தினசரி நடப்பு நிகழ்வுகள் 9.3.2021 (Daily Current Affairs)

தினசரி நடப்பு நிகழ்வுகள் 9.3.2021 (Daily Current Affairs)

உலகம்

வங்க தேச நாட்டின் 50 வது சுதந்திர தின விழா !!

🔷வங்க தேசம் வரும் மார்ச் 26 ஆம் தேதி 50 வது சுதந்திரதின விழாவினை கொண்டாடவுள்ளது.

🔷வங்க தேசத்தின் சுதந்திர தினத்தின் 50 வது பொன் விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கவுள்ளார். 1971 ஆம் ஆண்டு கிழக்கு பாக்கிஸ்தான் பிரிந்து வங்க தேசமாக உருவாகியுள்ளது.

🔷இதன் 50 வது சுதந்திர தின விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க உள்ளார். இதற்காக பிரதமர் வரும் மார்ச் 25 ஆம் தேதி வங்க தேசம் பயணிக்கவுள்ளார்.

🔷இந்த நிகழ்விற்கு அடுத்து தாஹா – மேற்கு வங்கம் நியூ ஜைபல்பூரி இடையேயான ரயில் சேவையினை துவக்கி வைக்கவுள்ளனர்.

இந்தியா வங்கதேசம் இடையே கட்டப்பட்டுள்ள மைத்ரி சேது பாலம் !!

🔷வடகிழக்கு மாநிலமான திரிபுரா மற்றும் வங்கதேசம் இடையே பெனி ஆறு பாய்கிறது. இந்த ஆற்றின் குறுக்கே இரு நாடுகளையும் இணைக்கும் வகையில் மைத்ரி சேது பாலம் கட்டப்பட்டது.

🔷1.9 கி.மீ. நீளமுள்ள இந்த பாலம் திரிபுராவின் சப்ரூம் நகரையும் வங்கதேசத்தின் ராம்கரையும் இணைக்கிறது. இந்த பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

🔷இந்நிகழ்ச்சியில், திரிபுராவில் முடிக்கப்பட்ட மேலும் சில உள்கட்டமைப்பு திட்டங்களை தொடங்கி வைத்ததுடன் சில புதிய திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டினார்.

இந்தியா

காஞ்சி காமகோடி குழந்தைகள் மருத்துவமனை !!

🔷இந்தியாவின் சிறந்த குழந்தைகள் நல மருத்துவமனையாக காஞ்சி காமகோடி குழந்தைகள் அறக்கட்டளை மருத்துவமனை தோ்வு செய்யப்பட்டுள்ளது. அந்த மருத்துவமனையின் சேவைகள், மருத்துவ வசதிகள் மற்றும் சிகிச்சை கட்டமைப்பு ஆகியவை சிறப்பாக இருப்பதற்காக இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

🔷உலகளாவிய தர ஆய்வு நிறுவனமாக ஸ்டாஸ்டிகா நிறுவனமும், நியூஸ் வீக் இதழும் இணைந்து சா்வதேச அளவில் சிறந்து விளங்கும் மருத்துவமனைகளின் பட்டியலை வெளியிட்டன.

🔷அதில் அமெரிக்கா, கனடா, ஜொ்மனி, பிரிட்டன், இந்தியா உள்ளிட்ட 25 நாடுகளில் உள்ள தலை சிறந்த மருத்துவமனைகளைத் தர ஆய்வுக்குட்படுத்தி அதன் அடிப்படையில் சிறந்த மருத்துவமனைகள் தோ்வு செய்யப்பட்டிருந்தன.

🔷இந்தியாவைப் பொருத்தவரை மொத்தம் 11 மருத்துவமனைகளின் சேவைகள் சிறப்பாக உள்ளதாக அங்கீகாரம் அளிக்கப்பட்டிருந்தது. அதில் குழந்தைகள் நல சிகிச்சைகளைப் பொருத்தவரை நாட்டிலேயே சிறந்த மருத்துவமனையாக காஞ்சி காமகோடி அறக்கட்டளை மருத்துவமனை தோ்வாகியுள்ளது.

ரூ.242 கோடியில் அயோத்தியில் விமான நிலையம் கட்ட ஒப்புதல் !!

🔷உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் விமான நிலையம் கட்டுவதற்கு ரூ.242 கோடி ஒதுக்கீடு செய்து, அதற்கான ஒப்புதலை இந்திய விமான நிலையங்கள் ஆணையம் (ஏஏஐ) ஒப்புதல் வழங்கியுள்ளது.

🔷அயோத்தியில் விமான நிலையம் கட்டப்படவுள்ளது. அங்கு எழுப்பப்படவுள்ள ராமா் கோயிலுக்கு வருகை தரும் பக்தா்களுக்கு இந்த விமான நிலையம் பெரிதும் பயனுள்ளதாக அமையும்.

🔷விமான நிலையம் கட்டுவதற்கு ரூ.242 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதற்கான ஒப்புதலை இந்திய விமான நிலையங்கள் ஆணையம் வழங்கியுள்ளது. முதல்கட்ட விமான நிலையப் பணிகளுக்கு சுமாா் 270 ஏக்கா் நிலத்தை உத்தர பிரதேச அரசு வழங்கியுள்ளது.

🔷உத்தர பிரதேச சட்டப்பேரவையில் சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் அயோத்தியில் விமான நிலையம் கட்டுவதற்கு ரூ.101 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

பெங்களூருவில் அமைய உள்ள உலகின் மிகப்பெரிய இ-ஸ்கூட்டர் தொழிற்சாலை !!

🔷பெங்களூருவில் அமைய உள்ள உலகின் மிகப்பெரிய இ-ஸ்கூட்டர் தொழிற்சாலையை ஓலா நிறுவனர் பவிஷ் அகர்வால் பார்வையிட்டுள்ளார்.

🔷அடுத்த 12 மாதத்தில் இந்த 500 ஏக்கர் பரப்பளவு கொண்ட காலி நிலத்தில் உலகிலேயே மிகப்பெரிய இ-ஸ்கூட்டர் தொழிற்சாலையை அமைக்கவும் அவர் திட்டமிட்டுள்ளார். அதன்மூலம் ஆண்டுக்கு 10 மில்லியன் வாகனங்களை உற்பத்தி செய்யவும் ஓலா நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

🔷சுமார் 330 மில்லியன் அமெரிக்க டாலர்களை கொண்டு இந்த தொழிற்சாலை நிறுவப்பட உள்ளது. இந்த முயற்சி கைகூடினால் ஸ்கூட்டருக்கு அடுத்தபடியாக கார்களை உருவாக்கவும் ஓலா திட்டமிட்டு வருகிறது.

🔷இந்த திட்டம் கைகூடினால் உலகில் விற்பனையாகும் இ-ஸ்கூட்டர்களில் 15 சதவிகிதம் இங்கிருந்துதான் உற்பத்தி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அறிவியல் தொழில்நுட்பம்

இஸ்ரோ தயாரிப்பில் அதி நவீன ரேடார் !!

🔷இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ, பூமியின் மேற்பகுதியை மிகத் துல்லியமாக படம் பிடிக்கும் திறன் உள்ள, 'எஸ்.ஏ.ஆர்., ரேடார்' சாதனத்தை தயாரித்துள்ளது.

🔷இஸ்ரோ, அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான, நாசாவுடன் இணைந்து, முதன் முறையாக, 'நிசார்' என்ற செயற்கைகோளை, அடுத்த ஆண்டு விண்ணில் செலுத்த உள்ளது.

🔷இதில், முதன் முறையாக, வெவ்வேறு அலைவரிசை திறன் உள்ள, 'எல் பேண்டு மற்றும் எஸ் பேண்டு' ரேடார்கள் பொருத்தப்பட உள்ளன.

🔷இத்திட்டத்தில், செயற்கைகோளை விண்ணில் செலுத்துவதற்கான, ராக்கெட், எஸ் பேண்டு எஸ்.ஏ.ஆர். ரேடார் ஆகியவற்றை, இஸ்ரோ வழங்கும். அறிவியல் சார்ந்த தகவல்களை சேகரிப்பதற்கான, எல் பேண்டு எஸ்.ஏ.ஆர் ரேடார், இருப்பிடத்தை அறிய உதவும், ஜி.பி.எஸ்., ரிசீவர் ஆகியவற்றை, நாசா தயாரித்து அளிக்கும்.

🔷இந்நிலையில், இஸ்ரோ தயாரித்த, எஸ்.ஏ.ஆர்., ரேடாரை, அமெரிக்காவிற்கு அனுப்பி வைக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில், இஸ்ரோ தலைவர், கே. சிவன், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக பங்கேற்று, கொடியசைத்து, ரேடார் சாதனத்தை அமெரிக்காவுக்கு அனுப்பி வைத்தார்.

🔷இந்த ரேடார் சாதனத்தை, நாசா, அதன் ரேடார் சாதனத்துடன் பொருத்தி, மீண்டும் இந்தியாவுக்கு அனுப்பும். இதைத் தொடர்ந்து, அடுத்த ஆண்டு, ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து, ராக்கெட் வாயிலாக, நிசார் செயற்கைகோள் விண்ணில் செலுத்தப்படும்.

ஒப்பந்தங்கள் / புரிந்துணர்வு ஒப்பந்தம்(MoU)

விவசாயத்துறை அமைச்சகம் ஜவுளிகள் துறை அமைச்சகத்துடன் ஒப்பந்தம் !!

🔷மத்திய விவசாயத்துறை அமைச்சகம் மற்றும் ஜவுளிகளத்தூரை அமைச்சகத்துடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. நாட்டில் பட்டு வளர்ப்பு நடவடிக்கைகளை விரிவுபடுத்துவதற்காக இந்த ஒப்பந்தம் கையெழுத்திட்டுள்ளது.

🔷பட்டு வளர்ப்பில் மரம் சார்ந்த வேளாண்-வனவியல் மாதிரிகளை நிறுவுதல் மற்றும் கிருஷி விஜியன் கேந்திரங்கள் மூலம் பட்டு வளர்ப்பு நடவடிக்கைகளை ஆராய்வதே இந்த ஒப்பந்தத்தின் நோக்கம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

🔷இந்த நிகழ்வின் ஒரு பகுதியாக மத்திய ஜவுளிகள்துறை அமைச்சர் ஸ்மிரிதி ராணி சர்வதேச பெண்கள் தினத்தினை முன்னிட்டு பெண்கள் பட்டு விற்பனையாளர்களுக்கு புனியாட் ரீலிங் இயந்திரங்களை வழங்கினார்.

🔷பட்டு இயந்திரத்தில் தொடர்ந்து வேலை பார்ப்பதன் மூலம் ஏற்படும் கால் வலியினை போக்க இந்த இயந்திரம் உதவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

திட்டங்கள்

பெண்களை ஊக்குவிக்க ரூ.14 கோடி நிதியுதவி திட்டம் !!

🔷இந்திய தொழில்நுட்ப கழகம் (ஐ.ஐ.டி-மெட்ராஸ்) அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் பெண்களின் பங்களிப்பை உயர்த்தும் புதுதிட்டத்தை சர்வதேச பெண்கள் தினத்தில் துவக்கியுள்ளது.

🔷“பெண்கள் முன்னணி வகிக்கும் ஐஐடிஎம்” என்ற திட்டத்தின் கீழ் சென்னை ஐஐடியில் பெண்களின்  திறமையை ஊக்குவிப்பதை நோக்கமாக கொண்டுள்ளது.

🔷மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் உத்தரவின்படியும் ஐ.ஐ.டி-களின் பாலின விகிதத்தை மேம்படுத்துவதற்கும், ஐ.ஐ.டி-களின் பெண்களுக்கென 800 இடங்கள் கூடுதலாக உருவாக்கப்பட்டுள்ளன.

விருதுகள்

பிப்ரவரி மாதத்தின் சிறந்த வீரா் விருது வென்றாா் ரவிச்சந்திரன் அஸ்வின் !!

🔷ஐசிசியின் பிப்ரவரி மாதத்துக்கான சிறந்த கிரிக்கெட் வீரா் விருதை இந்திய சுழற்பந்துவீச்சாளா் ரவிச்சந்திரன் அஸ்வின் வென்றுள்ளாா். அதேபோல் இங்கிலாந்தின் டேமி பியூமௌன்ட் சிறந்த வீராங்கனை விருது பெற்றாா்.

🔷ஐசிசி வெளியிட்ட அறிக்கையின்படி, இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதிபெற உதவுவதாக இருந்த, இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அஸ்வினின் அபாரமான பந்துவீச்சு காரணமாக அவா் இந்த விருதுக்கு தோ்வாகியுள்ளாா்.

🔷அஸ்வினுடன் இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட், மேற்கிந்தியத் தீவுகள் வீரா் கைல் மேயா்ஸ் ஆகியோா் இந்த விருதுக்காக போட்டியில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

🔷சிறந்த வீராங்கனையாக தோ்வாகியுள்ள டேமி பியூமௌன்ட், பிப்ரவரியில் நடைபெற்ற நியூஸிலாந்துக்கு எதிரான 3 ஒருநாள் ஆட்டங்களில் ஒவ்வொன்றிலுமே அரைசதம் கடந்தாா். அந்தத் தொடரில் மொத்தமாக 231 ரன்கள் அடித்தாா்.

🔷முன்னதாக, ஜனவரி மாதத்தில் ஐசிசியின் சிறந்த வீரா் விருதை, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் சிறப்பாகச் செயல்பட்ட ரிஷப் பந்த் வென்றிருந்தாா். தற்போது பிப்ரவரி மாத விருதை அஸ்வின் கைப்பற்றியுள்ளாா்.


Share Tweet Send
0 Comments
Loading...