தினசரி நடப்பு நிகழ்வுகள் 8.4.2021 (Daily Current Affairs)

தினசரி நடப்பு நிகழ்வுகள் 8.4.2021 (Daily Current Affairs)

உலகம்

உலகிலேயே மிகப்பெரிய அதிவேக நெடுஞ்சாலை வலையமைப்பை உருவாக்கி சீனா சாதனை..!!

🔷சீனாவின் அதிவேக நெடுஞ்சாலைகளின் மேம்பாட்டை விளக்கும் விதமாக Along China's Expressways என்ற பெயரில் சீன மத்திய தொலைக்காட்சி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.

🔷நாடு முழுவதும் உள்ள அதிவேக நெடுஞ்சாலைகளின் வளர்ச்சி மற்றும் சாதனைகளை விளக்கும் விதமாக இந்த வீடியோ அமைந்துள்ளது.

🔷கடந்த 40 ஆண்டுகளில் நாடு முழுவதும் ஒரு லட்சத்து 60 ஆயிரம் கிலோமீட்டர் தொலைவுக்கு உலகிலேயே மிகவும் மிகப்பெரிய அதிவேக நெடுஞ்சாலை வலையமைப்பை உருவாக்கி சீனா சாதனை படைத்துள்ளது.

இந்தியா

5 லட்சம் மதிப்பிலான சுகாதாரக் காப்பீடு வழங்கும் முதல் மாநிலம்..!!

🔷மாநிலத்தின் அனைத்துக் குடிமக்களுக்கும் இலவச சுகாதாரக் காப்பீட்டு வசதியினை வழங்கும் முதல் மாநிலமாக இராஜஸ்தான் மாறியுள்ளது.

🔷இத்திட்டம் 2021-22 - ஆம் ஆண்டு மாநில நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

🔷இராஜஸ்தான் மாநிலமானது கட்டணமற்றக் காப்பீட்டுத் திட்டமான Mediclaim எனப்படும் சிரஞ்சீவி சுகாதாரத் திட்டம் என்ற திட்டத்திற்கான பதிவினைத் தொடங்கி உள்ளது.

🔷இத்திட்டத்தின் கீழ், ஒவ்வொரு குடும்பமும் ரூ.5 லட்சம் வரையிலான அளவிற்கு வருடாந்திர சுகாதாரக் காப்பீட்டினைப் பெறுவர்.

பண்ணை சார்ந்த சூரிய சக்தி நிலையத்தை அமைக்கும் முதல் மாநிலம்..!!

🔷இராஜஸ்தான் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனமானது (RRECL - Rajasthan Renewable Energy Corporation Ltd) இராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் உள்ள கோட்புத்லி பகுதியின் பலோஜி கிராமத்தில் இந்தியாவின் முதல் பண்ணை சார்ந்த சூரிய சக்தி நிலையத்தை அமைத்துள்ளது.

🔷இது PM-KUSUM (Pradhan Mantri – Kisan Urja Suraksha Evam Utthan Mahabhiyan) என்ற திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ளது.

🔷இத்திட்டம் 2019 - ஆம் ஆண்டில் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் அமைச்சகத்தால் தொடங்கப்பட்டது. இது 2022 - ஆம் ஆண்டிற்குள் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கும் முயற்சிகளுள் ஒன்றாகும்.

🔷இத்திட்டம் நிதி மற்றும் நீர் ஆகியவற்றைத் தொடர்ந்து வழங்குவதனை நோக்கமாக கொண்டு தொடங்கப்பட்டது.

விளையாட்டு

ஒலிம்பிக் திட்டத்தில் சானியா மிர்சா சேர்ப்பு

🔷ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்ல வாய்ப்புள்ள வீரர், வீராங்கனைகளை தேர்வு செய்து அவர்களது பயிற்சி உள்ளிட்ட செலவுகளுக்கு மத்திய விளையாட்டு அமைச்சகம் உதவி அளித்து வருகிறது.

🔷கடைசியாக 2017 - ம் ஆண்டு இந்த திட்டத்தில் இடம் பிடித்து இருந்த இந்திய டென்னிஸ் நட்சத்திரம் சானியா மிர்சா காயம் காரணமாக அதில் இருந்து விலகினார். இந்த நிலையில் 34 வயதான சானியா மிர்சா மீண்டும் ஒலிம்பிக் பதக்க வாய்ப்புள்ள வீராங்கனைகளுக்கான சிறப்பு திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளார்.

🔷இந்த தகவலை இந்திய விளையாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது. குழந்தை பெற்றுக்கொண்டதால் சானியா மிர்சா 2 ஆண்டுக்கு மேலாக விளையாடாவிட்டாலும், டென்னிஸ் சங்கத்தின் சிறப்பு திட்டத்தின் கீழ் அவரது தரவரிசை பாதுகாக்கப்பட்டதால் ஏற்கனவே டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்று இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆசிய சாம்பியன்ஷிப் குத்துச்சண்டை போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது..!!

🔷புது டில்லியில் மே மாதம் நடைபெறவுள்ள ஆசிய சாம்பியன்ஷிப் குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்பதற்காக மேரி கோம் உள்ளிட்ட வீராங்கனைகள் அடங்கிய இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

🔷மே 21 முதல் 31 வரை நடைபெற்றவுள்ள இந்தப் போட்டியில் மோனிகா (48 கிலோ), மேரி கோம் (51 கிலோ), சாக்ஷி (54 கிலோ), ஜேஸ்மின் (57 கிலோ), சிம்ரன்ஜித் கௌா் (60 கிலோ), பவிலாவ் பசுமதாரி (64 கிலோ), லோவ்லினா போா்கோஹெய்ன் (69 கிலோ), பூஜா ராணி (75 கிலோ), சவீதி பூரா (81 கிலோ) அனுபமா (81 கிலோவுக்கு மேல்) ஆகியோா் பங்கேற்கின்றனா்.

🔷இதில், ஆசிய போட்டியில் 6 முறை பதக்கம் வென்றுள்ள மேரி கோம், உலக சாம்பியன்ஷிப்பில் இரு பதக்கம் வென்றவரான லோவ்லினா போா்கோஹெய்ன், சிம்ரன்ஜித் கௌா், பூஜா ராணி ஆகியோா் ஏற்கெனவே ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிபெற்றவா்களாவா்.

பாய்மரப் படகுப்போட்டி - முதல் முறையாக பெண் உள்பட 4 இந்தியா்கள் ஒலிம்பிக்கிற்கு தகுதி..!!

🔷இந்தியாவைச் சோ்ந்த பாய்மரப் படகுப் போட்டியாளா்கள் 4 போ் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிபெற்றுள்ளனா்.

🔷ஓமனில் நடைபெற்ற ஆசிய தகுதிச்சுற்றுப் போட்டியில் கலந்துகொண்ட இந்தியாவின் விஷ்ணு சரவணன், நேத்ரா குமனன் ஆகியோா் தனிநபா் பிரிவிலும், கணபதி செங்கப்பா - வருண் தக்காா் இணை பிரிவிலும் டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்கத் தகுதிபெற்றனா்.

🔷பாய்மரப் படகுப் பிரிவில் 4 இந்தியா்கள் ஒலிம்பிக்கிற்கு தகுதிபெறுவது இது முதல் முறையாகும். அதிலும் நேத்ரா, ஒலிம்பிக்கில் கலந்துகொள்ளும் முதல் இந்திய பாய்மரப் படகு வீராங்கனை என்ற பெருமையை பெற்றுள்ளாா்.

🔷ஒலிம்பிக் பாய்மரப் படகுப் போட்டியில் இந்தியா 3 பிரிவுகளில் பங்கேற்பதும் இதுவே முதல் முறையாகும். விஷ்ணு லேசா் ஸ்டான்டா்ட் கிளாஸ் பிரிவிலும், நேத்ரா லேசா் ரேடியல் பிரிவிலும், கணபதி-வருண் இணை 49 இஆா் கிளாஸ் பிரிவிலும் டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்க இருக்கின்றனா்.

🔷ஒலிம்பிக்கிற்கு தகுதிபெற்று இந்த நால்வருக்கும் மத்திய விளையாட்டுத் துறை அமைச்சா் கிரன் ரிஜிஜு வாழ்த்து தெரிவித்துள்ளாா். இதற்கு முன் ஒலிம்பிக் பாய்மரப் படகுப் போட்டியில் ஒரே பிரிவில் 2 போட்டியாளா்கள் 4 முறை பங்கேற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

🔷ஃபரூக் தராபோா் மற்றும் துருவ் பந்தாரி ஆகியோா் 470 கிளாஸ் பிரிவில் 1984 ஒலிம்பிக்கில் பங்கேற்றனா். ஃபரூக் தராபோா் மற்றும் கெல்லி ராவ் அதே பிரிவில் 1988 ஒலிம்பிக்கில் கலந்துகொண்டனா். மீண்டும் தராபோா், சைரஸ் காமா ஆகியோா் அதே பிரிவில் 1992 ஒலிம்பிக்கில் விளையாடினா்.

🔷மலாவ் ஷ்ராஃப், சுமீத் படேல் ஆகியோா் 2004 ஓலிம்பிக்கில் கலந்துகொண்டனா்.

நியமனங்கள்

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் – புதிய துணைவேந்தர் நியமனம்..!!

🔷தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைக்கழக புதிய துணைவேந்தராக பேராசிரியர் கே.என். செல்வகுமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

🔷இவர் கால்நடை மருத்துவ பல்கலைக்கழகத்தில் 32 ஆண்டுகளாக மூத்த பேராசிரியராக பணியாற்றிய அனுபவம் உள்ளவர் எனத் தெரிவித்துள்ளனர்.

🔷தமிழக ஆளுநரால் நியமிக்கப்பட்ட இவர், அடுத்த 3 ஆண்டுகளுக்கு துணைவேந்தராக செயல்படவுள்ளார்.

வருவாய் துறை செயலராக தருண் பஜாஜ் நியமனம் - பொருளாதார விவகாரத் துறை செயலரானார் அஜய் சேத்..!!

🔷பொருளாதார விவகாரத் துறைச் செயலர் பொறுப்பை வகித்து வந்த தருண் பஜாத் தற்போது வருவாய் துறைச் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

🔷வருவாய் துறை செயலராக இருந்த அஜய் பூஷண் பாண்டேகடந்த பிப்ரவரி மாதம் ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து அப்பொறுப்பை கூடுதலாக தருண் பஜாஜ் கவனித்து வந்தார்.

🔷புதிய பதவி மாற்றத்துக்கு மத்திய பணியாளர் நியமனத்துக்கான அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இதன்படி கர்நாடக பிரிவிலிருந்து 1987 - ம் ஆண்டு ஐஏஎஸ் ஆன அஜய் சேத், புதிய பொருளாதார விவகாரத் துறை செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

🔷இவர் பெங்களூரு மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் லிமிடெட்(பிஎம்ஆர்சிஎல்) நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பொறுப்பைவகித்து வருகிறார். இவரதுஅனுபவத் திறன் நிதி அமைச்சகத்துக்குத் தேவைப்படுவதால் கர்நாடக மாநிலத்திலிருந்து தற்போது இவர் நிதி அமைச்சகத்துக்கு மாற்றப்பட்டுள்ளார்.

சாதனைகள்

வேகமாக சைக்கிள் ஓட்டுவதில் கின்னஸ் சாதனை படைத்த ராணுவ அதிகாரி..!!

🔷இந்திய ராணுவத்தில் லெப்டினன்ட் கர்னலாக பணியாற்றி வருபவர் பாரத் பன்னு. சைக்கிள் ஓட்டுவதில் ஆர்வமும், திறமையும் மிக்க இவர் சைக்கிள் ஓட்டுவதில் பல்வேறு சாதனைகளையும் படைத்துள்ளார். இதில் கடந்த அக்டோபர் மாதத்தில் 2 கின்னஸ் சாதனைகளையும் படைத்து பாராட்டுகளை பெற்றுள்ளார். அந்தவகையில் லே முதல் மணாலி வரையிலான 472 கி.மீ. தொலைவை கடந்த அக்டோபர் 10 - ந்தேதி வெறும் 35 மணி 25 நிமிடங்களில் கடந்து உள்ளார்.

🔷இதைத்தொடர்ந்து டெல்லி, மும்பை, சென்னை, கொல்கத்தா ஆகிய நகரங்களை இணைக்கும் தங்க நாற்கர பாதையை வெற்றிகரமாக கடந்திருக்கிறார். இந்த 5,942 கி.மீ. தொலைவை 14 நாட்கள் 23 மணி மற்றும் 52 நிமிடங்களில் பாரத் பன்னு தாண்டியுள்ளார். இந்தியா கேட் பகுதியில் அக்டோபர் 16 - ந்தேதி தொடங்கி 30 - ந்தேதி அதே இடத்தில் முடித்துள்ளார்.

🔷இந்த இரண்டு நிகழ்வுகளையும் புதிய சாதனையாக கின்னஸ் நிறுவனம் அங்கீகரித்து உள்ளது. இதற்கான சான்றிதழ்களையும் பாரத் பன்னுவுக்கு வழங்கியிருக்கிறது.

🔷இவ்வாறு 2 கின்னஸ் சாதனை படைத்த ராணுவ அதிகாரி பாரத் பன்னுவை சக அதிகாரிகள் மற்றும் வீரர்கள் பாராட்டியுள்ளனர்.


Share Tweet Send
0 Comments
Loading...