தினசரி நடப்பு நிகழ்வுகள் 7.4.2021 (Daily Current Affairs)

தினசரி நடப்பு நிகழ்வுகள் 7.4.2021 (Daily Current Affairs)

உலகம்

ஈரான் அணுசக்தி ஒப்பந்தம் !!

⚡ஈரான் அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக ஆஸ்திரியா தலைநகர் வியன்னாவில் நடைபெறும் பேச்சுவார்த்தையில் இங்கிலாந்து, சீனா, ரஷியா, ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் நாடுகளுடன் அமெரிக்காவும் இணைந்து உள்ளது.

⚡முன்னதாக, அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப்    ஈரானின் அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து விலகுவதாக கடந்த 2018-ம் ஆண்டு அறிவித்த நிலையில், தற்போதைய அதிபர் ஜோ பிடன் அந்த ஒப்பந்தத்தில் மீண்டும் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

⚡ஈரானுக்கும் அமெரிக்கா உள்ளிட்ட 6 வல்லரசு நாடுகளுக்கும் இடையே கடந்த 2015-ம் ஆண்டு அணுசக்தி ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

⚡அந்த ஒப்பந்தத்தில், தங்களது அணுசக்தி திட்டங்கள் அணு ஆயுதம் தயாரிப்பதற்கானவை இல்லை என்பதை உறுதி செய்ய ஈரான் ஒப்புக்கொண்டது. அதற்குப் பதிலாக அந்த நாட்டின் மீதான பொருளாதார தடைகளைத் தளா்த்த வல்லரசு நாடுகள் ஒப்புக்கொண்டன.

இந்தியா

டிஜிட்டல் நோய் கண்காணிப்பு முறை !!

⚡இந்தியாவில் நோய் கண்காணிப்புக்கான ஒருங்கிணைந்த டிஜிட்டல் தளமான ஒருங்கிணைந்த சுகாதார தகவல் தளத்தை (Integrated Health Information Platform (IHIP)) மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் தொடங்கி வைத்தார்.

⚡இதன் மூலம், மேம்பட்ட டிஜிட்டல் நோய் கண்காணிப்பு முறையை (Advanced Digital Disease Surveillance System) அமல்படுத்தியுள்ள  உலகின் முதல் நாடாக இந்தியா உருவாகியுள்ளது.

நியமனங்கள்

தென் மண்டல தேசிய பசுமைத் தீா்ப்பாயத்தின் நிபுணத்துவ உறுப்பினராக கிரிஜா வைத்தியநாதன் நியமனம் !!

⚡தென் மண்டல தேசிய பசுமைத் தீா்ப்பாயத்தின் நிபுணத்துவ உறுப்பினராக, தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலா் கிரிஜா வைத்தியநாதன் நியமிக்கப்பட்டுள்ளார்.

⚡சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்த வழக்குகளை விசாரிக்க, தில்லியில் தேசிய பசுமைத் தீா்ப்பாய முதன்மை அமா்வு உருவாக்கப்பட்டது. அதன் தொடா்ச்சியாக சென்னை, கொல்கத்தா, புணே, போபால் ஆகிய இடங்களிலும் தீா்ப்பாயத்தின் மண்டல அமா்வுகள் தொடங்கப்பட்டுள்ளன.

கொசோவா நாட்டின் அதிபர் நியமனம் !!

⚡கொசோவா (Kosovo) நாட்டின் அதிபராக விஜோசா ஓஸ்மானி சத்ரியு (Vjosa Osmani-Sadriu) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

⚡நாட்டின் இளைய அரச தலைவராகவும், உலகின் மிக இளவயது அதிபராகவும் திகழ்கிறார்.

விளையாட்டு

டோக்கியோ ஒலிம்பிக்கில் இன்னொரு தமிழ்ப் பெண்! !!

⚡இந்த ஆண்டு ஜூலை மாதம் தொடங்கவிருக்கும் டோக்கியோ ஒலிம்பிக் தொடருக்கு தமிழகத்தைச் சேர்ந்த படகோட்டுதல் வீராங்கனை நேத்ரா குமனன் தேர்வாகியிருக்கிறார். 23 வயதான நேத்ராதான் இந்தியா சார்பாக படகோட்டுதலில் பங்கேற்கப்போகும் முதல் பெண்!

⚡தமிழகத்தில் இருந்து இதுவரை 4 பேர் பங்கேற்பது உறுதியாகியிருக்கிறது. டேபிள் டென்னிஸ் வீரர்கள் ஷரத் கமல், சத்யன் ஞானசேகரன், வாள்சண்டை வீராங்கனை பவானிதேவி, துப்பாக்கி சுடுதல் வீராங்கனை இளவேனில் வாலறிவன் ஆகியோர் இதுவரை தங்கள் இடத்தை உறுதி செய்திருக்கின்றனர்.

⚡இதில் பவானி தேவி, வாள்சண்டையில் இந்தியா சார்பில் ஒலிம்பிக்கில் பங்கேற்கும் முதல் வீராங்கனை என்ற சாதனையைப் படைத்தார்.

⚡படகோட்டுதல் வீராங்கனையான நேத்ரா ‘Laser Radial' எனப்படும் பிரிவில் ஒலிம்பிக் தொடருக்குத் தேர்வாகியிருக்கிறார். இது தனிநபர் போட்டி. இதன்மூலம், படகோட்டுதலில் இந்தியா சார்பாக ஒலிம்பிக்கில் பங்கேற்கும் முதல் பெண் என்ற சாதனையையும் படைத்திருக்கிறார் நேத்ரா குமனன்.

⚡மியாமியில் நடந்த உலகக் கோப்பையில் வெண்கலம் வென்று, உலகக் கோப்பைப் படகோட்டுதலில் பதக்கம் வென்ற முதல் இந்தியப் பெண் என்ற சாதனையையும் படைத்தார்.

தரவரிசை

உலக அளவில் அதிக கோடீசுவரர்கள் எண்ணிக்கையில் 3-வது இடத்தில் இந்தியா !!

⚡அமெரிக்காவை சேர்ந்த ‘போர்ப்ஸ்’ பத்திரிகை, உலக கோடீசுவரர்கள் பட்டியலை ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. 35-வது ஆண்டாக இப்பட்டியலை வெளியிட்டது.

⚡உலக அளவில் அதிக கோடீசுவரர்கள் எண்ணிக்கையில் இந்தியா 3-வது இடத்தில் உள்ளது.

⚡சீனாவின் ஜாக் மாவை வீழ்த்தி ஆசியா கண்டத்தின் நம்பர் 1 பணக்காரர் என்ற பெயரை மீண்டும் முகேஷ் அம்பானி கைப்பற்றி உள்ளார்.

⚡அதில், 2 ஆயிரத்து 755 பெரும் பணக்காரர்கள் இடம்பெற்றுள்ளனர். இது, கடந்த ஆண்டை விட 660 அதிகம். இப்பட்டியலில், அமெரிக்காவை சேர்ந்த 724 பேரும், சீனாவை சேர்ந்த 698 பேரும், இந்தியாவை சேர்ந்த 140 பேரும் இடம்பெற்றுள்ளனர். அதிகமான பெரும் பணக்காரர்கள் எண்ணிக்கையில் இந்தியா 3-வது இடத்தில் உள்ளது.

⚡உலக பெரும் பணக்காரராக அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ், தொடர்ந்து 4-வது ஆண்டாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவரது சொத்து மதிப்பு 17 ஆயிரத்து 700 கோடி டாலர் (ரூ.12 லட்சத்து 74 ஆயிரத்து 400 கோடி) ஆகும். ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க், 15 ஆயிரத்து 100 கோடி டாலர் சொத்து மதிப்புடன் 2-வது இடத்தில் இருக்கிறார்.

⚡பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பெர்னார்டு அர்னால்ட், அமெரிக்காவின் பில்கேட்ஸ், பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுகர்பெர்க் ஆகியோர் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளனர்.

⚡உலக பணக்காரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி 10-வது இடத்தில் உள்ளார்.

சிறு சேமிப்பு திட்டத்தில் மேற்கு வங்க மாநிலம் முதலிடம் !!

⚡இந்தியாவில் தேசிய அளவில் சிறு சேமிப்பு திட்டத்தில் மேற்கு வங்க மாநிலம் முதலிடத்தை வகிக்கிறது.

⚡மொத்த சிறு சேமிப்பில்  மேற்கு வங்க மாநிலம் மட்டும் 15%  பங்களிக்கிறது.  2,3,4 மற்றும் 5 ஆம் இடங்களை முறையே உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா, குஜராத் மற்றும் தமிழ்நாடு (5வது) ஆகிய மாநிலங்கள் பெற்றுள்ளன.

திட்டங்கள்

விவசாயத்தில் சூரிய மின் திட்டம் !!

⚡PM-KUSUM (Pradhan Mantri-Kisan Urja Suraksha evam Utthan Mahabhiyan) திட்டத்தின் கீழ் பண்ணை அடிப்படையிலான சூரிய மின் திட்டத்தை ஆணையிடும் முதல் மாநிலமாக ராஜஸ்தான் உருவாகியுள்ளது.

⚡மத்திய புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகத்தினால் (New and Renewable Energy (MNRE)) 2019 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட PM-KUSUM திட்டத்தின் முக்கிய நோக்கம் இந்தியாவில் விவசாயத்தில் பெருமளவில் சூரிய சக்தியை பயன்படுத்துவதை ஊக்குவித்தல் மற்றும் 2022 ஆம் ஆண்டிற்குள் 25, 750 MW அளவிற்கு சூரிய ஆற்றல் திறனை விவசாயத்திற்கு பயன்படுத்தலாகும்.


Share Tweet Send
0 Comments
Loading...