தினசரி நடப்பு நிகழ்வுகள் 9.4.2021 (Daily Current Affairs)

தினசரி நடப்பு நிகழ்வுகள் 9.4.2021 (Daily Current Affairs)

இந்தியா

ஓட்டுனர் உரிமத்திற்கான தேசியப் பதிவேடு !!

🔷சமீபத்தில் சாலைப் போக்குவரத்து அமைச்சகமானது ஓட்டுனர் உரிமத்திற்கான தேசியப் பதிவேடு உருவாக்கப்படும் என அறிவித்துள்ளது.

🔷நாட்டில் போலியான ஓட்டுநர் அட்டைகளை ஒழிப்பதற்காக இம்முடிவு மேற்கொள்ளப்பட்டது.

🔷பெரும்பாலான மாநிலங்கள் ஏற்கனவே தேசியத் தகவல் மையத்தின் சாரதி என்ற தளத்தில் பதிவு செய்துள்ளன.

🔷இந்த மாநிலங்களுக்கு புதிதாக உருவாக்கப்பட்ட தேசிய பதிவேட்டிற்கு மாறுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

நியமனங்கள்

அடல் கண்டுபிடிப்பு திட்டத்திற்கு இயக்குநர் நியமனம் !!

🔷அடல் கண்டுபிடிப்பு திட்டத்திற்கான (Atal Innovation Mission (AIM)) திட்ட இயக்குநராக சிந்தன் வைஷ்ணவ் (Dr Chintan Vaishnav) நியமிக்கப்பட்டுள்ளார்.

🔷நிதி ஆயோக்கின் திட்டமான  அடல் கண்டுபிடிப்பு திட்டமானது 2016 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இதன் முக்கிய நோக்கம், இந்தியாவில், புதுமை மற்றும் தொழில்முனைவு கலாச்சாரத்தை மேம்படுத்துவதாகும்.

SIDBI இன் நிர்வாக இயக்குநர் நியமனம் !!

🔷இந்திய சிறு தொழில்கள் மற்றும் மேம்பாட்டு வங்கியின் (Small Industries and Development Bank of India) தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக எஸ்.ராமன் (S Raman)  நியமிக்கப்பட்டுள்ளார்.

🔷அவர் பொறுப்பேற்ற நாளிலிருந்து மூன்று வருட காலத்திற்கு அல்லது அடுத்த உத்தரவு வரும் வரை இவர் பணியாற்றுவார்.

🔷1991 ஆம் ஆண்டு இந்திய தணிக்கை மற்றும் கணக்கு சேவை அதிகாரியான ராமன், தற்போது இந்தியாவின் முதல் தகவல் பயன்பாடான நேஷனல் இ-கவர்னன்ஸ் சர்வீசஸ் லிமிடெட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக உள்ளார்.

விளையாட்டு

பாகிஸ்தான், சாத் கால்பந்து சம்மேளனங்கள் சஸ்பென்ட் !!

🔷பாகிஸ்தான், சாத் ஆகிய நாடுகளின் கால்பந்து சம்மேளனங்களை இடைநீக்கம் செய்து சா்வதேச கால்பந்து அமைப்பான ஃபிஃபா நடவடிக்கை எடுத்துள்ளது.

🔷பாகிஸ்தான் சம்மேளனத்தின் நிா்வாகத்தில் 3-ஆம் நபா்களின் தலையீடு ஏற்பட்டதை அடுத்து அந்த அமைப்பை ஃபிஃபா இடைநீக்கம் செய்துள்ளது.

🔷கடந்த 4 ஆண்டுகளில் 2-ஆவது முறையாக பாகிஸ்தான் சம்மேளனம் இந்த நடவடிக்கைக்கு ஆளாவது குறிப்பிடத்தக்கது.

🔷சாத் நாட்டில் தேசிய கால்பந்து சம்மேளனத்தை கலைத்துவிட்டு புதிய தலைமையை நியமிக்க அந்நாட்டு அரசு முயற்சி செய்ததை அடுத்து, அந்த நாட்டு கால்பந்து சம்மேளனத்தை ஃபிஃபா சஸ்பென்ட் செய்துள்ளது.

🔷அரசு தனது அந்த முயற்சியை கைவிட்டால் சாத் சம்மேளனம் மீதான தடையை நீக்குவதாக ஃபிஃபா தெரிவித்துள்ளது.

விருதுகள்

2020ஆம் ஆண்டிற்கான மகாராஷ்டிர பூஷண் விருது !!

🔷புகழ்பெற்ற பாடகி ஆஷா போஸ்லே 2020ஆம் ஆண்டிற்கான மகாராஷ்டிர பூஷண் விருதுக்கு தேர்வுசெய்யப்பட்டுள்ளதாக மகாராஷ்டிரா அரசு அறிவித்துள்ளது.

🔷இது, அம்மாநில அரசின் மிகவுயர்ந்த கெளரவமாகும். முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தலைமையிலான குழு இந்த முடிவை எடுத்துள்ளது.

🔷அம்மாநிலத்தைச் சார்ந்த புகழ்பெற்ற நபர்களின் சிறப்பான சாதனைகளை அங்கீகரிப்பதற்காக இவ்விருது, கடந்த 1996ஆம் ஆண்டில் மகாராஷ்டிர மாநில அரசால் நிறுவப்பட்டது.

மார்ச் மாதத்துக்கான ஐ.சி.சி.விருது பட்டியலில் புவனேஷ்வர்குமார் !!

🔷சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.), ஒவ்வொரு மாதத்தில் நடைபெறும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் சிறந்து விளங்கும் வீரர், வீராங்கனையை தேர்வு செய்து விருது வழங்கி கெளரவிக்கிறது.

🔷கடந்த (மார்ச்) மாதத்துக்கான சிறந்த வீரருக்கான விருது பட்டியலில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர்குமார், ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கான், ஜிம்பாப்வே கேப்டன் சீன் வில்லியம்ஸ் ஆகியோரும், சிறந்த வீராங்கனைக்கான விருது பட்டியலில் இந்திய வீராங்கனைகள் ராஜேஸ்வரி கெய்க்வாட், பூனம் ரவுத், தென்ஆப்பிரிக்கா வீராங்கனை லிசல் லீ ஆகியோரும் இடம் பிடித்துள்ளனர்.

🔷இதில் இருந்து விருதுக்குரிய ஒரு வீரர், வீராங்கனையை முன்னாள் வீரர்கள், பத்திரிகையாளர்கள் உள்ளிட்டோர் அடங்கிய ஐ.சி.சி. வாக்கு அகாடமி மற்றும் ரசிகர்கள் வாக்களித்து தேர்வு செய்வார்கள்.

அறிவியல் தொழில்நுட்பம்

பார்வையற்றோருக்கான தொடு உணர்வுடைய கடிகாரம் !!

🔷தொடு உணர்வுடைய கடிகாரம், பார்வையற்றோருக்கு நேரத்தை துல்லியமாக உணர உதவியாக இருக்கும்.

🔷இந்த கடிகாரம் கான்பூரின் இந்தியத் தொழில்நுட்பக் கல்வி நிறுவனப் பேராசிரியர் சித்தார்த்தா பாண்டா மற்றும் விஷ்வராஜ் ஸ்ரீவஸ்தவா ஆகியோரால் உருவாக்கப்பட்டது.

🔷இக்கடிகாரத்தை பயன்படுத்துபவர், அதன் தொடு உணர்வு மணி குறிகாட்டியினைத் தொட்டு அதை ஸ்கேன் செய்ய வேண்டும்.

🔷வெவ்வேறு அதிர்வலைகள் மூலம், அந்த கடிகாரம் நேரம் பற்றிய தகவல்களைப் பயனாளிக்கு வழங்கும்.  இதன் மூலம் பயனாளி நேரத்தை அறிய இயலும்.

இறப்பு

இங்கிலாந்து இளவரசர் பிலிப் காலமானார் !!

🔷இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவரும் இளவரசருமான பிலிப் உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 99.

🔷இளவரசர் சார்லசின் தந்தையான பிலிப், வயது மூப்பினால் 2017ம் ஆண்டு முதல் அரசு பொறுப்புகளில் இருந்து ஓய்வு பெற்றார். இங்கிலாந்து  அரச குடும்ப வரலாற்றில் நீண்ட காலம் இளவரசராக இருந்த பெருமைக்குரியவர் பிலிப்.

🔷அரசு பணிகள் மட்டுமின்றி ராணுவத்திலும் சிறப்பாக  பணியாற்றிய இளவரசர் பிலிப்,  பல்வேறு சேவைகள் செய்த புகழுக்குரியவர்.


Share Tweet Send
0 Comments
Loading...