தினசரி நடப்பு நிகழ்வுகள் 8.3.2021 (Daily Current Affairs)

தினசரி நடப்பு நிகழ்வுகள் 8.3.2021 (Daily Current Affairs)

உலகம்

இலங்கை பாரதிய ஜனதா கட்சி !!

🔷இலங்கை பாரதிய ஜனதா கட்சி என்ற புதிய அரசியல் கட்சி  இலங்கையின்  யாழ்ப்பாணத்தில் தொடங்கப்பட்டுள்ளது.

🔷இலங்கையில் தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும்  நோக்கில் தொடங்கப்பட்ட இந்த கட்சிக்கும் இந்தியாவில் இயங்கும் பாரதிய ஜனதா கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என அதன் தலைவர் வி.முத்துசாமி  தெரிவித்துள்ளார்.

தில்லி விவசாயிகள் போராட்டத்தை அட்டைப்படமாக வெளியிட்ட அமெரிக்காவின் டைம் இதழ் !!

🔷தில்லியில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக நடந்து வரும் விவசாயிகள் போராட்டத்தில் பங்குபெற்ற பெண்களின் படத்தை பிரபல அமெரிக்க இதழான டைம் அட்டைப்படமாக வெளியிட்டுள்ளது.

🔷மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக கடந்த 98 நாள்களாக தில்லியில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்திற்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

🔷இந்நிலையில் பிரபல அமெரிக்க இதழான டைம் பத்திரிகையின் மார்ச் மாதத்திற்கான இதழின் அட்டைப்படத்தில் தில்லி திக்ரி எல்லையில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பெண்களின் படம் இடம்பெற்றுள்ளது.

🔷விவசாயிகள் போராட்டத்தின் முன்னணி வீரர்கள் என குறிப்பிடப்பட்டு இந்தப் படம் வெளியாகியுள்ளது. போராட்டத்தில் பெண்கள் பங்குபெற வேண்டாம் என்கிற உச்சநீதிமன்றத்தின் பரிந்துரையையும் மீறி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பெண்களைக் குறித்து டைம் இதழ் இந்த அட்டைப்படத்தை வெளியிட்டுள்ளது.

இந்தியா

ரயில்வேயில் அனைத்து புகார்களுக்கும் ஒரே தொலைபேசி எண் !!

🔷ரயில்வே பயணிகள் பயணத்தின்போது தங்கள் குறைகளை தெரிவிப்பதற்கும், விசாரணைக்கும் பல தொலைபேசி எண்களில் பேசவேண்டியுள்ள அசவுகரியத்தை தவிர்க்கும் வகையில், அனைத்து தொலைபேசி உதவி எண்களும் ‘139’ என்ற ஒற்றை எண்ணில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் உடனுக்குடன் குறைகளை தீர்த்துக்கொள்ள முடியும், தேவையான தகவலைப் பெற இயலும்.

🔷இந்த 139 தொலைபேசி சேவை, 12 மொழிகளில் கிடைக்கும். இதில் ரெயில் பயணிகள், ஐ.வி.ஆர்.எஸ். எனப்படும் பதிவு செய்யப்பட்ட குரல்வழி சேவையை பயன்படுத்தலாம். அல்லது நட்சத்திரக்குறியை (ஆஸ்டெரிஸ்க்) அழுத்துவதன் மூலம், ரெயில்வே கால் சென்டர் அலுவலரை நேரடியாக தொடர்புகொண்டு தகவல் பெறலாம்.

🔷இந்த தொலைபேசி உதவி எண்ணை அழைக்க ஸ்மார்ட்போன்தான் வேண்டும் என்பதில்லை, அனைத்து போன்களிலும் பயன்படுத்தலாம்.

🔷139 தொலைபேசி உதவி எண்ணில், எந்தெந்த சேவைக்கு எந்தெந்த எண்களை அழுத்த வேண்டும் என்ற விவரமும் வெளியிடப்பட்டுள்ளது.

🔷இந்த ஒருங்கிணைந்த தொலைபேசி உதவி எண்ணை பிரபலப்படுத்த, ‘ஒரே ரெயில், ஒரே தொலைபேசி உதவி எண் 139’ என்ற சமூக ஊடக பிரசாரத்தையும் ரயில்வே அமைச்சகம் தொடங்கியுள்ளது.

தரவரிசை

பொருளாதார சுதந்திர குறியீடு 2021 !!

🔷”பொருளாதார சுதந்திர குறியீடு 2021” (Economic Freedom Index 2021)-ல்  முதல் ஐந்து இடங்களை முறையே சிங்கப்பூர், நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, சுவிட்சர்லாந்து மற்றும் அயர்லாந்து நாடுகள் பெற்றுள்ளன.

🔷அமெரிக்காவைச் சேர்ந்த ‘Heritage Foundation’ எனும் நிறுவனத்தினால் வெளியிடப்பட்டுள்ள இந்த பொருளாதார சுதந்திர குறியீட்டில் இந்தியா 121 இடத்தைப் பெற்றுள்ளது.

நியமனங்கள்

ஆசியா - பசுபிக் ஊரக வேலாண்மை கடன் சங்கத்தின் தலைவராக ஜி.ஆர்.சிந்தாலா  நியமனம் !!

🔷ஆசியா - பசுபிக் ஊரக வேலாண்மை கடன் சங்கத்தின் (Asia Pacific Rural and Agricultural Credit Association(APRACA))  தலைவராக, இந்தியாவின் நபார்டு (NABARD) அமைப்பின்  தலைவர்  ஜி.ஆர்.சிந்தாலா  (G R Chintala) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

🔷1977-ல் தொடங்கப்பட்ட பசுபிக் ஊரக வேலாண்மை கடன் சங்கத்தின் தலைமையிடம்  தாய்லாந்தின் பாங்காக் நகரில் உள்ளது.

🔷இவ்வமைப்பில் தற்போது  24 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளனர்.

அமெரிக்க ஜனாதிபதியின் சிறப்பு உதவியாளர்கள் நியமனம்!!

🔷அமெரிக்கா ஜனாதிபதி ஜோ பைடனின் குற்றவியல்துறையின் சிறப்பு உதவியாளர்களாக இந்திய வம்சாவளியினை சேர்ந்த சிராக் பெயின்ஸ் & ப்ரோனிதா குப்தா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

🔷கொரோனா காலத்திற்காக கூடுதல் உதவிக்காக 20 பேர் பணியமிக்கப்பட்டதை அடுத்து, இவர்கள் இருவரும் தற்சமயம் நியமிக்கப்பட்டுள்ளனர்.

🔷ஜோ பைடன் தலைமையிலான அரசு தற்போது வரை இந்திய வம்சாவளியினை சேர்ந்த 55 நபர்களை வெவ்வேறு துறைகளில் நியமித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நியூயார்க் பெடரல் ரிசர்வ் வங்கியின் புதிய துணை தலைவராக நியமனம் !!

🔷நியூயார்க் பெடரல் ரிசர்வ் வங்கியின் இந்திய நிறுவனம் தனது துணை தலைவர் மற்றும் முதன்மை அலுவலராக நவரின் ஹாசன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் நிதித்துறையினை கவனித்து கொள்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

🔷பெடரல் ரிசர்வ் வங்கியின் தலைவர்கள் குழுமம் இவரது நியமனத்தை உறுதி செய்துள்ளது. இவரது பதவிக்காலம் வரும் மார்ச் 15 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

🔷நாவூரின் ஹாசன் தற்போது Morgan Stanley Wealth Management நிறுவனத்தில் தலைமை அதிகாரியாக செயல்பட்டு வருகிறார்.

பங்களாதேஷ் நாட்டில் செய்திமைப்பாளராக முதல் திருநங்கை நியமனம் !!

🔷பங்களாதேஷ் நாட்டில் செய்தி வாசிப்பாளராக ஒரு திருநங்கை நியமிக்கப்பட்டுள்ளார்.

🔷ஒரு தனியார் தொலைக்காட்சி நிறுவனம் அவரை நியமித்துள்ளது.

🔷உலக மகளிர் தினத்தினை முன்னிட்டு தாஷ்னுவ அனன் ஷிஷிர் என்ற அந்த திருநங்கை இன்று முதல் செய்திகளை வாசிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

🔷இவர் மட்டுமின்றி அந்த தனியார் தொலைக்காட்சி நிறுவனம் நுஸ்ரத் மா என்ற இன்னொரு திருநங்கையினையும் பொழுதுபோக்கு செய்திகளை வாசிக்கும் செய்தி வாசிப்பாளராக நியமித்துள்ளது.

அறிவியல் தொழில்நுட்பம்

ஜிஐசாட் 1 செயற்கைகோள் !!

🔷ஜிஎஸ்எல்வி F 10 ராக்கெட் மூலம் ஜிஐசாட் 1 செயற்கைகோளுடன் மார்ச் மாதத்தின் இறுதியில் விண்ணில் ஏவப்படவுள்ளது.

🔷புவி கண்காணிப்பு மற்றும் பேரிடர் மேலாண்மை மற்றும் மீட்பு பணிகளுக்காக இந்த செயற்கைகோள் விண்ணில் ஏவப்படவுள்ளது.

🔷இந்த செயற்கோள் இந்தியாவின் இஸ்ரோவில் இருந்து விண்ணில் பாயும் என்றும் விஞ்ஞானிகள் அதற்கான பணிகளில் தீவிரமாக இறங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

🔷ஜிஐசாட் 1 2,262 கிலோ எடை கொண்டது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த செயற்கைகோளில் உள்ள 5 விதமான கேமரா மூலமாக மற்றும் தொலைநோக்கி மூலமாக புவிப்பரப்பை துல்லியமாக பார்க்க முடியும்.


Share Tweet Send
0 Comments
Loading...