தினசரி நடப்பு நிகழ்வுகள் 9.9.2021 (Daily Current Affairs)

தினசரி நடப்பு நிகழ்வுகள் 9.9.2021 (Daily Current Affairs)

நியமனங்கள்

தமிழக புதிய கவர்னராக ஆர்.என்.ரவி நியமனம்..!!

🔷தமிழகத்தின் புதிய கவர்னராக ஆர்.என்.ரவியை நியமனம் செய்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார்.

🔷தமிழக கவர்னராக பன்வாரிலால் புரோகித் பதவி வகித்து வந்தார். சமீபத்தில் அவருக்கு பஞ்சாப் கவர்னர் பதவி கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டது. இந்த நிலையில் அவர் பஞ்சாப் கவர்னராக நியமிக்கப்பட்டு, தமிழகத்திற்கு புதிய கவர்னர் நியமிக்கப்பட்டு உள்ளார்.

🔷நாகலாந்து கவர்னராக இருக்கும் ஆர்.என்.ரவி தமிழகத்தின் புதிய கவர்னராக நியமிக்கப்பட்டு உள்ளார். நாகலாந்து கவர்னர் பதவி அசாம் மாநில கவர்னர் ஜெகதீஷ் முக்திக்கு கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டு உள்ளது.

🔷உத்தரகாண்ட் கவர்னர் பதவி வகித்த பேபி ராணி மவுரியாவின் ராஜினாமா ஏற்கப்பட்டுள்ளது. அந்த மாநிலத்தின் புதிய கவர்னராக குர்மித் சிங் நியமிக்கப்பட்டு உள்ளார்.

🔷தமிழகத்தின் புதிய கவர்னராக நியமிக்கப்பட்டுள்ள ஆர்.என்.ரவி (வயது 69) பீகார் மாநிலம் பாட்னாவை சேர்ந்தவர்.

🔷1976 ஆம் ஆண்டு கேரள பிரிவு ஐ.பி.எஸ். அதிகாரியான இவர், இந்திய உளவு அமைப்பு (ஐ.பி.) சிறப்பு இயக்குனராக பணியாற்றி 2012 இல் ஓய்வு பெற்றவர். அதன்பிறகு நாகா பயங்கரவாத அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்தும் குழுவின் பிரதிநிதியாக மத்திய அரசு நியமித்து இருந்தது. தனி மாநில கோரிக்கையை வலியுறுத்தி வந்த நாகா அமைப்புகளுக்கும், மத்திய அரசுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடத்தி சுமுக தீர்வு காண பாடுபட்டவர்.

🔷2018 ஆம் ஆண்டு தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகராக நியமிக்கப்பட்டார். கடந்த 2019 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் நாகலாந்து கவர்னராக நியமிக்கப்பட்டார்.

தமிழ்நாடு

சிறந்த இதழியலாளருக்கு கலைஞர் எழுதுகோல் விருது..!!

🔷சிறந்த இதழியலாளருக்கு கலைஞர் எழுதுகோல் விருது மற்றும் ரூ.5 லட்சம் பரிசு தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கூறினார்.

🔷பத்திரிகையாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் அனைத்து திட்டங்களையும் ஒருங்கிணைத்து செயல்படுத்தவும், நலவாரிய உதவிதொகைகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் அளித்திடும் வகையில் பத்திரிகையாளர்கள் நலவாரியம் அமைக்கப்படும்.

🔷பத்திரிகை துறையில் பணியாற்றும் ஆசிரியர், உதவி ஆசிரியர், நிருபர், புகைப்படக்காரர், பிழை திருத்துவோர் பணிக்காலத்தில் இயற்கை எய்திட நேரிட்டால் முதல்-அமைச்சர் பொதுநிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும் ரூ.3 லட்ச குடும்ப உதவி நிதி இனி ரூ.5 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும்.

🔷இளம் பத்திரிகையாளர்கள் ஊடகத்துறையில் சிறந்து விளங்கவும், அதன் நுணுக்கங்களை அறிந்துகொள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் மாஸ் கம்யூனிகேசன், ஏசியன் காலேஜ் ஆப் ஜர்னலிசம் போன்ற பத்திரிகை சார்ந்த கல்வி நிறுவனங்களில் உயர் கல்வி படிக்கவும், பயிற்சி பெறவும் நிதியுதவி வழங்கப்படும்.

🔷இதழியல் துறையில் சமூக மேம்பாட்டிற்காகவும், விளிம்பு நிலை மக்களின் மேம்பாட்டிற்காகவும் பங்காற்றி வரும் ஒரு சிறந்த இதழியலாளருக்கு ஆண்டுதோறும் கலைஞர் எழுதுகோல் விருது மற்றும் ரூ.5 லட்சம் பரிசு தொகையுடன் பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும்.

🔷அரசின் செயல்பாடுகள் மற்றும் திட்டங்களை பொது மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் சமூக ஊடக பிரிவு என்ற தனி பிரிவு உருவாக்கப்படும். அரசின் விளம்பரங்களுக்கு மின் சுவர்கள் உருவாக்கப்படும்.

இந்தியா

பிபிசிஎல் நிறுவனத்தின் புதிய தலைவா் அருண் குமாா் சிங்..!!

🔷பாரத் பெட்ரோலியம் காா்ப்பரேஷன் நிறுவனத்தின் (பிபிசிஎல்) புதிய தலைவராக அருண் குமாா் சிங் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளாா்.

🔷பிபிசிஎல் நிறுவனத்தின் தலைவராக இருந்த டி.ராஜ்குமாா் கடந்த 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ஓய்வு பெற்றதைத் தொடா்ந்து, அந்தப் பதவிக்கு அருண் குமாா் சிங் பொதுத் துறை நிறுவன தோ்வு குழுவால் (பிஇஎஸ்பி) நடப்பாண்டு மே மாதத்தில் தோ்வு செய்யப்பட்டாா். இந்த நிலையில், தற்போது அவா் நிறுவனத்தின் தலைவா் மற்றும் நிா்வாக இயக்குநராக பொறுப்பேற்றுக் கொண்டுள்ளாா்.

🔷நிறுவனத்தின் நிதிப் பிரிவின் புதிய இயக்குநராக வெஸ்டா ராமகிருஷ்ணா குப்தாவும் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளதாக பிபிசிஎல் தெரிவித்துள்ளது.


Share Tweet Send
0 Comments
Loading...