தியாக சீலர் கக்கன் பிறந்த தினம் இன்று ..!

தியாக சீலர் கக்கன் பிறந்த தினம் இன்று ..!

இந்திய அரசியல் அமைப்பு அவையின் உறுப்பினர், கோயில் நுழைவுப் போராட்ட வீரர், காங்கிரஸ் கட்சியின் தலைவர், முன்னாள் அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர் என சேவையாற்றிய பூ. கக்கனின் பிறந்த நாள் இன்று.

கக்கன் பெயர் காரணம்:

கக்கன் என்பது கடவுளின் பெயர் தாழ்த்தப்பட்ட குலத்தில் பிறந்தவர்களுக்கு ஆண் பிள்ளையானால் கக்கன் என்றும், பெண் பிள்ளையானால் கக்கி என்றும் பெயரிடுவது வழக்கம்.

கரடு முரடான பாதையில்தான் இவரது அரசியல் பயணம் துவங்கியது. சுதந்திர போராட்டத்தில் இவர் பங்கேற்றததால் ஆங்கிலயே அரசு பல முறை சிறை தண்டனை அளித்து மகிழ்ந்தது.

மனைவி முன்னாள் சிறை தண்டனை:

சிறையில் அவருக்கு தொடர்ந்து 5 நாள் கசையடி கொடுக்கப்பட்டது. இவர் அடிவாங்குவதை பார்க்க, இவரது மனைவி 5 நாளுமே சிறைக்கு வரவழைக்கப்பட்டார் என்பதுதான் கொடுமையின் உச்சம்.

உடலின் கசையடி வலி ஒருபுறமும், தான் அடிவாங்குவதை மனைவி கண்கூடாக பார்ப்பது மறுபுறமும் என சேர்ந்துவிழுந்த கக்கனை, ஒரு மாட்டு வண்டியில் தூக்கி போட்டு, கால்கள் தரையில்பட தரதரவென சிகிச்சைக்காக இழுத்து சென்றனர் ஆங்கிலேய சிப்பாய்கள் .

அரசியலில் தடம் பதித்த கக்கன்:

18 மாத சிறை தண்டனைக்குப் பிறகு தேர்தல் களம்புகுந்தார் கக்கன் காமராஜர் முதல்வராக அமரும் போது தனது ஏழு அமைச்சர்களில் ஒருவராக கக்கனையும் சேர்த்துக் கொண்டார்.

அவரின் நேர்மைக்கு பரிசாக பொதுப்பணி, மற்றும் அரிசன நலம், வேளாண்மை, உளவுத்துறை, சிறுபாசனம், மதுவிலக்கு, கால்நடை பராமரிப்பு, அரிசன நலம், உள்துறை, நிதி, கல்வி, சிறைத்துறை, தொழிலாளர் நலம், அறநிலையத் துறை, போன்ற உயர்ந்த பொறுப்புகள் கொடுக்கப்பட்டன்

. கக்கன் அரசியலில் மட்டும் அல்ல வீட்டிலும் எளிமையானவர் அரசு வாகனத்தில் குடும்ப உறுப்பினர்கள் போக அனுமதிக்க மாட்டார்.

அவரது மனைவி ஒரு நாள் அரசு ஊழியரை மண்ணெண்ணெய் வாங்கிவர அனுப்பிய பொழுது கடுமையாக கண்டித்தார்.

அவரின் தம்பி விசுவநாதன் வேலையில்லாமல் இருந்த பொழுது சிபாரிசு செய்ய மறுத்தார் . 10 ஆண்டுகால ஆட்சியில் இருந்த கக்கனுக்கென்று கடைசி காலத்தில் தனக்கென எந்த சொத்தும் இல்லை.

மாதாமாதம் வருமானத்துக்கும் வழியில்லாமல் வாடகை வீட்டில் தி.நகரில் குடியேற அவரது மனைவியோ ஹாஸ்டல் ஒன்றில் வேலை பார்த்து சம்பாதித்து குடும்பத்தை காப்பாற்றினார்.

உஙகள் அன்பே போதும்:

1980 ம் ஆண்டு உடல்நலக் குறைவால் மதுரை ராஜாஜி மருத்துவமனையில் சேர்ந்தார் சொல்லப் போனால் அங்கு இருந்தவர்களுக்கே அந்த மாமனிதரை தெரியவில்லை .

சாதாரண மக்களுடன் மக்களாக மதுரை ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார் கக்கன். இந்த நிலையில் மதுரை முத்துவை நலம் விசாரிக்க சென்ற அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர். இதை கேள்விப்பட்டு அவர் தங்கி இருந்த வார்டுக்கு ஓடோடி சென்றார்.

மருத்துவமனையில் கோரைப்பாயில் படுத்த படுக்கையாய் எழுந்திருக்க கூட முடியாத நிலைமையில் இருந்த கக்கனை கண்ட எம்ஜிஆர் அதிர்ச்சியிலும் சோகத்திலும் உறைந்து போனார்

. கண்ணீர் மல்க அருகில் சென்ற எம்ஜிஆர், உங்களுக்கு என்ன வேண்டும் என்ன உதவி வேண்டுமானாலும் செய்கிறேன் என கூறினார்.

ஆனால் கக்கனோ ஒன்றும் வேண்டாம். நீங்கள் வந்ததே போதும். உங்கள் அன்பு போதும்" என்றார். ஆனால் எம்ஜிரோ, மருத்துவமனை பொறுப்பாளரை அழைத்து, ஐயாஇவர் யார் தெரியுமா?

இவரது உழைப்பால் பெற்ற சுதந்திரத்தால்தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இவரை இப்படி கீழே போட்டு படுக்க வைக்க உங்களுக்கு எப்படி மனதுவந்தது? உடனே தனி அறை ஏற்பாடு செய்யுங்கள் என உத்தரவிட்டார்.

‌        

பின்னர் அவரை எம்.ஜி.ஆர். வலுக் கட்டாயமாக சென்னைக்கு கொண்டு வந்து சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தார். ஆனால் முதுமை காரணமாக 1981, டிச 23-ல் கக்கன் காலமானார்.

கக்கன் தனது கடைசி காலத்தில் வறுமையில் வாடியதால் பிழைக்க தெரியாத அரசியல்வாதி என விமர்சிக்கப்பட்டார்.

நாட்டுக்கே சொத்தாகிப்போன கக்கன்:

ஆம் சொல்லப்போனால் கக்கன் சட்டையைப்போல் கொள்கையை மாற்றிக் கொள்ளாத லட்சிய வீரன்.

சவுக்கடிகளை தழும்புகளை பரிசாக பெற்ற மகான் , கறைபடியாத கரத்துக்கு சொந்தக்காரராக வாழ்ந்து . சொத்தே இல்லாமல் நாட்டுக்கே சொத்தாகிப்போன கக்கனின் பிறந்ததினம் இன்று.


Share Tweet Send
0 Comments
Loading...