தமிழகத்தில் இன்று 31892 பேருக்கு கொரோனா பாதிப்பு.. 288 பேர் பலி!

தமிழகத்தில் இன்று 31892 பேருக்கு கொரோனா பாதிப்பு.. 288 பேர் பலி!

சென்னை: தமிழகத்தில் இன்று 31892 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக லாக்டவுன் அறிவித்தும் கூட தொடர்ந்து கொரோனா கேஸ்கள் தமிழகத்தில் உயர்ந்து வருகிறது.

கடந்த இரண்டு தினங்களாக 30 ஆயிரத்திற்கும் அதிகமாக கேஸ்கள் பதிவான நிலையில் இன்று தமிழகத்தில் 31 ஆயிரத்திற்கும் அதிகமாக கேஸ்கள் பதிவாகி உள்ளது. கொரோனா இரண்டாம் அலை தமிழகத்தில் தீவிரம் எடுத்துள்ளது.

சென்னை

சென்னையில் இன்று 6538 கொரோனா கேஸ்கள் பதிவாகி உள்ளது. 44313 பேர் சென்னையில் சிகிச்சை பெறும் நோயாளிகளாக உள்ளனர். கோவையில் 3197 பேருக்கு இன்று கொரோனா ஏற்பட்டுள்ளது. 18290 பேர் கோவையில் சிகிச்சை பெறும் நோயாளிகளாக உள்ளனர். செங்கல்பட்டில் 2225 பேருக்கு இன்று கொரோனா ஏற்பட்டுள்ளது. 13742 பேர் செங்கல்பட்டில் சிகிச்சை பெறும் நோயாளிகளாக உள்ளனர்.


Share Tweet Send
0 Comments
Loading...