உலக அமைதி தினம்

உலக அமைதி தினம்

🐦உலக அமைதி தினம், ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையின் பிரகடனத்தின் மூலம் ஆண்டுதோறும் செப்டம்பர் 21ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது.

🐦உலக சமாதான முயற்சியின் போது ஐ.நா.வின் முன்னாள் பொதுச் செயலாளர் ஹமர்சீல்ட் 1961ஆம் ஆண்டு விமான விபத்தில் உயிரிழந்தது வரலாற்று சுவடாக பதிவாகியுள்ளது. இவர் உயிர் துறந்த நாளையே உலக அமைதி தினமாக அனுசரிக்கின்றோம்.

🐦இதனை அடுத்து 2002ஆம் ஆண்டுக்கு பின்னர் ஜ.நா. பிரகடனத்தின் மூலம் செப்டம்பர் 21ஆம் தேதி உலக அமைதி தினம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

🐦உலக வரலாற்றில் ஏற்பட்ட கசப்பான மற்றும் சமாதானமற்ற நிகழ்வுகளினால் ஏற்பட்ட உயிர் மற்றும் உடமைகளின் சேதங்களினால் உலக சமாதான தினத்தை உருவாக்கும் முயற்சியில் ஐக்கிய நாடுகள் சபை ஈடுபட்டது.

🐦மனித உள்ளங்களினால் தான் போர் எண்ணம் உருவாக்கப்படுவதால் மனித உள்ளத்தாலே அமைதிக்கான அரண்களும் உருவாக்கப்பட வேண்டும் என்பதே யுனெஸ்கோவின் வாசகமாக அமைந்துள்ளது.

🐦 இன்று உலகில் பல பகுதிகளில் சமாதானத்துடன் தொடர்புடைய நிகழ்வுகள் முன்னெடுக்கப்படுகின்றன. எனினும் இன்று மட்டுமன்றி ஒவ்வொரு நாட்களுமே மனித வாழ்வில் சமாதானம் நிலைக்க வேண்டும் என்பதே இதன் நோக்கம்


Share Tweet Send
0 Comments
Loading...