' என, அனைவரும் உறுதிமொழி எடுக்க வேண்டும் என, பிரகடனம் செய்யப்பட்டது. மன்னார் வளைகுடா, வங்கக் கடலில் வாழும் அரிய உயிரினம் ஆமைகள். அதில், சித்தாமை, அலுங்காமை, பச்சை ஆமை, பெருந்தலை ஆமை, தோணி ஆமை என, பல வகைகள் உள்ளன.

🐢சாதுவான குணம் கொண்ட ஆமைகள், 300 ஆண்டுகள் வாழக்கூடியவை. ஆமைகள், மணிக்கு, மூன்று கடல் மைல் வேகத்தில் செல்லக்கூடியவை என்பதால், எளிதில் சுறா, திமிங்கலத்திற்கு இரையாகின்றன; மீனவர்கள் வலையிலும் சிக்குகின்றன.


Share Tweet Send
0 Comments
Loading...