திருநீறு -ஸ்லோகம்

திருநீறு -ஸ்லோகம்

திருநீறு எனப்படுவது மறைமுக மந்திர மருந்தாகப் பார்க்கப்படுகிறது. திருநீறு பல்வேறு நோய்களை போக்கக்கூடியதாக உள்ளது.

`நீறு' என்றால் சாம்பல்; `திருநீறு' என்றால் மகிமை பொருந்திய நீறு என்று பொருள். திருநீறு `விபூதி' என்றும் அழைக்கப்படும். விபூதி என்றால் ஞானம், ஐஸ்வர்யம் என்றெல்லாம் பொருள் தரும். `பிறப்பு, இறப்பு என்னும் கொடுமையான பிறவிச் சுழலிலிருந்து விடுவித்து, ஈசனின் திருவடிகளில் நம்மைக் கொண்டு சேர்க்கும் மாமருந்து திருநீறு’ என்று போற்றுகிறது திருஞானசம்பந்தரின் திருநீற்றுப் பதிகம்.

வடதிசை அல்லது கிழக்கு திசை நோக்கி நின்று ஆட்காட்டி விரல், நடுவிரல், மோதிர விரல் ஆகிய மூன்று விரல்களை கொண்டு கீழே சிந்தாமல் மூன்று கோடுகளாக நெற்றியில் பட்டை பொடுவதே உத்தமம். திருநீறு அணிகையில் “சிவாய நம” என்று மனதிற்குள் சிவ  மந்திரத்தை கூறியவாறே அணிவது மேலும் சிறந்தது.

நெற்றியில் பட்டை போட உதவும் மூன்று விரல்களும் சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகிய மூவரையும் குறிப்பதாக கூறப்படுகிறது. மேலும்  எவ்வளவு பெரிய மனிதராக இருந்தாலும் இறுதியில் பிடி சாம்பலாக போவதே உறுதி ஆகையால் என்றும் இறை சிந்தனையோடு அறநெறி  தவறாமல் வாழ வேண்டும் என்ற அற்புத தத்துவத்தையும் இது உணர்த்துகிறது.

திருநீறு எப்படி உருவாகிறது?
அறுகம்புல்லை உண்ணும் பசுமாடு போடும் சாணத்தை உருண்டையாக்கி அதனை காயவைத்து எடுக்க வேண்டும். அதனை உமியில் மூடி வைத்து புடம் போட்டு எடுக்க வேண்டும். இப்போது அந்த சாணம் வெந்து திருநீறு எனும் அருமருந்து தயாராகி விடும். இப்படி தயாராவதே உண்மையான திருநீறாகும்.

திருநீறு நன்மைகள்
நமது இந்து மத அடையாளங்களில் திருநீறு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. திருநீறு பூசும் போது கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த ஸ்லோகத்தை சொல்லி வழிபாடு செய்து வரலாம்.

நம்மை சுற்றி நல்லது கெட்டது என பல்வேறு அதிர்வுகள் இருக்கின்றன. நம்மை அறியாமல் நம் உடலுக்குள் அந்த எல்லா அதிர்வுகளும் சென்று வருகின்றன.

அருகம் புல் திருநீறு நம்மை சுற்றி இருக்கும் நல்ல கதிர்களையும், அதிர்வுகளை மட்டுமே உள்வாங்கும் திறனைக் கொண்டுள்ளது. இதன் காரணமாக நம் உடலில் பல்வேறு இடங்களில் திருநீறு இட்டுக் கொள்வதன் மூலம் அந்த நல்ல அதிர்வுகள் நம் உடல் ஏற்றுக் கொள்கின்றது.

திருநீறு உடலின் சில பாகங்களிலாவது அணிய வேண்டும் என கூறப்படுகிறது. அதிலும் குறிப்பாக நம் உடலில் மிக நுண்ணிய நரம்பு அதிர்வுகளை கொண்டுள்ள நெற்றியில் அணிவது மிகவும் அவசியம். நம் உடலிலேயே நெற்றி மிக அதிகமாக வெப்பத்தை உள் வாங்குவதும், வெளியிடும் பாகங்களாக இருக்கின்றன. இதன் காரணமாக நாம் நெற்றியில் திருநீறு அணிவது மிகவும் அவசியம். நெற்றி முழுவதும் நாம் திருநீறு அணியலாம். அல்லது நெற்றி பொட்டில் நாம் அணிவது அவசியம்.

அப்படி திருநீறு பூசும்போது சூரியக் கதிர்களின் சக்தியை நம் உடலினுள் இழுக்க பயன்படுகிறது. இதனால் நம் உடலில் உள்ள பல்வேறு நோய்களை தீர்க்கக் கூடிய அறுமருந்தாக மாறுகிறது.

திருநீறு இடும்போது நல்ல கதிர்களை ஈர்த்து உடலுக்கு கொடுப்பதைப் போல, சந்தனம் நம் உடலிலிருந்து வெளிப்படும் வெப்பத்தை நீக்குகிறது. அதே வெளியிலிருந்து வரும் வெப்பத்தையும் தடுக்கிறது. இதனால் வெப்ப மிகுதியால் ஏற்படக்கூடிய மூளை சோர்வு ஏற்படாமல் தடுக்கப்படுகிறது.

நாம் நம் விரலை நெற்றி பொட்டில் பட்டும் படாமல் சிறிது நேரம் வைக்க நம் மனம் ஒருநிலைப்படுவதை உணரலாம். அப்படிப்பட்ட மன ஒருநிலைப்பாட்டை அதிக நேரம் நீடிக்க வைக்கும் வல்லமை திருநீறுக்கு உண்டு. இதனால் தியானம் செய்த மன ஒருநிலைப்பாடு, பயன், சிந்தனைத் தெளிவு ஏற்படும்.

திருநீறு பூசும் இடங்களும் பயன்களும்:

புருவ மத்தியில் (ஆக்ஞா சக்கரம்) - ஞானத்தை ஈர்க்க வல்லது.

தொண்டைக்குழியில் பூசுதல் (விசுத்தி சக்கரம்) - நம் சக்தி அதிகமாகும்.

நெஞ்சுக்கூட்டின் மத்தியில் திருநீறு தரித்தால் நம் உடல் தெய்வீக அமைப்பை பெறும்.

நமது இந்து மத அடையாளங்களில் திருநீறு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த ஸ்லோகத்தை திருநீறு பூசும் போது சொன்னால் சிறப்பு.

பாஸனாத் பஸிதம் ப்ரோக்தம் பஸ்ம கல்மஷ பக்ஷணாத

பூதி: பூதிகரீபும்ஸாம் ரக்ஷா ரக்ஷாகரீ சுபா.


Share Tweet Send
0 Comments
Loading...