தினசரி நடப்பு நிகழ்வுகள் 9.5.2021 (Daily Current Affairs)

தினசரி நடப்பு நிகழ்வுகள் 9.5.2021 (Daily Current Affairs)

தமிழ்நாடு

தமிழகத்திற்கு 533.2 கோடி ரூபாய் அடிப்படை மானியத் தொகை ஒதுக்கீடு..!!

🔷தமிழகத்திற்கு 533.2 கோடி ரூபாய் அடிப்படை மானியத் தொகை நிதியை மத்திய நிதியமைச்சகம் ஒதுக்கீடு செய்துள்ளது.

🔷தமிழகம் உள்ளிட்ட 25 மாநில ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு, 8,923.8 கோடி ரூபாய் அடிப்படை மானியத்தை (Basic Untied Grants) நிதி அமைச்சகம் விடுவித்துள்ளது. இதில், தமிழகத்திற்கு 533.2 கோடி ரூபாய் அடிப்படை மானியமாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

🔷2021-22-ஆம் ஆண்டு நிதியாண்டின் அடிப்படை மானியத்தின் முதல் தவணைத் தொகை இது என்பது குறிப்பிடத்தக்கது. பொதுவாக, ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரு நிதியாண்டின் அடிப்படை மானியத்தின் முதல் தவணை ஜூன் மாதத்தில் விடுவிக்கப்படும்.

தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக சண்முகசுந்தரம் நியமனம்..!!

🔷தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக சண்முகசுந்தரம் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

🔷தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றபிறகு உயர் அதிகாரிகளின் பணியிடங்கள் மாற்றப்பட்டு வருகின்றன.

🔷தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்பதற்கு முன்னதாகவே தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக இருந்த விஜய நாராயணன் தனது பதவியை ராஜிநாமா செய்தார்.

🔷இதையடுத்து தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக சண்முகசுந்தரத்தை நியமித்து ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உத்தரவிட்டுள்ளார்.

🔷முன்னதாக, சென்னை மாநகராட்சி ஆணையராக இருந்த பிரகாஷ் ஐஏஎஸ் மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக, வேளாண்துறை செயலாளராக இருந்த ககன்தீப் சிங் பேடி சென்னை மாநகராட்சியின் புதிய ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

விளையாட்டு

ஸ்பெயின் பார்முலா 1 கார் பந்தயத்தில் ஹாமில்டன் முதலிடம்..!!

🔷இந்த ஆண்டுக்கான பார்முலா1 கார்பந்தயம் உலகம் முழுவதும் 23 சுற்றுகளாக நடத்தப்படுகிறது. இதன் 4-வது சுற்றான ஸ்பெயின் கிராண்ட்பிரி பார்சிலோனாவில் நடந்தது.

🔷308.424 கிலோமீட்டர் பந்தய தூரத்தை நோக்கி வழக்கம் போல் 10 அணிகளைச் சேர்ந்த 20 வீரர்கள் காரில் சீறிப்பாய்ந்தனர். இதில் தகுதி சுற்றில் முதலிடம் பிடித்த 7 முறை சாம்பியனான இங்கிலாந்தின் லீவிஸ் ஹாமில்டன் (மெர்சிடஸ் அணி) எதிர்பார்த்தது போலவே முதலாவது வந்து 25 புள்ளிகளை தட்டிச் சென்றார்.

🔷அவர் பந்தய தூரத்தை 1 மணி 33 நிமிடங்கள் 07.680 வினாடிகளில் எட்டி வெற்றி கண்டார். அவரை விட 15.841 வினாடி பின்தங்கிய நெதர்லாந்து வீரர் மேக்ஸ் வெர்ஸ்டப்பென் (ரெட்புல் அணி) 2-வதாக வந்து 19 புள்ளிகளை பெற்றார். பின்லாந்து வீரர் வால்டெரி போட்டாஸ் (மெர்சிடஸ்) 3-வது இடத்தை பிடித்தார்.

🔷இந்த சீசனில் 3-வது வெற்றியை ருசித்த ஹாமில்டன் சாம்பியன்ஷிப் வாய்ப்பில் மொத்தம் 94 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறார். வெர்ஸ்டப்பென் 80 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் இருக்கிறார். 5-வது சுற்று போட்டி வருகிற 23-ந்தேதி மொனாக்கோவில்நடக்கிறது.

நியமனங்கள்

சென்னை மாநகராட்சி ஆணையராக ககன்தீப் சிங் பேடி நியமனம்..!!

🔷சென்னை மாநகராட்சி ஆணையராக ககன்தீப் சிங் பேடி நியமிக்கப்பட்டுள்ளாா். இதற்கான உத்தரவை தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு பிறப்பித்துள்ளாா்.

🔷இந்த நிலையில், முதன்மைச் செயலாளா் அந்தஸ்திலான அதிகாரியான ககன்தீப் சிங் பேடி, பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளாா். மாநகராட்சி ஆணையராக இருந்த கோ.பிரகாஷுக்கு வேறு பொறுப்பு அளிக்கப்பட உள்ளது.

🔷பெருமழை, வெள்ளம், வறட்சி போன்ற நெருக்கடியான காலங்களில் சிறப்பான பணிகளை ககன்தீப் சிங் பேடி மேற்கொண்டவா். 1993 - ஆம் ஆண்டு தமிழகப் பிரிவு ஐ.ஏ.எஸ். அதிகாரியான அவா், மதுரை மாநகராட்சி ஆணையராகவும், மதுரை, கன்னியாகுமரி மாவட்டங்களின் ஆட்சியராகவும் பொறுப்புகளை வகித்துள்ளாா்.

🔷தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியத்தின் நிா்வாக இயக்குநா், ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, வேளாண்மைத் துறைகளின் செயலாளராக பொறுப்பு வகித்தாா்.

அசாம் மாநிலத்தின் புதிய முதலமைச்சராக பாஜகவின் ஹிமந்த பிஸ்வ சர்மா தேர்வு..!!

🔷அசாம் மாநிலத்தின் புதிய முதலமைச்சராக பாஜகவின் ஹிமந்த பிஸ்வ சர்மா பொறுப்பேற்க உள்ளார். 126 உறுப்பினர் கொண்ட அசாம் சட்டமன்றத்தில் பாஜக 60 தொகுதிகளையும், கூட்டணிக் கட்சிகள் 15 தொகுதிகளையும் கைப்பற்றியுள்ளன.

🔷முந்தைய அமைச்சரவையில் நிதியமைச்சராக இருந்த ஹிமந்த பிஸ்வ சர்மா முதலமைச்சராக விரும்பியதால் போட்டி நிலவியது.

🔷டெல்லியிலும் குவகாத்தியிலும் கட்சித் தலைமை முன்னிலையில் நடந்த பேச்சில் ஹிமந்த பிஸ்வ சர்மாவை முதலமைச்சராகத் தேர்வு செய்ய முடிவெடுக்கப்பட்டது.

🔷இதையடுத்து முதலமைச்சர் பதவியில் இருந்து விலகுவதற்கான கடிதத்தை சர்வானந்த சோனோவால் ஆளுநரிடம் அளித்தார். பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் தலைவராக ஹிமந்த பிஸ்வ சர்மா தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஒப்பந்தங்கள் / புரிந்துணர்வு ஒப்பந்தம்(MoU)

தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் - இந்தியா, ஐரோப்பிய யூனியன் மீண்டும் பேச்சு தொடங்க முடிவு..!!

🔷இந்தியா, ஐரோப்பிய யூனியன் இடையிலான தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் தொடா்பாக 8 ஆண்டுகளுக்குப் பின்னா் இருதரப்பும் மீண்டும் பேச்சுவாா்த்தையை தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

🔷இதுதொடா்பாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், ‘இந்திய பிரதமா் மோடி, ஐரோப்பிய யூனியனில் அங்கம் வகிக்கும் 27 நாடுகளின் தலைவா்கள் பங்கேற்ற உச்சிமாநாடு காணொலி வழியாக நடைபெற்றது. அப்போது வா்த்தகம், முதலீடு உள்ளிட்ட தளங்களில் ஒட்டுமொத்த ஒத்துழைப்பை விரிவுபடுத்தும் நோக்கில் இந்தியா, ஐரோப்பிய யூனியன் இடையே தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் தொடா்பான பேச்சுவாா்த்தையை மீண்டும் தொடங்க முடிவு செய்யப்பட்டது.

🔷இந்த மாநாட்டில் சுகாதாரத் துறையில் ஒத்துழைப்பு தொடா்பான தங்கள் கருத்துகளையும் தலைவா்கள் பகிா்ந்துகொண்டனா். இந்த மாநாடு இந்தியா, ஐரோப்பிய யூனியன் இடையிலான உறவில் திருப்புமுனையாக அமைந்தது’ என்று தெரிவிக்கப்பட்டது.

🔷கடந்த 2018-19 ஆம் ஆண்டில் இந்தியா, ஐரோப்பிய யூனியன் இடையிலான இருதரப்பு வா்த்தகம் 115.6 பில்லியன் டாலா்களாக (சுமாா் ரூ.8.46 லட்சம் கோடி) இருந்தது. இதில் ஏற்றுமதி 57.17 பில்லியன் டாலா்களாகவும் (ரூ.4.18 லட்சம் கோடி), இறக்குமதி 58.42 பில்லியன் டாலா்களாகவும் (ரூ.4.28 லட்சம் கோடி) இருந்தன.

‌‌


Share Tweet Send
0 Comments
Loading...