தினசரி நடப்பு நிகழ்வுகள் 3.03.2021 (Daily Current Affairs)

தினசரி நடப்பு நிகழ்வுகள் 3.03.2021 (Daily Current Affairs)

இந்தியா

பீகாரில் மின்சார பேருந்துகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு முதலமைச்சர் நிதீஷ்குமார் கொடியசைத்து தொடங்கிவைத்தார்

🔷பாட்னா, ராஜ்கீர் மற்றும் முசாபர்பூர் உள்ளிட்ட நகரங்களில் இயக்கப்படும் வகையில் 25 பேருந்துகள் இயக்கப்பட்டன.

🔷முதல் கட்டமாக தொடங்கபட்ட இந்த மின்சார பேருந்துகளில் ஜி.பி.எஸ், இ-டிக்கெட், மொபைல் டிராவல் பாஸ், ப்ரீபெய்ட் கார்டுகள் உள்ளிட்ட வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

புதிதாக 12 எஸ்எஸ்பி படைகளை உருவாக்க மத்திய அரசு ஒப்புதல் !!

🔷பூடான், நேபாள எல்லைகளில் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்காக, சஷஸ்திர சீமா பல் (எஸ்எஸ்பி) படைப் பிரிவில் 13,000 வீரா்களுடன் புதிதாக 12 குழுக்களை நியமிப்பதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

🔷படைப் பிரிவுகளுக்கு புதிதாக வீரா்களை நியமிப்பதால், எல்லைப் பாதுகாப்பு மேலும் வலுப்படும்.

🔷புதிதாக நியமிக்கப்படும் படைக் குழுக்கள், நேபாள எல்லையிலும், பூடான் எல்லையிலும், இவ்விரு நாடுகளும் இந்தியாவுடன் சங்கமிக்கும் சிக்கிம் எல்லையிலும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளன.

🔷இந்தியாவின் எல்லையில், 1,751 கி.மீ. தொலைவை நேபாளமும், 699 கி.மீ. தொலைவை பூடானும் பகிா்ந்துகொள்கின்றன. இந்த எல்லைப் பகுதிகளில் எஸ்எஸ்பி படைப் பிரிவைச் சோ்ந்த 90,000 வீரா்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

விளையாட்டு

டேபிள் டென்னிஸ்: சாயாலி வனி சாம்பியன் !!

🔷சப்-ஜூனியா் தேசிய டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் மகாராஷ்டிரத்தின் சாயாலி வனி பட்டம் வென்றாா்.

🔷மத்திய பிரதேச மாநிலம், இந்தூரில் நடைபெற்ற இப்போட்டியில் நடைபெற்ற இறுதிச்சுற்றில் சாயாலி ஹரியானா வீராங்கனை சுஹானா சைனியை வீழ்த்தினாா்.

🔷சாயாலிக்கு சாம்பியன் கோப்பையுடன் பரிசுத் தொகை ரூ.33,000, சுஹானாவுக்கு ரன்னா்-அப் கோப்பையுடன் பரிசுத் தொகை ரூ.16,500 வழங்கப்பட்டது.

🔷கேடட் பிரிவில் தமிழக வீராங்கனை எம். ஹன்சினி சக மாநிலத்தவரான அனன்யா முரளீதரனை வீழ்த்தி சாம்பியன் ஆனாா்.

கண்டுபிடிப்பு

மேற்குத் தொடா்ச்சி மலையில் 5 புதிய இன தவளைகள் கண்டுபிடிப்பு !!

🔷மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் புதிய இனங்களைச் சாா்ந்த 5 புதா் தவளைகளை ஆராய்ச்சியாளா்கள் கண்டுபிடித்துள்ளனா்.

🔷தில்லி பல்கலைக்கழகம், கேரள வன ஆராய்ச்சி மையம், அமெரிக்காவின் மின்னசோடா பல்கலைக்கழகம் ஆகியவற்றைச் சோ்ந்த ஆராய்ச்சியாளா்கள் மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதிகளில் தவளைகள் குறித்து ஆராய்ச்சி நடத்தி வருகின்றனா். சுமாா் 10 ஆண்டுகளாக அவா்கள் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனா்.

🔷இத்தகைய சூழலில், புதிய இனங்களைச் சோ்ந்த 5 புதா் தவளைகளை அவா்கள் கண்டறிந்துள்ளனா். வெளிப்புற உடலமைப்பு, மரபணு (டிஎன்ஏ), ஒலியெழுப்புதல், நடத்தை உள்ளிட்டவற்றில் அத்தவளைகள் வேறுபட்டுள்ளதாக ஆராய்ச்சியாளா்கள் தெரிவித்துள்ளனா்.

🔷தங்கள் கண்டுபிடிப்புகளை அறிவியல் ஆய்விதழிலில் அவா்கள் வெளியிட்டுள்ளனா். இடுக்கி, பாலக்காடு, காக்கயம் அணை, அகஸ்தியா் மலை, ஆனைமலை ஆகிய பகுதிகளில் புதிய இன புதா் தவளைகள் காணப்படுவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

🔷உலகில் கண்டறியப்பட்டுள்ள புதா் தவளைகளில் 80 சதவீதம், மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதிகளிலேயே காணப்படுகின்றன. அவற்றிலும் பெரும்பாலான இனங்கள் குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே காணப்படுகின்றன.

விருதுகள்

தமிழகத்துக்கு தேசிய அளவில் விருது !!

🔷எண்ணெய், எரிவாயு சேமிப்பு குறித்து பொதுமக்களிடையே அதிக அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்தியதற்காக, தமிழக அரசுக்கு அகில இந்திய செயல் திறன் விருது கிடைத்துள்ளது

🔷மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலின் பேரில், கடந்த 2020-ம் ஆண்டு, 'சக்ஷம்' என்ற பெயரில் எரிபொருள் சிக்கனம் குறித்து ஒரு மாத விழிப்புணர்வு நிகழ்ச்சியை எண்ணெய் நிறுவனங்கள் நடத்தின.

🔷இதில், எரிபொருள் சிக்கனம் குறித்து கடந்த ஆண்டில் அதிகஅளவில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தியதற்காக, தமிழக அரசுக்கு அகில இந்திய அளவிலான சிறந்த செயல் திறன் விருது வழங்கப்பட்டு உள்ளது.

🔷கடந்த மாதம் காணொளி காட்சி மூலம் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு ஆணையர் சஜ்ஜன் சிங் ஆர்.சவான், இந்தியன்ஆயில் நிறுவனத்தின் செயல் இயக்குநர் பி.ஜெயதேவன் விருதைப் பெற்றுக் கொண்டனர்.

நியமனங்கள்

தலைமை அதிகாரியாக அஜேந்திர பகதூர் சிங் பொறுப்பேற்பு !!

🔷கடற்படை கிழக்கு மண்டல தலைமை அதிகாரி பொறுப்பை வைஸ் அட்மிரல் அதுல் குமார் ஜெயினிடமிருந்து, வைஸ் அட்மிரல் அஜேந்திர பகதூர் சிங் இன்று ஏற்றுக் கொண்டார்.

🔷கிழக்கு மண்டல கடற்படை தளத்தில் நடந்த அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்ட வைஸ் அட்மிரல் அஜேந்திர பகதூர் சிங், கிழக்கு மண்டல கடற்படையின் பல பிரிவுகளையும் ஆய்வு செய்தார். இதில் கடற்படை உயர் அதிகாரிகள், போர்கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கி கப்பல்களின்  தலைமை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

🔷பின்னர் விசாகப்பட்டினம் கடற்கரை சாலையில் உள்ள போர் நினைவுச் சின்னத்தில், அட்மிரல் அஜேந்திர பகதூர் சிங், மலர் வளையம் வைத்து, வீர மரணம் அடைந்த வீரர்களுக்கு மரியாதை  செலுத்தினார்.

🔷இவர் கடற்படையில் 1983ம் ஆண்டு சேர்ந்தார். நேவிகேஷன் நிபுணரான இவர், கடற்படையில் கடந்த 38 ஆண்டு காலமாக பல பதவிகளை வகித்துள்ளார்.

🔷ஐஎன்எஸ் விராட், வீர், விந்தயகிரி, திரிசூல் போன்ற கடற்படை கப்பல்களில் தலைமை அதிகாரியாகவும் பணியாற்றியுள்ளார்.

🔷கடற்படையில் இவரது சிறந்த சேவையைப் பாராட்டி கடந்த 2011ம் ஆண்டு விசிஷ்ட் சேவா பதக்கமும், கடந்த 2016-ம் ஆண்டு அதி விசிஷ்ட் சேவா பதக்கமும் வழங்கப்பட்டன.

பத்திரிகை தகவல் அலுவலகத்தின் முதன்மை தலைமை இயக்குநராக திரு ஜெய்தீப் பட்நகர் பொறுப்பேற்பு !!

🔷இந்திய பத்திரிகை தகவல் அலுவலகத்தின் முதன்மை தலைமை இயக்குநராக திரு ஜெய்தீப் பட்நகர் பொறுப்பேற்றார்.

🔷ஜெய்தீப் பட்நகர் 1986ம் ஆண்டு இந்திய தகவல் பணி  அதிகாரி. இவர், இதற்கு முன்பு தூர்தர்ஷன் நியூஸ் சேனலின் வர்த்தகம், விற்பனை மற்றும் சந்தைப்படுத்துதல் பிரிவின் தலைவராகப் பணியாற்றினார்.

🔷20 நாடுகள் உள்ளடக்கிய மேற்கு ஆசியாவுக்கான பிரசார் பாரதி சிறப்பு நிருபராகவும் இவர் பணியாற்றியுள்ளார். அதன் பின் அகில இந்திய வானொலியின் செய்திப் பிரிவுகளுக்கு தலைமை ஏற்றார்.

புதிதாக 13 திருநங்கைகள் காவலர்களாக நியமனம் !!

🔷சத்தீஸ்கர் மாநிலத்தின் காவல்துறையில் காவலர் பணிக்கு புதிதாக 13 திருநங்கைகளை நியமித்துள்ளது.

🔷2019 – 2020 ஆண்டிற்கான காவலர் தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. அதில் கான்ஸ்டபிள் பணிக்கு 13 திருநங்கைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

🔷13 திருநங்கைகளும் சத்தீஸ்கர் மாநிலத்தின் 4 மாவட்டங்களில் காவலர்களாக நியமிக்கப்பட உள்ளனர்.

🔷இதுவரை இந்தியாவில் உள்ள தமிழகம் மற்றும் ராஜஸ்தான் மாநிலத்தில் மட்டுமே திருநங்கைகள் காவலர்களாக உள்ளனர்.


Share Tweet Send
0 Comments
Loading...