உலக உணவு பாதுகாப்பு தினம் (World Food Safety day)

உலக உணவு பாதுகாப்பு தினம் (World Food Safety day)

ஐக்கிய நாடுகள் சபையின் (ஐ.நா. சபை) பொதுச் சபை 2018 ஜூன் மாதம் அன்று ஒவ்வொரு ஜூன் 7 ஆம் தேதி உலக உணவு பாதுகாப்பு தினமாக (World food safety day / Food safety day) இருக்கும் என்று அறிவித்தது.  

World food safety day 2020 : உலக உணவு பாதுகாப்பு நாள் 2020 :

அதன்படியே இரண்டு வருடம் கழித்து 2020 ஆம் ஆண்டில், உலக சுகாதார சபை உணவுப் பாதுகாப்பிற்கான உலகளாவிய முயற்சிகளையும் அதனை வலுப்படுத்தும் விதமாக தீர்மானத்தை நிறைவேற்றியது.

WHO மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு (FAO) கூட்டாக உறுப்பு நாடுகள் மற்றும் பிற தொடர்புடைய அமைப்புகளுடன் இணைந்து உலக உணவு பாதுகாப்பு தினத்தை அனுசரிக்க உதவி வருகின்றன.

உணவுப் பாதுகாப்பு (Food Safety) என்பது அரசாங்கங்கள், உற்பத்தியாளர்கள் மற்றும் நுகர்வோர் மற்றும் மக்கள் ஆகிய ஒவ்வொருவரின் கடமையும் பொறுப்பும் ஆகும். நாம் உட்கொள்ளும் உணவு பாதுகாப்பானது ஒவ்வொருவரின் ஆரோக்கியத்தை உறுதிப்படுத்த முயல்கிறது.

உலக உணவு பாதுகாப்பு தினம் 2021 (WFSD – World Food Safety Day 2021):

இதன் தொடங்கப்பட்டதற்கு முக்கிய காரணம் உணவுப் பாதுகாப்பு, மனித ஆரோக்கியம், பொருளாதார செழிப்பு, விவசாயம், சந்தை அணுகல், சுற்றுலா மற்றும் போன்றவற்றிக்கு நிலையான பங்களிப்பு செய்வதன் மூலம், உணவுப் பற்றாக்குறையினால் ஏற்படும் பாதிப்புகளைத் தடுக்கவும், கண்டறியவும், அதனை நிர்வகிக்கவும் இந்த தினம் உதவும் மற்றும் பல நாடுகளின் கவனத்தை ஈர்க்கவும், ஊக்கப்படுத்தவும் இந்த தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டின் கருப்பொருள்: World food safety day theme 2020 | World food safety day theme 2021

ஆரோக்கியமான எதிர்காலத்திற்கு இன்று பாதுகாப்பான உணவு என்பது மிகவும் இன்றியமையாத ஒன்றாகும். பாதுகாப்பான உணவில் உற்பத்தி மற்றும் மக்கள் ஒரு அங்கமாக இருக்கிறார்கள்.

மக்கள், விலங்குகள், தாவரங்கள், சுற்றுச்சூழல் மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றுக்கு இடையிலான முறையான அல்லது நிலையான தொடர்புகளை அங்கீகரிப்பது எதிர்கால தேவைகளை பூர்த்தி செய்ய உதவும்.

அனைத்து வயதினரையும், குறிப்பாக 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளையும், குறைந்த வருமானம் கொண்ட நாடுகளில் வாழும் ஒவ்வொரு நபர்களையும் பாதிக்கும், அதனால் உணவுப் பற்றாக்குறையினால் பரவும் நோய்களின் ஆதிக்கமும் அதிகம்.

‌                                          

அசுத்தமான உணவு மற்றும் தண்ணீரின் ஆரோக்கிய விளைவுகள் குறித்து உலகளாவிய கவனத்தை ஈர்க்க உலக உணவு பாதுகாப்பு தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 7 தேதி அதாவது இன்று அனுசரிக்கப்படுகிறது.


Share Tweet Send
0 Comments
Loading...