தினசரி நடப்பு நிகழ்வுகள் 7.3.2021 ( Daily Current Affairs)

தினசரி நடப்பு நிகழ்வுகள் 7.3.2021 ( Daily Current Affairs)

உலகம்

மக்கள் வீணடிக்கும் உணவின் அளவு குறித்த ஆய்வு முடிவுகள் வெளியீடு !!

🔷கடந்த 2019 ஆம் ஆண்டு உலகத்தில் தோராயமாக 93.1 கோடி டன் உணவு பொருள் வீணடிக்கப்பட்டுள்ளதாக உணவு குறியீடு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

🔷இந்தியாவில் மட்டும் 6.8 கோடி டன் உணவு வீணடிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

🔷ஒவ்வொரு தனி நபரும் ஒரு வருடத்திற்கு 50 கிலோ உணவு பொருளை வீணடிப்பதாக இந்த ஆய்வு முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

🔷மொத்தமாக உலகளவில் வீணடிக்கப்பட்ட 93.1 கோடி டன் உணவினை வைத்து மக்கள் 7 முறை உணவினை அளித்திருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பங்களாதேஷ் அரசு செயலி உருவாக்குபவர்களுக்கு என்று ஒரு தேசிய இணையதளம் !!

🔷பங்களாதேஷ் அரசு ஆன்லைன் வாயிலாக செயலியை உருவாக்குபவர்களுக்கு என்று தனியாக ஒரு தேசிய இணையத்தளத்தினை அறிமுகப்படுத்தியுள்ளது.

🔷அரசு உருவாக்கிய bdapps.com என்ற இணையத்தளம் வாயிலாக செயலிகளை உருவாக்குபவர்கள் தங்களது செயலிகளை அதில் பதிவேற்றலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

🔷இதற்கான ஒப்பந்தம் பங்களாதேஷ் அரசிற்கும் தொலைத்தொடர்பு நிறுவனமான ரோபிக்கும் இடையே சில நாட்களுக்கு முன்பு கையெழுத்திடப்பட்டது.

🔷ICT அமைப்பின் தலைவரான ஜுனைத் அகமது பாலாக் இந்த இணையதளத்தை அறிமுகப்படுத்தினார்.

🔷பங்களாதேஷ் அரசு அறிமுகப்படுத்தியுள்ள மிக பெரிய இணையதளம் இதுவே ஆகும். இதில் தற்போது வரை 43,000 செயலிகளை 12,000 செயலியை உருவாக்குபவர்கள் உருவாக்கி உள்ளனர்.

துபாயில் உலகின் மிகப்பெரிய பேரீச்சை தொழிற்சாலை !!

🔷துபாயில் உலகின் மிகப்பெரிய பேரீச்சை தொழிற்சாலை அடுத்த ஆண்டு திறக்கப்படுகிறது.

🔷இந்த புதிய தொழிற்சாலையின் மூலம் அமீரகத்தில் ஒவ்வொரு ஆண்டும் உற்பத்தி செய்யப்படும் பேரீச்சையின் விளைச்சலானது ஒரு லட்சம் டன்னுக்கும் மேல் அதிகரிக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

🔷6 லட்சம் சதுர அடி பரப்பளவில் உருவாக உள்ள இந்த தொழிற்சாலை சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத வகையில் தனது பணிகளை மேற்கொள்ளும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா

அசுத்தமான பகுதிகள் அதிகம் இருக்கும் மாநிலங்களின் பட்டியல் !!

🔷நம் நாட்டில் நச்சு மற்றும் அபாயகரமான பொருட்களால் 112 இடங்கள் மாசு அடைந்துள்ள பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ன.இதில் அதிகபட்சமாக ஒடிசா மாநிலத்தில் 23 இடங்கள் மிகவும் அசுத்தமாக உள்ளன.

🔷உத்தர பிரதேசத்தில் 21 இடங்கள்; டில்லியில் 11 இடங்களும் மாசு அடைந்துள்ளன.

🔷குஜராத், ஜார்க்கண்ட், கேரளா, மஹாராஷ்டிரா, ஒடிசா, தமிழகம் மற்றும் உத்தர பிரதேசம் உள்ளிட்ட ஏழு மாநிலங்களில் உள்ள மாசு அடைந்துள்ள பகுதிகளை சுத்தம் செய்யும் பணிகள் துவங்கப்பட்டுள்ளன.

உற்பத்தி சார் ஊக்க சலுகை (பிஎல்ஐ) திட்டம் !!

🔷தொழில்துறையின் உற்பத்தியை அதிகரிக்க அரசு அறிவித்துள்ள உற்பத்தி சார் ஊக்க சலுகை (பிஎல்ஐ) திட்டம் குறித்த காணொளி கருத்தரங்கில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார்.

🔷இந்தியாவின் எந்த ஒரு மாநிலத்திலும் சிறிய அளவில் அல்லது பெருநிறுவனங்கள் துவங்கும் தொழிலுக்காக பல உரிமங்கள் பெற வேண்டி உள்ளது. இவை, அப்பகுதி நிர்வாகம், மாநில அரசு மற்றும் மத்திய அரசு என பல எண்ணிக்கையில் தொடரும் நிலை உள்ளது. இதன்மீது இந்திய தேசிய உணவுவிடுதிகள் சங்கம் சார்பில்,எப்.ஒய்20 எனும் பெயரில் ஒரு புள்ளி விவரம் வெளியிடப்பட்டது.

🔷அதில், ஒரு உதாரணமாக டெல்லியில் ஒரு உணவு விடுதிதொடங்க, காவல்துறை, தீயணப்புத்துறை, மத்திய, மாநில அரசுகள்உள்ளிட்ட 45 வகையான உரிமங்கள் பெற வேண்டி இருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.

🔷இதை கவனத்தில் கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, இந்தியாவில் தொழில் துவங்குவதில் உள்ள சிக்கல்கள் களையப்பட்டு எளிமைப்படுத்தப்படும் என அறிவித்துள்ளார்.

விளையாட்டு

சுவிஸ் ஓபன் பேட்மிண்டன் தொடர் !!

🔷2019-ம் ஆண்டு உலக சாம்பியன்ஷிப்புக்கு பிறகு சிந்து இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்று இருப்பது இதுவே முதல்முறையாகும்.

🔷சுவிட்சர்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டி பாசெல் நகரில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் ஸ்பெயின் வீராங்கனை கரோலினா மரின், இந்திய வீராங்கனை பி.வி.சிந்துவை தோற்கடித்து தங்கப் பதக்கம் வென்றார்.

ரோட்டர்டெம் ஓபன் டென்னிஸ் போட்டி !!

🔷நெதர்லாந்தில் நடந்து வரும் ரோட்டர்டெம் ஓபன் டென்னிஸ் போட்டியில் முன்னணி வீரர் ருபிலெவ் சாம்பியன் பட்டம் வென்றார்.

🔷விறுவிறுப்பாக நடந்த இறுதிப் போட்டியில் உலக தரவரிசையில் 8-வது இடத்தில் இருக்கும் ரஷ்ய வீரர் ஆந்த்ரே ருபிலெவ் (Andrey Rublev), ஹங்கேரியாவை சேர்ந்த மார்டன் பக்சோவிக்சை (Marton Fucsovics)  தோற்கடித்து கோப்பையை கைப்பற்றினார்.

தேசிய பாரா நீச்சல் போட்டி 2021 !!

🔷20 வது தேசிய பாரா நீச்சல் போட்டிகள் கர்நாடகா மாநிலத்தில் பெங்களூருவில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

🔷இந்த போட்டிகள் வரும் மார்ச் 20 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.

🔷இந்த போட்டிகளுக்கான பயிற்சியினை கர்நாடகா அரசு வழங்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

ஒப்பந்தங்கள் / புரிந்துணர்வு ஒப்பந்தம்(MoU)

எஃகு ஆலை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் !!

🔷ஒடிஷா மாநில அரசு மற்றும் ஆர்சலர் மிட்டல் நிப்பான் ஸ்டீல் இந்தியா நிறுவனம் 12 மில்லியன் டன் எஃகு ஆலை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடப்பட்டுள்ளது.

🔷இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒடிஷா மாநில முதல்வர் பட்நாயக் தலைமையில் கையெழுத்திடப்பட்டன.

🔷அதே போல் இந்த நிகழ்ச்சியில் ஆர்சலர் மிட்டல் நிர்வாகத் தலைவர் எல்என் மிட்டல் முதன்மைச் செயலாளர் (தொழில்கள்) ஹேமந்த் சர்மா மற்றும் ஏஎம் / என்எஸ் இந்தியாவின் தலைமை நிர்வாக அதிகாரி (தலைமை நிர்வாக அதிகாரி) திலீப் உம்மன் பங்கேற்றனர்.

சாதனைகள்

ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பின்ச் புதிய சாதனை !!

🔷டி-20 போட்டிகளில், 100 சிக்ஸர்களை அடித்த முதல் ஆஸ்திரேலிய வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் அந்த அணியின் கேப்டன் ஆரோன் பின்ச்.

🔷நியூசிலாந்திற்கு எதிரான 4வது டி-20 போட்டியில், 4 சிக்ஸர்களை விளாசியதன் மூலம், இந்த சாதனையை அவர் நிகழ்த்தியுள்ளார்.

🔷மேலும், உலகளவில் இந்த சாதனையை நிகழ்த்தும் 6வது பேட்ஸ்மென் என்ற பெயரையும் பெற்றுள்ளார்.

🔷மேலும், டி-20 கிரிக்கெட்டில் அதிக ரன்களை அடித்த ஆஸ்திரேலிய பேட்ஸ்மென்களின் பட்டியலிலும், டேவிட் வார்னரை பின்னுக்குத் தள்ளி, முதலிடம் பிடித்துள்ளார் ஆரோன் பின்ச்.


Share Tweet Send
0 Comments
Loading...