தொட்டால் சினுங்கி

தொட்டால் சினுங்கி

தொட்டால் சிணுங்கி இலை விரல் பட்டதும் சட்டெனத் தன்னை உள்ளிழுத்துக் கொள்ளும்  இந்தத் தாவரத்தை எல்லோரும் பார்த்திருப்போம். உணர்வு மட்டும் அல்ல உன்னதமான மருத்துவக் குணங்களும் இந்த மூலிகைச் செடிக்கு உண்டு.

தொட்டாற்சுருங்கி, தொட்டால் வாடி, இலச்சகி, நமஸ்காரி, காமவர்த்தினி என இந்தத் தாவரத்துக்கு நிறைய பெயர்கள் உண்டு.

தொட்டால் சிணுங்கி.

1) மூலிகையின் பெயர் -: தொட்டால் சிணுங்கி.

2) தாவரப்பெயர் -: MIMOSA PUDICA.

3) தாவரக்குடும்பம் -: FABACEAE.

4) வேறு பெயர்கள் -: நமஸ்காரி மற்றும் காமவர்த்தினி. (Touch-me-not)

5) பயன் தரும் பாகங்கள் -: இலைகள் மற்றும் வேர்கள்.

6) வளரியல்பு -: தொட்டால் சிணுங்கி தமிழ் நாட்டில் எல்லா இடங்களிலும் ஈரப்பதமான இடங்களில் தானே வளரக் கூடியது. இது தரையில் படர்ந்து 5 அடி வரை படரும் அதே சமயம் இது 60 செ.மீ. உயரமும் இருக்கும். சிறு செடி வகையைச் சார்ந்தது. ஆற்று ஓரங்களில் அதிகமாகக் காணப்படும். சிறு முட்கள் இருக்கும். இலைகள் ஜோடியாக எதிர் அடுக்கில் கூட்டாக இருக்கும். ஒவ்வொரு கிளைக்கும் சுமார் 10-25 எதிர் அடுக்கு இலைகள் உள் நோக்கி இருக்கும். இலைகள் இடையில் ஊதா நிறப் பூக்கள் மேலே சிவப்பாகவும் அடியில் ஊதா நிறத்திலும் இருக்கும் பூவில் குச்சிகள் ஒரு செ.மீ. நீளத்தில் சிலிர்த்துள்ளது போல் இருக்கும். காய்கள் 2.5 மி.மி. நீளத்தில் இருக்கும். பூக்கள் காற்று மூலமும் பூச்சிகள் மூலமும் மகரந்தச் சேர்க்கை ஏற்படும். இதன் இலைகள் மாலைக்கு மேல் உட்பக்கமாக மூடிக்கொள்ளும். சூரிய உதையத்தின் போது மறுபடியும் தெளிந்து கொள்ளும். மனிதர்கள் தொட்டாலும், அதிர்வு ஏற்பட்டாலும் தொடர்ச்சியாக இலைகள் மூடிக்கொள்ளும். இதனை ஆங்கிலத்தில் ‘Touch-me-not’ என்றும் சொல்வார்கள். மூடிய இலைகள் பகலில் அரை மணி நேரம் கடந்து விரிந்து கொள்ளும். இதன் பூர்வீகம் வட அமரிக்கா மற்றும் மத்திய அமரிக்கா. பின் இது தெற்கு ஆசியா, தென்கிழக்கு ஆசியா, பசிபிக் தீவுகள், ஆஸ்திரேலியா, நைஜீரியா, இந்தியா ஆகிய நாடுகளிலும் பரவியது. இது விதை மூலம் இனப் பெருக்கும் செய்யப்படுகிறது

புண்கள் குறைய: தொட்டாற்சுருங்கி இலையை உரலில் இடித்துச் சாறு எடுத்து, குழிபுண்ணில் இட்டு அதன்மேல் ஒரு வெற்றிலையை வைத்து துணியால் கட்டுப்போட்டு வர குழிப்புண் போன்ற புண்கள் குறையும்.

வயிற்று கடுப்பு குறைய: தொட்டாற் சிணுங்கி இலையை எடுத்து வெண்ணெய் போல் அரைத்து அதனுடன் தயிர் கலந்து குடித்து வந்தால் வயிற்றுக் கடுப்பு  குறையும்.

இடுப்புவலி குறைய: தொட்டால் சிணுங்கி இலையை தண்ணீர் விட்டு வேக வைத்து அந்த தண்ணீரை இடுப்பிற்குத் தாளும் படியான சூட்டில் தாரையாக விட  இடுப்பு வலி குறையும்.

சர்க்கரை நோய் குறைய: தொட்டாற் சுருங்கி இலை, வேர் இரண்டையும் காய வைத்து பொடி செய்து பாலில் கலந்து தினமும் காலையில் வெறும் வயிற்றில்  குடிக்க சர்க்கரை நோய் குறையும்.

உடல் குளிர்ச்சியாக: தொட்டால் சிணுங்கி இலை ஒரு பிடி அரைத்து எலுமிச்சையளவு மோரில் கலந்து மூன்று நாள் சாப்பிட உடல் குளிர்ச்சியாகும்.சிறுநீர் எரிச்சல் குறைய: தொட்டால் சிணுங்கி இலையை அரைத்து 10 கிராம் எடுத்து, காலையில் தயிருடன் கலந்து சாப்பிட சிறுநீர் எரிச்சல் குறையும்.

தேமல்

தொட்டா சிணுங்கி இலைச்சாறை தேமல் மேல் பூசிவர தேமல் குறையும். இந்த இலைச்சாற்றை பஞ்சில் தோய்த்து ஆறாத ரணங்களின் மீது  தடவி வர ஆறும்.

ஆண்மைக்குறைபாடு

ஆண்மைக்குறைபாடு உள்ளவர்கள் இதன் இலையை அரைத்து பாலில் 15 கிராம் கலந்து சாப்பிடவேண்டும். தொடர்ந்து 15 நாட்களுக்கு  சாப்பிட்டு வர ஆண்மை பெருகும்.

வாத வீக்கம் குறைய: தொட்டால் சிணுங்கி இலையைக் களிமண்ணுடன் அரைத்து பற்றிட வாத வீக்கும் குறையும்.தேமல் குறைய: தொட்டாற்சுருங்கி இலைச்சாறை தேமல் மேல் பூசிவர தேமல் குறையும்.வயிற்றுக்கடுப்பு: ஒரு கையளவு தொட்டாசிணுங்கி இலையை நன்றாக அரைத்து ஒரு குவளை தயிறுடன் கலந்து காலை உணவிற்கு முன் பருகவும்.

மூலச்சூடு குறைய: தொட்டால் சிணுங்கி வேரையும், இலையையும் சம அளவில் எடுத்து உலர்த்தி துணியில் சலித்து பசும்பாலில் கலந்து குடிக்க மூலச்சூடு  குறையும்.மூல நோய் குறைய: தொட்டாற் சுருங்கி இலை, நொச்சி இலை, எட்டி மர விதை, படிகாரம், வேப்பெண்ணெய், ஆமணக்கு எண்ணெய், தேன் மெழுகு ஆகியவற்றை  களிம்பு பதத்தில் அரைத்து மூலம் உள்ள பகுதியில் பூசி வந்தால் மூல முளை குறையும்

  • இலை பசை அரைத்து தோலின் மீது பூசும் பொழுது மூட்டுவலி, காயம், வீக்கம், தோல் நோய் குறையும்.
  • பாலுடன் சேர்த்து குடிக்கும் வெள்ளை போக்கு குறையும் (காலை – மாலை), விரை வாதம், சிறுநீரை கட்டுபடுத்த, சிறுநீரக கோளாறுகள் ,9 – வகையான மூலம் ,குழந்தை பேரு , இரத்ததை உறையாமல் வைக்கக்கூடியது மற்றும் இரத்தத்தை சுத்தபடுத்தும்.
  • வேர் டிகாஷன் – வால் மிளகு ,உப்பு .இதை 48- நாள் (காலை மட்டும்- 10-15 கி ).

மாதவிடாயின்  அதிக  இரத்தப்போக்கை கட்டுப்படுத்த

மாதவிடாயின் போது ஏற்படும் அதிகமான இரத்தப்போக்கை கட்டுப்படுத்த முழுச்செடியையும் இடித்து சாறு எடுத்து, 4 தேக்கரண்டி சாற்றுடன்,  தேன் கலந்து மூன்று வேளையும் குடிக்கவேண்டும். அல்லது ஒரு கைப்பிடி அளவு இலைகளுடன் சிறிதளவு சீரகம் வெங்காயத்தைச் சேர்த்து  அரைத்து எலுமிச்சை அளவு சாப்பிடவேண்டும்..

குழிப்புண் குணமாக  இவ்விலையைப் பறித்து வந்து  சுத்தம் செய்து, உள்ளங்கையில் வைத்துக் கசக்கி, அதில் இருந்து வரும் சாற்றை உடலில் ஏற்பட்டுள்ள குழிப்பண்ணீல் விடுவதோடு கொஞ்சம் இலையையும்  அந்தப்புண்ணின் மீது கசக்கி வைத்து தூய்மையான  துணியால் கட்டி வந்தால் சில நாட்களிலேயே குழிப்புண் குணமாகும்.


Share Tweet Send
0 Comments
Loading...