திகைக்க வைக்கும் திராட்சை சாகுபடி !

திகைக்க வைக்கும்  திராட்சை சாகுபடி !


7 ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக வெவ்வேறு நாடுகளில் பயிரிடப்படுகிறது.இது வைட்டேசி ஜஸ் குடும்பத்தைச் சேர்ந்த வைடிஸ் இனத்தின் தாவரமாகும். அதன் தளிர்கள், பல மீட்டர் நீளத்தை எட்டுகின்றன, அவை கொடிகள் என்று அழைக்கப்படுகின்றன.

திராட்சை காற்று மகரந்தச் சேர்க்கை ஆகும், இருப்பினும் பூச்சிகள் அவற்றை மகரந்தச் சேர்க்கை செய்யலாம். திராட்சை நல்ல தகவமைப்புத் தன்மையைக் கொண்டுள்ளது மற்றும் மிகவும் வறட்சியைத் தாங்கும்.

இரகங்கள்

பன்னீர் திராட்சை, அனாம் - இ - சாகி, தாம்சன் விதையில்லாதது, அர்காவதி, அர்கா சியாம், அர்கா காஞ்சன, அர்கா ஹான்ஸ், மாணிக்சமான், சோனாகா சரத் (விதையில்லாதது) ப்ளேம் விதையில்லாதது. அர்காசித்ரா, அர்காரிர்னா, அர்கா நீலாமானி, சுவேதா விதையில்லாதது, அர்கா மெஜிஸ்டிக் மற்றும் அர்கா சோமா மலைப்பகுதியைத் தவிர பன்னீர் அரகம், தமிழ்நாட்டின் எல்லா இடங்களிலும் பயிர் செய்ய ஏற்றது.

மண் மற்றும் தட்பவெப்பம்

நல்ல வடிகால் வசதியுள்ள வண்டல் மண் நிலமாக இருந்தால் நல்லது.

0.6 மீட்டர் அகலம், 0.6 மீட்டர் ஆழம், 3 மீட்டர்இடைவெளியில் குழிதோண்ட் வேண்டும். இது பன்னீர் ரகங்களுக்கு ஏற்றது. மற்ற ரகங்களாக இருந்தால் 1*1*1 மீட்டர் அளவுகள் குழிகளாக எடுக்க வேண்டும்.

நன்கு மக்கிய தொழௌரம், அல்லது பசுந்தழை உரம் அல்லது குப்பைகளைக் கொண்டு குழிகளை நிரப்ப வேண்டும். பின்பு ஜீன், ஜீலை மாதத்தில் வேர் வந்த முற்றிய குச்சிகளை நடவு செய்ய வேண்டும். பன்னீர் திராட்சையாக இருந்தால் 3*2 மீட்டர் இடைவெளியும் 4*3 மீட்டர் இடைவெளியும் விடவேண்டும்.

செடிகள் நட்ட உடனே நீர் பாய்ச்ச வேண்டும். அடுத்ததாக மூன்றாவது நாள் தண்ணீர் காட்டவேண்டும். அதைத் தொடர்ந்து வாரத்திற்கு ஒருமுறை கட்டாயம் நீர் காட்ட வேண்டும்.

ஆனால் கவாத்து செய்ய வேண்டும் என்றாலும், அறுவடை செய்ய வேண்டும் என்றாலும் அதற்கு 15 நாட்களுக்கு முன் நீர்பாய்ச்சுவதை நிறுத்திவிட வேடும்.

கொடி வளர்ப்பும் கவாத்தும்

நடவு செய்த செடி வளர வளர அதை ஒரே தண்டாக பந்தல் உயரத்திற்கு கொண்டு வரவேண்டும். பின்னர் நுனியைக் கிள்ளி விடவேண்டும். பக்கக் கிளைகளை எதிரெதிர் திசைகளில் பரவவிடவேண்டும். அதம் கிளைகளையும் மேலும் மேலும் கிள்ளிவிட்டு, திராட்சைக் கொடியை பந்தல் முழவதும் படரச் செய்ய வேண்டும்.

பொதுவாக நான்கு மொட்டு என்ற நிலையில் கவாத்து செய்வார்கள். அது எந்த ரக திராட்சை என்பதைப் பொறுத்து இரண்டு மொட்டு நிலையிலும் கவாத்து செய்வது உண்டு. அதேபோல், கோடைக்காலப் பயிராக இருந்தால் டிசம்பர் அல்லது ஜனவரியிலும், மழைக்காலப் பயிராக இருந்தால் மே அல்லது ஜீனில் கவாத்து செய்ய வேண்டும். தொழஉரம், பசுந்தாழ் உரம், தழைச்சத்து, மணிஅசத்து, சாம்பல் சத்து போன்ற உரங்களை ரகங்களுக்கு ஏற்ப இடவேண்டும்.

முக்கியமாக கவனிக்க வேண்டியது, பந்தல் முழுவதும் கொடிகள் நன்கு படர்ந்து வளர வகைசெய்ய வேண்டும். அதற்க்கு நுனியை அவ்வபோது வெட்டி விடுவது அவசியம். தாய்க் கொடியையும் பக்கவாட்டில் வளரும் கொடிகளின் நுனியையும் 12 முதல் 15 மொட்டுகள் விட்டே வெட்ட வேண்டும். அதிகமாக திராட்சைக் குலைகள் உள்ள கொடியாக இருந்தால், அதனை பந்தல் உடன் சேர்த்து கட்டவேண்டும்.

வண்டுகள், இலைப் பேன்கள், மாவு பூச்சுகள் தண்டு துளைப்பான்கள் போன்ற பூச்சுகளை கட்டுப்படுத்த இயற்க்கை முறை பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்தலாம். பூச்சிகளின் தாக்குதல் அதிகம் இருந்தால் ரசாயன பூச்சிக்கொல்லி மருந்துகளை விவசாய ஆய்வாளர்கள் ஆலோசனைப் படி செய்வது நல்லது.

பழங்கள் சீராகப் பழுக்க 0.2 சதவீதம் பொட்டாசியம் குளோரைடு (ஒரு லிட்டர் தண்ணீரில் 2 கிராம்) பழம் விட்ட 20-வது நாளிலும் 40-வது நாளிலும் தெளிக்க வேண்டும்.


Share Tweet Send
0 Comments
Loading...