சாதனைகள்
கின்னஸ் சாதனையில் இடம் பிடித்த உலகின் மிகப்பெரிய மணல் மாளிகை..!
🔷உலகின் மிகப்பெரிய மணல் சிற்பமாக மாளிகை ஒன்று டென்மார்க் நாட்டின் புளோக்குஸ் நகரில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
🔷சுமார் 21 புள்ளி 16 மீட்டர் உயரமுடைய இந்த மணல் மாளிகை முந்தைய கின்னஸ் உலக சாதனையை முறியடித்து புதிய சாதனையாக இடம்பெற்றது. முன்னர் ஜெர்மனியின் மணல்மாளிகை 17 புள்ளி 66 மீட்டர் உயரம் இருந்தது.
🔷சுமார் 4 புள்ளி 8 டன்கள் மணல் பயன்படுத்தப்பட்டது. விழுந்துவிடாமல் இருக்க முக்கோண வடிவில் அமைக்கப்பட்டு மரத்தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. 30 மணல் சிற்பிகள் இதன் மீதான உருவங்களை செதுக்கியுள்ளனர்.
இந்தியா
WAKO இந்தியா கிக் பாக்ஸிங் கூட்டமைப்புக்கு அரசாங்க அங்கீகாரம் கிடைத்துள்ளது..!!
🔷இந்தியாவில் கிக் பாக்ஸிங் விளையாட்டை மேம்படுத்துவதற்கும் மேம்படுத்துவதற்கும் வாகோ (WAKO) இந்தியா கிக் பாக்ஸிங் கூட்டமைப்புக்கு தேசிய விளையாட்டு கூட்டமைப்பு (NSF) என அங்கீகாரம் வழங்க இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
🔷கிக் பாக்ஸிங் விளையாட்டின் அங்கீகாரம் மற்றும் வளர்ச்சிக்கு ஒலிம்பிக் இயக்கத்தில் முழுமையாக சேர்க்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்படுவது முக்கியமாகும்.
நியமனங்கள்
ஆப்கானிஸ்தான் டி20 கேப்டனாக ரஷித் கான் நியமனம்..!!
🔷ஆப்கானிஸ்தான் டி20 அணியின் கேப்டனாக ரஷித் கான் நியமிக்கப்பட்டார்.
🔷2021 டி20 உலகக்கோப்பை தொடரில் இந்தியா, இங்கிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ள பி பிரிவில் ஆப்கானிஸ்தான் இடம்பெற்றுள்ளது. தகுதிச் சுற்றின் அடிப்படையில் மேற்கொண்டு இரண்டு அணிகள் இந்தப் பிரிவில் இடம்பெறவுள்ளன.
🔷இந்த நிலையில் ஆப்கானிஸ்தான் டி20 அணியின் கேப்டனாக ரஷித் கான் நியமிக்கப்பட்டுள்ளார். துணை கேப்டனாக நஜிபுல்லா ஸத்ரான் நியமிக்கப்பட்டுள்ளார்.
🔷ஐசிசி டி20 தரவரிசையில் ரஷித் கான் தற்போது இரண்டாவது இடத்தில் உள்ளார். அவரது அனுபவத்தைக் கருத்தில்கொண்டு டி20 உலகக்கோப்பைக்கு முன்பு அவருக்கு கேப்டன் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
விளையாட்டு
டோக்கியோ ஒலிம்பிக்கில் 5 தமிழக வீரர்கள் - இந்தியாவில் முதல்முறையாக ஒரே மாநிலத்தில் இருந்து 5 பேர் தேர்வு..!!
🔷தமிழகத்தை சேர்ந்த 5 தடகள வீரர் வீராங்கணைகள் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.
🔷டோக்கியோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்கவுள்ள 26 பேர் கொண்ட தடகள அணியை இந்திய தடகள சம்மேளனம் அறிவித்தது. அதில், தமிழகத்தை சேர்ந்த 3 வீராங்கணைகள் உள்ளிட்ட 5 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
🔷ரேவதி வீரமணி, சுபா வெங்கடேசன், தனலட்சுமி சேகர் ஆகியோர் கலப்பு 4400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் கலந்து கொள்ள தேர்வாகியுள்ளனர். ஆரோக்கிய ராஜீவ், நாகநாதன் பாண்டி ஆகியோர் ஆண்களுக்கான 4 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் பங்கேற்க தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
🔷இந்தியாவில் முதல் முறையாக ஒரே மாநிலத்தில் இருந்து தடகள வீரர்கள் 5 பேர் ஒலிம்பிக் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.