உலக எழுத்தறிவு தினம் World Literacy Day

உலக எழுத்தறிவு தினம் World Literacy Day

📝உலகில் அனைவரும் எழுத்தறிவு பெற வேண்டும் என்ற நோக்கத்திற்காக செப்டம்பர் 8ஆம் தேதி உலக எழுத்தறிவு தினமாக கடைபிடிக்கப்படுகிறது.

📝1965ஆம் ஆண்டு செப்டம்பர் 8ஆம்; தேதி தெஹ்ரான் நகரில் உலகளாவிய கல்வி அமைச்சர்கள் மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டில் உலகளாவிய ரீதியில் எழுத்தறிவின்மையால் ஏற்படக்கூடிய பிரச்சனைகளுக்கு தீர்வு காண பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 8ஆம் தேதியை சர்வதேச எழுத்தறிவு நாளாக அனுசரிக்க வேண்டும் என்பது முக்கியத் தீர்மானங்களில் ஒன்றாகும்.

📝இதன் அடிப்படையில் 1965ஆம் ஆண்டு நவம்பர் 17ஆம் தேதி யுனெஸ்கோவின் 14வது பொதுக்குழு கூட்டம் நடந்தது. இதில்தான் உலக எழுத்தறிவு தினம் பிரகடனம் செய்யப்பட்டது.

📝தனி மனிதர்களுக்கும் பல்வேறு வகுப்பினருக்கும் சமுதாயங்களுக்கும் எழுத்தறிவு எவ்வளவு முதன்மையானது என்பதை எடுத்துரைப்பதே இந்த நாளின் குறிக்கோள் ஆகும்.


Share Tweet Send
0 Comments
Loading...